News March 8, 2025

சுடச்சுட ரெடி… ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட்!

image

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் 24 மணிநேரத்தில் அதிகமானோர் பார்த்த தமிழ் பட டீசர் என்ற சாதனையையும் படைத்தது. தற்போது, அடுத்த அப்டேட்-காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நல்ல செய்தியை கொடுத்துள்ளார். ‘ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வரும், சுடச்சுட ரெடி பண்ணிட்டு இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை.. அறிவித்தது இவரா!

image

மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் ஊழியர்களுக்கு ஸ்பெஷல் அறிவிப்பை L&T நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். ஆம்! பெண் ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதும், மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்க்க முடியும்; வாரம் 90 மணிநேரம் வேலை செய்ய சொன்ன இவரா இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

News March 8, 2025

வாட் ப்ரோ? திஸ் இஸ் ராங் ப்ரோ…

image

நேற்று விஜய் கலந்து கொண்ட இப்தார் நிகழ்ச்சியில் சுமார் ₹1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை YMCA மைதானத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், போலீஸார் திணறினர். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, சமூக விரோதிகள் சிலர் மூன்று பேரிடம் ₹1 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பிக்-பாக்கெட் அடித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 8, 2025

31,553+ பணியிடங்கள்.. Apply Now

image

தனியார் துறையில் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அரசு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளது. மொத்தம் 725+ நிறுவனங்களில் 43 விதமான துறைகளில் காலியாகவுள்ள 31,553+ பணியிடங்களுக்கு <>www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு முற்றிலும் இலவசம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களை அணுகவும்.

News March 8, 2025

6 மாதம் கம்முன்னு இருங்க சாமிகளா!

image

அதிமுக யாருக்காவும் தவமிருக்கவில்லை என்ற இபிஎஸ் பேச்சு குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழிசை நாசுக்காக பதிலளித்தார். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. 2026 தேர்தலை பொறுத்தவரை, யாருடன் கூட்டணி என்பதை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் . குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்கு கூட்டணி குறித்து கேள்வி கேட்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

இதுபோன்ற ஆண்களை கொலை செய்ய permission Pls..

image

மகளிர் தினத்தில் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு ‘கொலை செய்ய அனுமதி’ கோரி NCP-SP கட்சியின் மகளிரணி தலைவர் ரோகிணி காட்சே பரபரப்பு கடிதத்தை எழுதியுள்ளார். பெண்களை அடக்கும் மனநிலை, பாலியல் வன்கொடுமை செய்யும் மனநிலையில் உள்ளவர்களை பெண்கள் கொலை செய்ய விரும்புகிறார்கள். ஒருவர் ஒரு கொலை செய்வதற்கும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவும் அனைத்து பெண்களின் சார்பாக வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

News March 8, 2025

ரயில்வே புது ஐடியா… கூட்ட நெரிசல் பிரச்னைக்கு தீர்வு!

image

கன்ஃபார்ம் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி ரயில் நிலைய பிளாட்ஃபார்ம்-க்கு நேரடியாக செல்ல முடியும். வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்பவர்களை ரயில் வந்தபிறகே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில்வே முடிவு எடுத்துள்ளது. இதற்காக, ரயில் நிலையங்களுக்கு வெளியே காத்திருப்பு மையம் கட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, டெல்லி ரயில் நிலைய நெரிசலில் 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News March 8, 2025

தமிழ் படங்கள் ஓடாது என எச்சரிக்கை

image

மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கர்நாடக அரசும் கட்டக்கூடாது என்று தமிழக அரசும் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கர்நாடகாவில் இருந்து மிரட்டல் வந்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள் அணை கட்ட ஆட்சேபணை இல்லை என்று தமிழக அரசு தெரிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

News March 8, 2025

SC முன்னாள் நீதிபதி வி.ராமசாமி காலமானார்

image

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசாமி (96) இன்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சென்னையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்த அவர், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.

News March 8, 2025

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த கனடா

image

”நானே ஒரு ஜியோனிஸ்ட்” என்று யூதர்களுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்துவரும் நிலையில், ட்ரூடோவின் இந்தப் பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஜியோனிஸம்’ என்பது கெட்ட வார்த்தை கிடையாது என்று கூறியிருக்கும் அவர், யூதர்களுக்கான உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதற்கு இஸ்ரேல் வரவேற்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!