India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக, பாஜக ஆகியவை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தனியாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எனினும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவிடம் கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் நெருங்குகையில், கூட்டணி குறித்து இபிஎஸ் முடிவெடுப்பார் என மழுப்பலாக பதில் அளித்தார்.
கனடா மீது அடுத்த வாரம் முதல் கூடுதல் வரி விதிப்பு தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். கனடா, மெக்சிகோ நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பெரிய அளவிலான பரஸ்பர வரி விதிப்புகள் ஏப்ரல் 2 முதல் அமல்படுத்தப்படும். கனடாவிடம் இருந்து காரோ, மரக்கட்டையோ இனி எதையும் வாங்கப் போவதில்லை என கூறினார்.
வரும் ஜூன் மாதத்திற்குள் 1,100 ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. விநியோகம், நிதி, வணிகம், சட்டப்பிரிவைச் சேர்ந்த ஆரம்ப நிலை ஊழியர்கள் முதல் மூத்த மேலாளர்கள், இயக்குநர் வரை அனைத்து மட்டங்களிலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தெரிய வருகிறது. 6 முதல் 12 மாத சம்பளம் கொடுத்து அந்நிறுவனம் ஊழியர்களை நீக்க உள்ளது.
பரீட்சை நேரத்தில் முழு வினாத்தாளையும் படித்து, தெரிந்ததை முதலில் எழுதி முடியுங்கள் *தேர்வுக்கு முன் நன்கு படிப்பதுடன் பதிலையும் எழுதி பழகுங்கள்*பதிலில் இருக்கும் படங்களை ஒரு முறையாவது வரைந்து பாருங்கள் *வேகமாக எழுதுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் *பழைய வினாத்தாளின் கேள்விகளுக்கு பதிலெழுதி பயிற்சி செய்யுங்கள். இது பரீட்சையின் போது, நேரத்தை கையாள உதவும். SHARE IT.
மார்ச் மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது. அனைத்து அலுவலகங்களும் திறந்திருக்கும், பத்திரப்பதிவு நடைபெறும் என்று பத்திரப்பதிவு துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கும் விடுமுறை கிடையாது. வழக்கம் போல பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு, பத்திரப்பதிவு நடைபெறும்.
EPFO 3.0 அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இனி வருங்கால வைப்பு நிதி கணக்கை வங்கி கணக்கு போல் பயன்படுத்தலாம் எனவும், அது உங்கள் பணம், வங்கியில் இருந்து பணம் எடுப்பது போல், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இனி EPFO அலுவலகத்தையோ, அதன் ஊழியர்களையோ நீங்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.8ஆகவும், பீட்ரூட், சவ் சவ், முள்ளங்கி, முட்டைக்கோஸ், கத்திரிக்காய், சுரைக்காய், காலிபிளவர், புடலங்காய், பூசணிக்காய் ரூ.6ஆகவும் குறைந்துள்ளது. டிசம்பரில் ரூ.500ஆக உயர்ந்த பூண்டு தற்போது ரூ.100க்கு விற்கப்படுகிறது. அதேநேரத்தில் தேங்காய் விலை குறையவில்லை. கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது.
ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
பொருள்:
காத்யாயனியின்(மகாதேவி) மகள் தெய்வத்தை நான் தியானிக்கிறேன்! ஓ, துர்கா தேவி எனக்கு உயர்ந்த புத்தியைக் கொடுத்தார்! என் மனதை ஒளிரச் செய்வாயாக!
வனப்பகுதிகளில் நக்சல்கள் குறைந்து வரும் நிலையில், நகர்ப்புறங்களில் நக்சல்கள் பெருகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கட்சியினர் நகர்ப்புற நக்சல்களின் குரல்களை எதிரொலிப்பதாக, காங்கிரஸ் கட்சியை அவர் மறைமுகமாக சாடியுள்ளார். நாட்டின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்திற்கு இவர்கள் எதிராக இருப்பதாகவும், அவர்களிடம் நாம் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
விரைவில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் என லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய நிலையில், உங்களை யார் தடுத்தது என J&K CM உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். கார்கில் போரின் போதே அதை மீட்க வாய்ப்பு அமைந்ததாகவும், ஆனால் மத்திய அரசு அதை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பது பற்றி ஏன் பேசுவதில்லை எனவும் வினவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.