News March 7, 2025

டிகிரி போதும்… மத்திய அரசில் ₹56,100 சம்பளத்தில் வேலை!

image

மத்திய ஆயுத போலீஸ் படையில் 357 Assistant Commandants காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 25 வயதிற்குள், டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறும். தகுதியான நபர்களுக்கு மாதம் ₹56,100 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க மார்ச் 25 ஆம் தேதி கடைசி நாள். முழு விவரங்களுக்கு இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்யவும்.

News March 7, 2025

நல்ல வேளை நா சாப்பிடல..! ஐஸ்கிரீமில் இருந்த பாம்பு

image

சொன்னா நம்ப மாட்டாங்க… ஆனால் தாய்லாந்தை சேர்ந்த ஒருவர், இந்த கொடுமையை அனுபவித்துள்ளார். ஐஸ்கிரீமை சாப்பிடலாம் என ஆசையுடன் வாங்கியவருக்கு, லைப் டைம் ஷாக் கிடைத்துள்ளது. தாய்லாந்தில் இருக்கும் பயங்கர விஷமுள்ள golden tree snake அந்த ஐஸ்கிரீமில் அடக்கமாகி இருந்திருக்கிறது. இது குறித்து அவர், சோஷியல் மீடியாவில் பதிவிட, நெட்டிசன்கள் உறைந்து போயுள்ளனர். இது அலட்சியமா? இல்லை தெரியாமல் நடந்ததா?

News March 7, 2025

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 திட்டம்.. நாளை தொடக்கம்

image

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக தரப்பில் தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலில் வென்று ஆட்சியமைத்துள்ள பாஜக, மகிளா சம்ரிதி திட்டம் என்ற பெயரில் அத்திட்டத்தை மகளிர் தினமான நாளை தொடங்கவுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பயனாளிகளைச் சேர்ப்பதற்கான பதிவும் நாளையே தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.

News March 7, 2025

பிளான் பண்ணி செய்யணும்: கேன் வில்லியம்சன்

image

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவை வீழ்த்த தெளிவான திட்டம் அவசியம் என நியூசி., கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசி., இடையிலான இறுதிப்போட்டி வரும் 9ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்தப் போட்டியை எதிர்கொள்வது குறித்து பேட்டியளித்த கேன், பைனலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதே நேரம், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து பாடம் கற்பது அவசியம் எனக் கூறினார்.

News March 7, 2025

2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

image

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறிய 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கவும், கனிமவளம் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்கவும் 2 சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இவற்றுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை தமிழக அரசு நியமிக்கவுள்ளது.

News March 7, 2025

BREAKING: 11ஆம் தேதி கனமழை எச்சரிக்கை

image

வரும் 11ஆம் தேதி தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. வரும் 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. வரும் 11ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது.

News March 7, 2025

குழந்தை தொப்புள் கொடியை தாயத்தில் வைப்பது ஏன்?

image

பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் வைப்பார்கள். வளர்ந்த பிறகு நோய் தாக்கினால், அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தம் அதிகளவு மூலச்செல்களை கொண்டுள்ளன. சில ஆராய்ச்சியாளர்கள் நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற ரத்த நோய்களுக்கு தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம் செல்கள் பயன்படும் என்கின்றனர்.

News March 7, 2025

சூர்யா இல்லாமலே தொடங்கிய வாடிவாசல்!

image

சூர்யா – வெற்றிமாறனின் காம்போவில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ ஷுட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு பல ஆண்டுகளாகவே பதில் இல்லை. இந்த சூழலில் தான், ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள X பதிவில், ‘வாடிவாசல் சாங் கம்போசிஷன் தொடங்கியது’ எனக் குறிப்பிட்டு வெற்றிமாறனுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அப்போ சீக்கிரமே சூட்டிங் ஆரம்பித்து விடும் என சூர்யா ரசிகர்கள் ஹேப்பி மோடில் இருக்கிறார்கள்.

News March 7, 2025

Startup நஷ்டம்: 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

image

பெங்களூருவில் அடுக்குமாடிக் குடியிருப்பின் 12வது தளத்தில் இருந்து குதித்து மென்பொருள் பொறியாளர் தற்கொலை செய்துகொண்டார். மயங்க் ரஜனி என்ற அவர் நிறுவனத்தின் நஷ்டம் மற்றும் உடல் நல பாதிப்பால் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலையின் போது அவரின் பெண் தோழி படுக்கை அறையில் இருந்துள்ளார். லக்னோவில் உள்ள அவரின் குடும்பம் செய்தி அறிந்து பெங்களூரு சென்று உடலைப் பெற்றுள்ளது.

News March 7, 2025

இந்தியாவை கௌரவித்த பார்படாஸ்.. மோடி நெகிழ்ச்சி…

image

பார்படாஸ் நாட்டின் சார்பில் ‘Honorary Order of Freedom of Barbados’ விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவரது சார்பில் இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மர்கெரிட்டா பெற்றுக்கொண்டார். இதற்காக பார்படாஸ் அரசு மற்றும் மக்களுக்கு மோடி,தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் நெருங்கிய உறவுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!