News March 7, 2025

விபத்தில் 4 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

திருத்தணி அருகே இன்று நிகழ்ந்த <<15681205>>கோர விபத்தில்<<>> 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டையும் அறிவித்துள்ளார். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

News March 7, 2025

இஸ்லாமிய சொந்தங்களுக்கு நன்றி: விஜய்

image

மாமனிதர் நபிகள் நாயகம் வழியில் மனிதநேயம், சகோதரத்துவத்தை பின்பற்ற வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார். பிறகு அவர்கள் மத்தியில் பேசிய விஜய், தங்களது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு வந்த அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் நன்றி எனக் கூறினார்.

News March 7, 2025

வைஜெயந்திமாலா நலமாக உள்ளார்: மகன் விளக்கம்

image

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகையும் முன்னாள் MP-யுமான வைஜெயந்திமாலா(91) காலமானதாக தகவல் வெளியானது. இத்தகவலை மறுத்துள்ள அவரது மகன் சுசீந்திர பாலி, தன் தாயார் நலமாக உள்ளதாகவும், காலமானதாக வெளியான செய்தி உண்மையல்ல எனவும் தெரிவித்துள்ளார். வஞ்சிக்கோட்டை வாலிபன், தேன் நிலவு, இரும்புத்திரை என காலத்தால் அழியாப் படங்களில் நடித்த வைஜெயந்திமாலா, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

News March 7, 2025

8 PMக்கு சென்னை பல்கலை., செமஸ்டர் தேர்வு முடிவு

image

சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இரவு 8 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.egovernance.unom.ac.in/results, www.exam.unom.ac.in/results என்ற இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம். விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் மார்ச் 10 முதல் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT

News March 7, 2025

CT FINALS ரத்தானால் எந்த அணிக்கு வெற்றி?

image

இந்தியா – நியூசி. மோதும் CT FINALS போட்டி மார்ச் 9-இல் நடைபெறவுள்ள நிலையில், அன்று மழை விளையாடினால் என்னவாகும் தெரியுமா? ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டால், இரு அணிகளின் 25 ஓவர்களின் ஸ்கோரை வைத்து முடிவு அறிவிக்கப்படும். மழையால் மொத்த ஆட்டமே ரத்தானால், ரிசர்வ் நாளுக்கு (RESERVE DAY) போட்டி ஒத்தி வைக்கப்படும். அன்றைக்கும் மழை பெய்தால், இரு அணிகளுமே கூட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

News March 7, 2025

மாறி மாறி விளையாடுவது தொல்லை: கேரி அதிருப்தி

image

நாடு விட்டு நாடு மாறி விளையாடுவது தொல்லையாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் அதிருப்தி தெரிவித்துள்ளார். லாகூரிலிருந்து துபாய்க்கு செல்லவே ஒருநாள் ஆவதாகக் கூறிய அவர், மீதமுள்ள சில நாள்கள் ஓய்வெடுக்கவும் பயிற்சி மேற்கொள்ளவும் சரியாக இருக்கும் என்றார். இந்தியா-நியூசிலாந்து மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டி துபாயில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

News March 7, 2025

லோன் வாங்குவோருக்கு ஹேப்பி மேல் ஹேப்பி

image

கடந்த பிப்ரவரியில் ரெப்போ வட்டியை RBI 6.25%ஆக குறைத்த நிலையில், வரும் நிதியாண்டில் இந்த விகிதம் மேலும் 0.5% முதல் 0.75% வரை குறைக்கப்படலாம் என்று Crisil நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனின் வட்டி விகிதம். இது குறைந்தால், சில்லரை நுகர்வோரின் லோன் வட்டிகளும் குறையும். லோன் வாங்கியோர், வாங்கப் போகிறவர் இருதரப்பினருக்கும் இது பயனளிக்கும்.

News March 7, 2025

நோன்பு திறந்தார் விஜய்

image

தவெக சார்பில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு நோன்பு திறந்தார். காலை முதல் உணவருந்தாமல் இருந்த அவர், நோன்புக் கஞ்சி, பேரீச்சை, சமோசா சாப்பிட்டு நோன்பு திறந்தார். இதனையடுத்து, அங்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஆகியவை பரிமாறப்படவுள்ளன. முன்னதாக, விஜய் வெள்ளை லுங்கியும் தொப்பியும் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

News March 7, 2025

TN அரசுக்கு ₹5 லட்சம் அபராதம்

image

தமிழக அரசுக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி கல்லூரியில், தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கக்கோரி கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஒப்புதல் தர ஆணையிட்டார். இதை எதிர்த்து TN அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், அபராதம் விதித்து உத்தரவிட்டது.

News March 7, 2025

IT-யில் வேலை செய்கிறீர்களா? இதை கவனிங்க!

image

IT வேலையை AI காலி செய்யப் போகிறதா? இல்லை. ஆனால், இந்தியர்கள் செய்யும் Cheap Labour வேலைகளை AI நிச்சயம் காலி செய்யப் போகிறது. இந்திய IT வேலைகளை அமெரிக்கர்கள் Cheap labour என்றுதான் அழைக்கின்றனர். அவர்கள் இதனை தவிர்த்துவிட்டு Research & Innovation வேலைகளை செய்கின்றனர். இவற்றை AI நெருங்க முடியாது என்றாலும், இந்தியர்கள் செய்யும் வேலைகளை AI எளிதாக செய்துவிடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

error: Content is protected !!