News March 7, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 7, 2025

தந்தையின் ஈகோவுக்கு பலியான பிஞ்சுக் குழந்தை!

image

உ.பி.யைச் சேர்ந்த மோகித் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டுக்காரரான ராமு என்பவருக்கும் சமீபத்தில் சண்டை ஏற்பட்டது. ஆனால், மோகித்தின் 5 வயது மகளான தானி, எப்போதும் போல ராமுவின் வீட்டுக்கு சென்று விளையாடி வந்திருக்கிறாள். பலமுறை சொல்லியும் மகள் கேட்காததால் ஆத்திரமடைந்த மோகித், குழந்தை தானியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 4 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். தற்போது மோகித் சிறையில் உள்ளார்.

News March 7, 2025

த்ரிஷாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

image

நடிகை த்ரிஷாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது குறித்த சுவாரஸ்ய தகவலை நடிகர் ராதா ரவி வெளியிட்டுள்ளார். ‘லேசா லேசா’ படத்தில் துணை நடிகைகளில் ஒருவராகத்தான் த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தாராம். ஷூட்டிங்கின்போது, மும்பையில் இருந்து வர வேண்டிய நடிகை தாமதமாக வந்ததால், அங்கிருந்த த்ரிஷாவை ஹீரோயினாக்க இயக்குநர் ப்ரியதர்ஷன் முடிவு செய்தாராம். எவ்வளவு லக்கி பாருங்க!

News March 7, 2025

பின்வாங்கினார் டொனால்ட் டிரம்ப்

image

மெக்சிகோ நாட்டின் மீதான வரி விதிப்பை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் அதிபராக பொறுப்பேற்றவுடன், அண்டை நாடுகளான கனடா & மெக்சிகோ பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதித்தார். இது வர்த்தகப் போரை உருவாக்கும் நிலை ஏற்பட்டதால், சில பொருட்களுக்கு வரியை நிறுத்திவைத்து, டிரம்ப் பின் வாங்கியுள்ளார். ஆனால், கனடா மீதான வரிகள் குறைக்கப்படவில்லை.

News March 7, 2025

ராசி பலன்கள் (07 – 03 – 2025)

image

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – லாபம் ➤கடகம் – போட்டி ➤ சிம்மம் – விவேகம் ➤கன்னி – தடங்கல் ➤துலாம் – அமைதி ➤விருச்சிகம் – சாந்தம் ➤தனுசு – அன்பு ➤மகரம் – மகிழ்ச்சி ➤கும்பம் – வெற்றி ➤மீனம் – இன்பம்.

News March 7, 2025

கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

image

1 முதல் 9க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3ஐ கூட்டுங்கள். அதில் கிடைக்கும் விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.

News March 7, 2025

பங்குச்சந்தைகள் மேலும் சரியும்?

image

தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், இரண்டு நாள்களாக உயர்ந்து வருகிறது. ஆனால், இது தற்காலிகம்தான் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்னும் விற்பதை நிறுத்தாததால், பங்குச்சந்தை மேலும் சரியும் எனவும் சில்லரை முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நிஃப்டி இன்று 22,544 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

News March 6, 2025

CISF படையில் 3 ஆண்டுகளில் 50,000 பணியிடங்கள்

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) அடுத்த 3 ஆண்டுகளில் 50,000 வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக அதன் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்களை தொடர்புகொள்ள நாடு முழுவதும் 10 இடங்களில் பொது தகவல் மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் அவசர உதவிகள் பெறலாம் என்றும் குறிப்பிட்டார். இளைஞர்களே, இந்த வேலைவாய்ப்பை குறித்து வையுங்கள். விரைவில் அறிவிப்பு வரலாம்.

News March 6, 2025

SK வளர்ச்சியால் பொறாமையா? ஷ்யாம் ஓபன் டாக்

image

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி நடிகர் ஷ்யாம் தனது கருத்தை கூறியுள்ளார். நடன நிகழ்ச்சி ஒன்றில் நான் ஜட்ஜாக இருந்த போது, போட்டியாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். ஆனால், இப்போது அவர் எங்கே இருக்கிறார் பாருங்கள் என பலரும் என்னிடம் சொல்வார்கள். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படாமல், கடவுள் நமக்கு என்ன கொடுத்திருக்கிறாரோ அதற்கு நன்றி சொன்னாலே போதும். மகிழ்ச்சி தானாக வரும் என ஷ்யாம் கூறினார்.

News March 6, 2025

பெண்களுக்கு சிறப்பு 30% தள்ளுபடி

image

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சிறப்பு சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களைப் போலவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோ ஆப்டெக்ஸ் கடைகளிலும் 30% தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ₹1000 சேலை சலுகை விலையில் ₹700க்கு விற்கப்படும். பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!