India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளி Employee Appreciation Day, அதாவது ஊழியர்கள் பாராட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. கம்பெனிக்காக கடினமாக உழைக்கும் பெஸ்ட் ஊழியர்களை இன்று மனதார பாராட்டுங்களேன் சீனியர்ஸ்! சம்பள உயர்வு போலவே, பாராட்டும் ஒருவனை கடினமாக உழைக்கத் தூண்டும். Increment தான் வருஷத்துக்கு ஒரு வாட்டி தர்றீங்க, பாராட்டவாவது செய்யுங்களேன் ஆபீசில் நீங்க வாங்குன பெஸ்ட் பாராட்டு எது?
EX எம்எல்ஏ விஜயகுமாரை அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாகவும் இபிஎஸ் அறிவித்துள்ளார். பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் விஜயகுமார் கையெழுத்திட்டதால், நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
துபாயில் இருந்து 17 தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததை நடிகை ரன்யா ராவ் ஒப்புக் கொண்டுள்ளார். ரூ.12.56 கோடி மதிப்பு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக, அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர், தங்கக்கட்டிகளை தாம் உடலில் மறைத்து கடத்தி வந்ததாக கூறியுள்ளார். கடத்தலுக்காக மூத்த காவல்துறை அதிகாரி ராமசந்திர ராவின் உறவினர் என்ற அடையாளத்தை பயன்படுத்தியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உள்கட்டமைப்பு துறையில் முக்கிய பங்காற்றி வரும் L&T நிறுவனம், பெண் ஊழியர்களுக்காக முன்னோடி திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதாவது L&T நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும் என அதன் தலைவர் சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். சமீபத்தில் வாரத்திற்கு 90 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என கருத்துக் கூறி, கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார்.
மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் அத்தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி வழக்குத் தொடுத்திருந்தார். இதன்மீது சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அப்போது, தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை எனக் கூறிய ஐகோர்ட், தயாநிதியின் வெற்றி செல்லும் என அறிவித்ததோடு, வழக்கையும் தள்ளுபடி செய்தது.
காசோலை மோசடி வழக்கில், சூர்யாவின் ரத்த சரித்திரம் பட இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் (NBW) உத்தரவை மும்பை குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனை விதித்திருந்தது. இதை எதிர்த்து, குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன்மீதான விசாரணைக்கு அவர் ஆஜராகாததால் NBW வாரண்ட் வெளியிடப்பட்டது.
‘பே வாட்ச்’ நடிகை பமீலா பாச் (62) தற்கொலை செய்துள்ளார். அவர் கடந்த புதன் அன்று சடலமாகக் கிடந்தார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், தற்கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். பமீலா, பிரபல நடிகர் ஹேசல்ஹோஃப்பை 1989இல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2 மகள்கள் உள்ள நிலையில், 2006ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். ஹேசல்ஹோஃப் கொடுமைப்படுத்தியதாக பமீலா தெரிவித்திருந்தார்.
‘லவ்வருடன் முதல் விபத்து’ என ஒரு ஜோடி பதிவிட, அது பெரிய விவாதத்தை கிளப்பி விட்டது. சோஷியல் மீடியா மோகத்தில் இந்த கால இளைஞர்கள் மூழ்கி விட்டார்களா? என ஒரு புறம் கேள்வி எழுப்புகிறார்கள். மறுபுறம், இதுதான் பெஸ்ட் ‘Couples goals’ என்ற கமெண்டுகளும் குவிகின்றன. அனைத்தையும் இன்றைய தலைமுறையினர் ‘take it easy’ என்ற மனநிலையில் எடுத்துக் கொள்கிறார்கள் போலும். இது குறித்து என்ன நினைக்கிறீங்க?
கோடநாடு கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த CM ஜெயலலிதாவுக்கும் பாதுகாப்பு அதிகாரியாக வீரபெருமாள் பணியாற்றினார். கோடநாடு வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட கனகராஜ் உயிரிழப்பு குறித்த விசாரணைக்கு 11ஆம் தேதி ஆஜராகும்படி சிபிசிஐடியால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இபிஎஸ்க்கு இது புதிய நெருக்கடியாக கூறப்படுகிறது.
சீனாவில் கணவர் இறந்து விட, ஹார்ட் பிரச்னையுடன் பிறந்த மகனை எப்படியும் காப்பாற்றுவேன் என்ற வைராக்கியத்துடன் தாய் ஜிங் சின்னதாக ஹோட்டல் ஒன்றை திறக்கிறார். அவரின் ஹோட்டலுக்கு வருபவர், சாப்பிட்டு விட்டு ஜிங்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அவரது மகன் ஆப்ரேஷனுக்கு தேவைப்படும் மொத்த பணத்தையும் அந்த கஸ்டமர் செலுத்தி விட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார். இவர் தான் மனித ரூபத்தில் வந்த கடவுள்!
Sorry, no posts matched your criteria.