India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜாஸ் இசையின் ஜாம்பவான்களில் ஒருவரான ராய் ஆயர்ஸ் (84) நியூயார்க்கில் காலமானார். உலகின் சிறந்த வைப்ரோபோனிஸ்ட் மற்றும் கம்போசரான இவரின் செல்வாக்கு ஜாஸ், ராக்-அன்-ரோல், பங்க், எலக்ட்ரானிக் இசை என பல இசைவடிவங்களிலும் இன்றுவரை தொடர்கிறது. பல தசாப்தங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த இவர், 70களில் உச்சத்தில் இருந்தார். இவரின் Everybody Loves the Sunshine ஆல்பம் இன்றும் ஹிட் சார்ட்டில் டாப்பில் உள்ளது.
சமீபகாலமாக AI இன்ஜினியர்களுக்கும் டிமாண்ட் எகிறியுள்ளது. AI இன்ஜினியர் ஆக மாணவர்கள் இந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும். • ப்ளஸ் 2-க்கு பின்னர் AI, மிஷின் லாங்வேஜ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது டேட்டா சயின்ஸில் பி.இ. அல்லது பி.டெக். சேருங்கள் • PYTHON, JAVA, C++, R ஆகிய CODING லாங்வேஜ்களை கற்றுக்கொள்ளுங்கள் • இன்டன்ஷிப்கள், ஹேக்கத்தான்கள் மற்றும் AI போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்களை பெறுங்கள்.
அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர் தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ். ‘மிஸ்டர் 360’ என ரசிகர்கள் அவரை செல்லமாக அழைக்கின்றனர். ODI கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார். அதில் தோனி, விராட் கோலி, சச்சின் ஆகிய மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதை தவிர ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். உங்களோட டாப் 5 யாரெல்லாம்னு சொல்லுங்க..
ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், நியூசிலாந்தின் கிளேன் பிலிப்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மகளிரில் ஆஸ்திரேலியாவின் அலனா, அன்னபெல் மற்றும் தாய்லாந்தின் திப்பாட்சா ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
ரோஹித் ODI கேப்டன்சியில் இருந்து விலகுவதாக பயிற்சியாளர் கம்பீர், அணி தேர்வாளர் அஜித் அகர்கரிடம் ஏற்கனவே கூறிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. 2027 WCக்கு அணிக்கு நிலையான கேப்டன் தேவை என்பதை உணர்ந்து, அவர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் ஒரு பிளேயராக தொடருவேன் எனவும் உறுதியளித்துள்ளாராம். அடுத்து கேப்டன் தேர்வாக யார் சரியாக இருப்பார்கள்?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தென்மாநில முதல்வர்களுக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து வரும் 22 ஆம் தேதி ஆலோசிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அன்று நடக்கும் கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்குமாறு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மே.வங்கம் உள்ளிட்ட முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தங்கம் போல பிட்காயினுக்கென தனி reserveஐ அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கியிருக்கிறார். இதன்மூலம், டிஜிட்டல் கரன்ஸியை அந்நாடு அபீசியலாக அங்கீகரித்துள்ளது. தற்போது, அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளுக்கு உலக அரங்கில் மிகுந்த மதிப்பு இருப்பது போல, வருங்காலத்தில் அதிக பிட்காயின் வைத்திருக்கும் நாடுகள் மதிக்கப்படலாம். டிரம்ப்பால் பிட்காயினின் மதிப்பு கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவின் ஒரு காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த போர்டில், ‘குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம். அதனால், அவற்றின் இயல்புத் தன்மை மாறிவிடும்’ என எழுதப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்த ஒரு நெட்டிசன், ‘இது மக்களுக்கும் பொருந்தும். இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறியாக மாற்ற வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார். இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. இவர் சொல்வதைப் போல, இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகிறதா?
இந்தியாவில் ஊழல் அதிகம் இருக்கிறது என்று புலம்புகிறீர்களா? அமெரிக்காவில் நடந்த காமெடி ஊழலை பாருங்க. அரசு கட்டடத்தில் உள்ள வெறும் 8 செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற, 5 ஆண்டுகளுக்கு ₹48 லட்சத்துக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. உடனடியாக இந்த காண்ட்ராக்டை ரத்து செய்திருக்கும் டிரம்ப் அரசு, நாங்களே தண்ணீர் ஊற்றிக் கொள்கிறோம் என்று X தளத்தில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடிந்துவிட்டதாக கர்நாடக CM சித்தராமையா அறிவித்துள்ளார். கோடை தொடங்கும் நிலையில், தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், கர்நாடக சட்டப்பேரவையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் அணை கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.