India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கணவர் ஜோனஸுடன் அமெரிக்காவில் குடியேறிவிட்ட பிரியங்கா சோப்ரா, மும்பையில் இருந்த தனது 4 அபார்ட்மெண்ட்களை விற்றுள்ளார். அந்தேரியில் இருந்த இந்த அபார்ட்மெண்ட்கள் மொத்தமாக ₹16.17 கோடிக்கு விலை போயிருக்கின்றன. ஏற்கெனவே அவர், இரண்டாண்டுகளுக்கு முன் மும்பையில் 2 வீடுகளை விற்றார். முன்னணி நடிகையாக பாலிவுட்டில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தார்.
தியேட்டருக்கு படம் பாக்க போலாமானு கேட்டா… அடுத்த வாரம் OTT-ல பாத்துக்கலாம் என சொல்லும் காலம் வந்துவிட்டது. ஆனால் எத்தனை OTT தளத்துக்கு சப்ஸ்கிரைப் பண்றது என்ற சலிப்பு பலரிடம் உள்ளது. அதுக்கு தான் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்றைய பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுவேற ஒன்னும் இல்ல, அரசே OTT தளம் ஒன்ன உருவாக்க போகுதாம். கன்னட சினிமாவுக்கு இது ஊக்கம் அளிக்குமாம்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் பைசன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அதில் 2 துருவ் விக்ரம் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. தரமான படங்கள் மூலம் மக்களை கவர்ந்த மாரி செல்வராஜின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஃபர்ஸ்ட் லுக்க decode பண்ணிட்டா சீக்கிரம் கமெண்ட் பண்ணுக….
செக் குடியரசில் நடந்து வரும் பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். இன்று நடந்த ஃபைனல் ரவுண்டில், சீனாவைச் சேர்ந்த வெய் யீயை தோற்கடித்தார். இப்போட்டியில் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவரை தவிர, இந்திய வீரர்களான அனிஷ் கிரி 2வது இடத்திலும், பிரக்ஞானந்தா 3வது இடத்திலும் உள்ளனர்.
➤மேஷம் – அமைதி ➤ரிஷபம் – எதிர்ப்பு ➤மிதுனம் – வரவு ➤கடகம் – துன்பம் ➤ சிம்மம் – புகழ் ➤கன்னி – ஊக்கம் ➤துலாம் – உதவி ➤விருச்சிகம் – மறதி ➤தனுசு – பெருமை ➤மகரம் – ஆக்கம் ➤கும்பம் – போட்டி ➤மீனம் – அசதி.
ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு தமிழக அரசு பட்டா வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான, வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. *நீர்நிலைகள், மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் ஆகியவற்றில் வசிப்போருக்கு பட்டா கிடையாது * சென்னையில் 10 ஆண்டுகளுக்கு மேலும், மற்ற இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலும் வசிப்போருக்கு பட்டா * ஆண்டு வருமானம் ₹3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளோருக்கு இலவச பட்டா.
GPAY, PHONE PE உள்ளிட்ட யுபிஐ யூசர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை NPIC வழங்கியுள்ளது. அதன்படி, யுபிஐ யூசர்கள் தங்களின் ரிஜிஸ்டர்டு செல்போன் எண்ணை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். செல்போன் எண் மாறியிருந்தால், அந்த எண்ணையும் அப்டேட் செய்ய வேண்டும். இதனை இனி யுபிஐ ஆப்களே கேட்குமாம். அதையும் மீறி அப்டேட் செய்யாவிட்டால், யுபிஐ மூலமாக பணத்தை அனுப்பவோ, பெறவோ முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் ப்ளஸ் 2 மாணவிக்கு நடந்த கொடூரம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அங்குள்ள கனோர் பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவியை 2 இளைஞர்களும், கோயில் பூசாரி ஒருவரும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த மாணவி, இன்று ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக சவுதி, கத்தார் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், நேற்றிரவு ஆப்பிரிக்க அகதிகளை கொண்டு சென்ற 4 படகுகள், ஏமன் அருகே நடுக்கடலில் கவிழ்ந்தன. இதில்186 பேர் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர். எங்கேயாவது சென்று உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என சென்றவர்களுக்கா இந்த கதி ஏற்பட வேண்டும்?
Sorry, no posts matched your criteria.