News March 6, 2025

தமிழ்நாட்டில் அமானுஷ்ய நடமாட்டம் உள்ள 10 இடங்கள்

image

தமிழ்நாட்டில் இந்த 10 இடங்களில் மர்மமான அலறல்கள், மாய உருவங்கள், விவரிக்க முடியாத உணர்வு, தற்கொலைகள் என அமானுஷ்ய நடமாட்டங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது: *டிமான்ட்டி காலனி *பெசன்ட் கார்டன் *புரோக்கன் பிரிட்ஜ் *வால்மீகி நகர் *பெசன்ட் அவென்யூ ரோட் *ECR சாலை *கரிகாட்டுக் குப்பம் *சென்னை கிறிஸ்தவ கல்லூரி (ஒரு அறை) *புளூகிராஸ் ரோட் *திருவண்ணாமலை ஹாண்டட் ஹவுஸ். உங்கள் ஊரில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கா?

News March 6, 2025

3 பந்தில் 4 விக்கெட்

image

பாக்., வீரர்கள் தற்போது உள்நாட்டு தொடரில் விளையாடுகின்றனர். இதில் PTV அணிக்கு எதிரான போட்டியில் SBP அணியின் ஷாசாத் 3 பந்தில் 4 விக்கெட்டை எடுத்தார். அவர் வீசிய 26 ஓவரின் 3, 4வது பந்தில் PTVயின் உமர் அமீன், ஃபவாத் ஆலம் அவுட் ஆக, 5வது பந்தை எதிர்கொள்ள வந்த சவுத் ஷகீல் 3 நிமிடம் தாமதமாக வந்ததால் Timed Out விதிப்படி பந்தை சந்திக்காமலே அவுட்டானார். அதன்பின் 26.5 பந்தில் முகமது இர்பான் அவுட் ஆனார்.

News March 6, 2025

போர்க்களத்திலும் பூ பூக்கத்தானே செய்கிறது!

image

மேலே காணப்படும் இந்த போட்டோதான் இன்று உலகம் முழுவதும் வைரல். இஸ்ரேலின் தாக்குதலால் தவிடு பொடியான காசா பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு திறந்த நிகழ்வுதான் இது. கட்டட இடிபாடுகளுக்கிடையே நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இப்படியான காட்சிகளைப் பார்க்கும்போது மனம் கனத்துப் போகாமல் என்ன செய்யும்!

News March 6, 2025

இது தலைகுனிவு இல்லையா முதல்வரே? அண்ணாமலை

image

அரசு நிறுவனத்தில் இன்று ED ரெய்டு நடைபெற்று வருகிறது. 2016இல் தலைமைச் செயலகத்தில் ED நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன முதல்வர் அவர்களே என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு தான் இந்த ரெய்டு. வழக்கம்போல் இந்த செய்தியையும் திசை திருப்ப முடியுமா என்று பாருங்கள் என சாடியுள்ளார்.

News March 6, 2025

BREAKING: 14 மீனவர்கள் கைது

image

இலங்கை கடற்படை 14 தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. மன்னார் தெற்கு கடற்பரப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்களின் கைதை தடுக்க கோரிக்கை விடுத்தாலும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

News March 6, 2025

காதலை நிரூபிக்க இப்படியா… சிக்கிய இளசுகள்!

image

காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் காதலியின் சகோதரர் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் காதலை நிரூபிக்க இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். நீங்க காதலுக்காக செஞ்சது என்னன்னு கமெண்ட் பண்ணுங்க!

News March 6, 2025

மீண்டும் கேப்டன் சுனில்

image

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் தேசிய அணிக்காக விளையாட இருக்கிறார். 40 வயதாகும் இவர், கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். இந்நிலையில், அவர் மீண்டும் விளையாடவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், அவர் ஓய்வில் இருந்து திரும்புவதற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

News March 6, 2025

விவசாயிகளுக்கு GOOD NEWS.. கட்டணம் விலக்கு

image

மாநிலம் முழுவதும் மக்காச்சோளத்துக்கு 1% சந்தைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு 1% கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, கட்டணத்தை குறைக்க வேண்டும் என முதல்வரிடம் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

News March 6, 2025

மண்டையை பிளக்கும் வெயில்

image

மாசி மாதம் கூட முடியவில்லை. அதற்குள் தமிழகத்தில் வெயில் பட்டையைக் கிளப்பி வருகிறது. குறிப்பாக, ஈரோடு – 39.2°C, கரூர் பரமத்தி – 39°C, மதுரை விமான நிலையம் – 38.6°C, வேலூர் & திருப்பத்தூர் 38.1°C, சேலம் & திருச்சி 37.8°C, சென்னை – 37.7°C என பதிவாகியிருக்கிறது. இவை அனைத்துமே 100°Fஐ கடந்த வெப்பநிலை ஆகும். பங்குனி, சித்திரை மாதங்களில் வெயில் சக்கை போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 6, 2025

மும்பை மகளிர் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

image

மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரில், மும்பைக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது உ.பி., அணி. லக்னோவில் டாஸ் வென்ற MIW அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய UPWW வீராங்கனைகள், முதலில் அதிரடியாக ஆடினாலும், பிறகு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 150/9 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜியா 55 ரன்கள் எடுத்தார். MIW தரப்பில், அமெலியா 5 விக்கெட் வீழ்த்தினார்.

error: Content is protected !!