News March 7, 2025

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கிறீர்களா?

image

காலையில் எழுந்ததும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் அவற்றை குடித்தால் அசிடிட்டி மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்னைகள் வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதில் டானின் மற்றும் காஃபின் போன்ற சில தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உள்ளதாகவும், இவை செரிமானம், வயிறு, இதய பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

News March 7, 2025

நாளை மகளிர் உரிமைத் தொகை?

image

பெண்களுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசால் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை மகளிர் தினமாகும். ஆதலால் வழக்கமாக செலுத்தப்படுவது போல 15ஆம் தேதி அல்லாமல் முன்கூட்டியே நாளை வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 டெபாசிட் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் அரசால் உறுதிபடுத்தப்படவில்லை.

News March 7, 2025

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இன்றே கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1ஆம் தேதி வழங்கப்படும். மே 4ஆம் தேதி 13 மொழிகளில் நேரடி முறையில் தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

News March 7, 2025

தாயாக போகும் வினேஷ் போகத்!

image

பிரபல மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான வினேஷ் போகத், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கடந்த 2018-இல் சோம்வீர் ரத்தியை கரம்பிடித்த வினேஷ் போகத், தொடர்ந்து மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் கூடுதல் எடை காரணமாக அவர் பைனலில் வெளியேற்றப்பட்டார். அதன்பின் அவர் ஓய்வை அறிவித்தார்.

News March 7, 2025

பெண்கள் CM ஆனால் மட்டும் ஏன் இப்படி? கனிமொழி

image

நாட்டில் 90% ஆண்கள் தான் முதல்வராக உள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் கூட ஆண் தான் எனவும், டெல்லியில் ஒரு பெண் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவர் பெண் என்பதால் முதல்வராக்கப்பட்டதாக நாடாளுமன்றத்திலேயே சிலர் கூறியதாகவும் அவர் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். ஒரு பெண் தலைமை பொறுப்புக்கு வரும் போது மட்டும் ஏன் இத்தனை கேள்விகள் எழுப்பப்படுகிறது எனவும் அவர் வினவியுள்ளார்.

News March 7, 2025

தொப்பை குறையவே மாட்டேங்குதா?

image

பலர் உடல் எடையை குறைச்சாலும் தொப்பை குறையலனு கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அதுக்கு முக்கியமான காரணம் இருக்கு. நம்ம உடம்புல கொழுப்பு சேரத் தொடங்கும்போது எல்லா இடத்துலயும் ஒரே மாதிரியாதான் சேரும். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல, வயித்துல நிறைய இடம் இருக்கனால மேலும் மேலும் சேர்ந்துக்கிட்டே இருக்கும். அதனால, கொழுப்பு கரையும் போது, அதிக கொழுப்பு இருக்கற வயிற்றுப் பகுதியில கடைசியாத்தான் குறையும்.

News March 7, 2025

சினிமாவில் வார்னரின் சம்பளம் எவ்வளவு?

image

கிரிக்கெட் வீரர் வார்னர் ‘ராபின் ஹூட்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் எதுவும் கேட்கவில்லையாம். ஆனால், தயாரிப்பாளர் தான் அவருக்கு ₹50 லட்சம் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி குடுமலா இயக்கியுள்ள இப்படத்தில் நிதின், ஸ்ரீலீலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி இசையமைத்துள்ளார்.

News March 7, 2025

ALERT: ஃபேஸ்புக் யூஸ் பண்றீங்களா?

image

சர்க்கரை நோய்க்கு எலான் மஸ்க் மருந்து கண்டுபிடித்துள்ளதாக AIஆல் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரவி வருகின்றன. இதனால் மருந்தக நிறுவனங்கள், எலான் மஸ்க் தலைக்கு $78 மில்லியன் விலை வைத்துள்ளதாக கூறி, பயனர்களை Gluco Revive உள்ளிட்ட அதிகாரப்பூர்வமற்ற மருந்துகளை வாங்க தூண்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் விசாரணையை தொடங்கியுள்ளது.

News March 7, 2025

ரோஹித் கொடுக்கப்போகும் பயங்கர அதிர்ச்சி

image

சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலுடன் சர்வதேச ODI போட்டிகளில் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி20 உலகக்கோப்பையில் நடந்தது போலவே, CT கோப்பை வென்று கொடுத்த பின் அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அடுத்த ஒரு ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டு, சர்வதேச போட்டிகளுக்கு Good Bye சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News March 7, 2025

நாளை கெடு.. மணிப்பூரில் அமைதி திரும்புமா?

image

மணிப்பூரில் நாளை முதல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், மலைப் பகுதி மக்களுக்கு தனி நிர்வாகம் அல்லது யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என பழங்குடி அமைப்புகள் போர் கொடி தூக்கியுள்ளன. இதற்கு மெய்தி அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மலைப்பகுதியை நோக்கிய பேரணியை அறிவித்துள்ளதால், பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

error: Content is protected !!