India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போன் டயட் என்றால் குறைந்தது 3 நாள்களுக்கு போனை கைவிடுதல். ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் யூனிவர்சிட்டி ஆய்வில் இந்த டயட்டால், மூளையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. காலப்போக்கில் மதுவை போல, போன் பயன்பாடும் ஒரு போதையாக மாறுவது, மூளை MRI ஸ்கேன்களில் தெரிந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 3 நாள்கள் மட்டும் போனை கைவிடுவதன் மூலம் மூளை புத்துணர்ச்சி பெறுகிறதாம். சோ, ட்ரை பண்ண யார் ரெடி!
ரமலான் மாதத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா மற்றும் நோன்பு கஞ்சி ஆகியவை தயாராகி வருகின்றன.
மகளிர் தினத்தன்று பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், தனது சமூக வலைதள கணக்குகளை அவர்களிடம் ஒப்படைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் நவ்சாரியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் பங்கேற்கவுள்ள நிலையில், அவரது பாதுகாப்புப் பணியில் பெண் போலீசார் மட்டுமே ஈடுபடவுள்ளனர். வாட் ஆன் ஐடியா சர்ஜி!
பொறாமை குணம் இருந்தா வாழ்க்கை திசை மாறிடும். அதுக்கு உதாரணமா பிரேசில்ல ஒரு சம்பவம் நடந்து இருக்கு. துணி தயாரிப்பு நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு வந்த ஊழியருக்கு திடீர்னு பிரமோஷன் கிடைக்க, கூட வேல பார்த்த லேடியால தாங்கிக்க முடியல. பொறாமைப்பட்டு குடிக்குற தண்ணி பாட்டில்ல விஷத்த கலக்க, அவரோட உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு. லேடிக்கு 6–20 வருஷம் வரைக்கும் ஜெயில் வாழ்க்கை காத்துக்கிட்டு இருக்கு.
இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாகனங்கள் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வாகனங்கள் விற்பனை விகிதம் 7% வரை சரிவடைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 20.46 லட்சம் வாகனங்கள் விற்ற நிலையில், இந்த ஆண்டு 18.99 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இதனை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் 14 வயது தலித் சிறுமியை 4 பேர் கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. சிறுமியை கடத்திச்சென்று பல நாள்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த அக்கும்பல், கையில் இருந்த ஓம் டாட்டுவை அழிக்க ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறது.
தமிழில் தரமான பாடல்களை அள்ளிக்கொடுத்து மக்கள் மனங்களை வென்றவர் இசையமைப்பாளர் டி.இமான். இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், தனது எக்ஸ் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளதோடு, வேறு பதிவுகளும் வெளியிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தரப்பிடம் இமான் புகாரும் அளித்துள்ளார். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!!!
கேப்டன் ரோஹித் மற்றும் கோலி இருவருமே சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ODI ஃபார்மெட்டில் ஓய்வு பெறலாம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவர்களின் T20I ஓய்வு எதிர்ப்பார்க்கப்பட்டது தான் எனச் சுட்டிக்காட்டிய அவர், ODI கேரியர் குறித்த முடிவை அவர்களே எடுப்பார்கள் என்றும் கூறினார். ஆனால், அவர்கள் ஓய்வு பெற்று விட்டால், ரசிகர்களுக்கு டெஸ்ட் மட்டுமே மிஞ்சும் எனவும் கூறியிருக்கிறார். ஓய்வு பெறுவார்களா?
இன்று அதிகாலை ஏவப்பட்ட ஸ்பேஸ் X-ன் ஸ்டார்ஷிப் 8-வது சோதனை விண்கலம், வானில் <<15676802>>வெடித்துச் சிதறியது<<>>. கடந்த ஜனவரியில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. நாசாவில் நிலவுப் பயணமான ‘ஆர்டெமிஸ்’, மற்றும் ஸ்பேஸ் X-ன் செவ்வாய் கிரகப் பயணத்துக்கும் ஸ்டார்ஷிப் திட்டம் தான் அடிப்படை என்பதால், அடுத்தடுத்த தோல்விகள் இத்திட்டத்தை தாமதப்படுத்தலாம். இதனால் இதுகுறித்த விசாரணையும் ஆய்வும் முடுக்கிவிடப்படும் எனத் தெரிகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி மீண்டும் அமையலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ஆர்.பி. உதயகுமார், குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என கூறினார். இபிஎஸ்சை முதல்வராக ஏற்கும் எந்தக் கட்சியானாலும் அதிமுக கூட்டணியில் சேர்த்து கொள்வோம் எனவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். இது, பாஜகவுக்கு அதிமுக விடுத்த மறைமுக அழைப்பாகவே கருதப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.