India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
WPL போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று பெங்களூரு – உத்தரப் பிரதேசம் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் குவித்தது. வீராங்கனை Georgia voll ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்து அசத்தினார். இதனை அடுத்து, இமாலய இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது. எந்த அணி வெல்லும் என Comment செய்யுங்க.
அதென்ன, ‘ஹாண்ட வைரஸ்’ என கேட்கலாம். எலி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் தான் இந்த வைரஸ் பரவுகிறது. நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜைகளில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும். நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும். இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, ‘ஹாண்ட வைரஸ்’ தொற்றும். சுவாச மண்டலத்தைத்தான் இது முதலில் பாதிக்கும்.
ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேனின் மனைவி பெட்ஸி அர்காவா இறப்பிற்கு காரணமான ஹாண்ட வைரஸ் பற்றி தான் தற்போது விவாதிக்கப்படுகிறது. இந்த வைரஸ் எலிகளின் மூலம் பரவுகிறது. ஆனால் அது தொற்றுநோய் அல்ல. சோர்வு, காய்ச்சல், தசைவலி, இருமல், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு போன்றவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் தாக்கிய 3 நோயாளிகளில் ஒருவர் உயிர் பிழைப்பது மிகவும் கடினம்.
கேரளாவில் போலீசுக்கு பயந்து போதைப் பொருளை விழுங்கிய இளைஞர் உயிரிழந்தார். தாமரசேரி பகுதியில் போதைப் பொருள் கடத்திய ஷானிட் (28), போலீசைப் பார்த்தவுடன் இரண்டு பாக்கெட்களை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். இதனால், போதை தலைக்கேறிய அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய வயிற்றில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்-ஐ பார்க்க ஆவலாய் காத்திருக்கும் ரசிகர்கள் கிளம்பி சென்னை மெரினா, பெசன்ட் நகர் பீச்-க்கு போயிடுங்க. பொதுமக்கள் பெரிய திரையில் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி இதுபோன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த வாரத்தில் மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். இதன் காரணமாக 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மேஷ ராசிக்கு பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிம்ம ராசிக்கு ராஜ யோகம் அடிக்கும். தனுஷ் ராசிக்கு இந்த வாரத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கும்ப ராசிக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மீன ராசிக்கு நிதி சுமை குறைந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நெருங்கி வருவதை முன்னிட்டு, மக்களவை & மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. நாளை (மார்ச் 9) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை, தொகுதிகள் மறு சீரமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட பிரியாணியில் ஆபத்தும் இருக்கிறது. மும்பை குர்லா பகுதியில் பெண் சாப்பிட்ட சிக்கன் பிரியாணி, அவருக்கு உயிர் பயத்தை காட்டி இருக்கிறது. தொண்டையில் 3.2 செ.மீ. நீள சிக்கன் எலும்பு சிக்கியதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 8 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு எலும்பு அகற்றப்பட்டது. பிரியாணி சாப்பிடும்போது கவனம் தேவை!
பாஜகவுடன் கூட்டணியமைக்க பலர் தவம் இருக்கிறார்கள் என அண்ணாமலை பேசியது குறித்து EPSஇடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு EPS, அவர் அதிமுகவை சொல்லவில்லையே என்று பதிலளித்தார். இது பற்றி மீண்டும் பேசியிருக்கும் அண்ணாமலை, “கூட்டணி குறித்து எடப்பாடி அண்ணன் தெளிவாக கூறிவிட்டார்” என்றார். இதனால், அதிமுக – பாஜக கூட்டணியா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் மீண்டும் குழப்பத்திலேயே முடிந்திருக்கிறது.
குஜராத், ராஜஸ்தானை சேர்ந்த கராசியா பழங்குடியின மக்கள் தங்கள் பிள்ளைகளை லிவிங் டு கெதரில் இருக்க அனுமதிக்கின்றனர். ஆணும் பெண்ணும் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக சேர்ந்து வாழலாம், குழந்தையும் பெற்றுக் கொள்ளலாம். விருப்பப்பட்டால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஒருவருடன் வாழ்ந்து வரும்போது, வேறு ஒரு நபரை தேர்வு செய்யும் உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.