India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகே CISF தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது என அமித் ஷா தெரிவித்துள்ளார். தக்கோலத்தில் நடந்த CISF ஆண்டு விழாவில் பேசிய அவர், MBBS உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றார். மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 வீழ்ச்சி கண்டுள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.8,060க்கும், ஒரு சவரன் ரூ.64,480க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.8,030க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.240 சரிந்து ரூ.64,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் தங்கம் விலை என்ன? கீழே பதிவிடுங்கள்.
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது பதியப்பட்ட குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்வதற்கு போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2022ல் தீட்சிதர்கள் 2 பேர் மீது பதியப்பட்ட இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, தாக்கல் செய்த மனு ஐகோர்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண் தற்போது வழக்கில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காக, வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதாடினார்.
பாலஸ்தீனத்தில் வேலை தருவதாக கூறி, இந்தியர்களை அழைத்துச் சென்று ஒரு மாதமாக அடைத்து வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தியர்களின் பாஸ்போர்ட்டை வைத்து, இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழையவே இந்த மோசடி நடந்திருப்பதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்திருக்கிறது. அப்படி நடந்த ஒரு மோசடியில்தான் மேற்கு கரையில் 10 இந்தியர்கள் சிக்கியிருப்பதை அறிந்து இஸ்ரேல் படை மீட்டுள்ளது.
சீமானின் நாதகவில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சென்னை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் க. அதியமான். கட்சியுடன் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக 2011ம் ஆண்டு ஜனவரியில் நாதகவில் இருந்து விலகி, தமிழர் முன்னேற்ற கழகம் (தமுக) கட்சியை அவர் ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்நிலையில், அதனைக் கலைத்து விட்டு 120க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நாதகவில் சீமான் முன்னிலையில் அதியமான் இணைந்தார்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, தெளிவாக இருக்கிறது என CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிக்கும் தமிழக மாணவர்கள் எந்த அளவில் கல்வித்தரத்தில் குறைவாக இருக்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நாளை ரூ.3,019 கோடி அளவிற்கு வங்கிக்கடனை CM ஸ்டாலின் வழங்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பழவனக்குடியில் மகளிர் சுய உதவி குழுப்பெண்களை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் தற்போது 4.80 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுவதாகவும், அதில் 58 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும் கூறினார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கல்வியில் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பல மொழி கற்கும் தனியார் பள்ளி விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் கலந்து கொள்வார். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு வழங்கமாட்டார்கள் என விமர்சித்துள்ளார். இவர்களின் இரட்டை வேடத்தால் ஏமாந்தது போதும் எனவும் சாடியுள்ளார்.
USAவில் எச்1பி விசாவில் வேலைக்கு செல்பவர்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம். அந்த குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பியவுடன், வேலை தேட 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு வேறு விசா வழங்கப்படும். ஆனால், அந்த நடைமுறைக்கு தற்போது டெக்ஸாஸ் கோர்ட் தடைவிதித்துள்ளது. இதனால், அங்கு இருக்கும் 1.34 லட்சம் பேருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அந்நாட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர்.
தமன்னாவிற்கு திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என ஆசையாம். திருமணத்திற்கு விஜய் வர்மாவை அவர் வற்புறுத்த, இருவருக்கும் பிரச்னை வந்துள்ளது. அதனால் தான், பிரேக் அப்பானதாக சொல்கிறார்கள். ஆனால், இது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. பிரேக் அப் குறித்து இருவருமே பேசவில்லை என்றாலும், இப்போதெல்லாம் பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் போட்டோ டெலிட் பண்ணி தானே மறைமுகமாக அறிவிக்கிறார்கள்!
Sorry, no posts matched your criteria.