News March 9, 2025

கத்தி, மிளகாய் தூள்… மகா. அமைச்சர் அட்வைஸ்!

image

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான்- ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவசேனாவை சேர்ந்த அமைச்சர் குலாப் ராவ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா அரசின் பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக பையில் Lip Stick உடன் கத்தி, மிளகாய் தூள் உள்ளிட்டவற்றையும் வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News March 9, 2025

வெயிலால் உயரும் விலை

image

மார்ச் மாதம் தொடங்கி 10 நாள்கள் கூட ஆகாத நிலையிலும் வெயில் பட்டையை கிளப்புகிறது. இதன் காரணமாக, கோவை நகரிலேயே இளநீர் ஒன்று ₹50க்கு விற்பனையாகிறது. தென்னை மரங்கள் அதிகம் கொண்ட கோவை மாவட்டத்தில், வழக்கமாக இளநீர் ₹35 அல்லது ₹40க்கு மட்டுமே விற்பனையாகும். சென்னையில் இளநீரின் விலை ₹70 வரை கூட விற்பனையாகிறது. வரும் காலங்களில் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 9, 2025

பெண் சக்தியின் வீரியம் இதுதான்

image

மகளிர் தினமான இன்று, மதுரையில் ஒரு பெண் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போராடி வருகிறார். 80 வயதாகும் வருதம்மாளுக்கு 53 வயதில் மனநலன் பாதித்த மகன் இருக்கிறார். அரசு கொடுக்கும் முதியோர் உதவித்தொகை ₹1,200 & மனநலம் பாதித்தோருக்கான உதவித்தொகை ₹1,500இல் மட்டுமே குடும்பம் ஓடுகிறது. தான் இறந்துவிட்டால், மகனை கவனிக்க ஆள் இல்லையென வருதம்மாள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார்.

News March 9, 2025

சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் வெயில்!

image

கோடைக்காலம் இப்போது தான் தொடங்கி இருக்கிறது. அதற்குள் இளநீர், தர்பூசணி, ஜூஸ் கடைக்காரர்கள் கல்லா கட்ட தொடங்கிவிட்டனர். பங்குனி பிறப்பதற்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பது தான் இதற்கு காரணம். ஈரோடு, மதுரை, கரூர் பரமத்தி ஆகிய 3 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. மார்ச் 10 வரை தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

News March 9, 2025

தவெக VS திமுக: விஜய் கருத்துக்கு அமைச்சர் பதில்

image

மகளிர் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, திமுக ஆட்சியை அகற்றுவோம் என கூறினார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் MRK. பன்னீர் செல்வம், விஜய்-ன் கருத்து சினிமாவில் வரும் டயலாக் போன்று இருப்பதாக விமர்சித்தார். பெண்களுக்கு சம உரிமை கொடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது யார் என அனைவருக்கும் தெரியும் என்றும் அமைச்சர் கூறினார்.

News March 9, 2025

ராசி பலன்கள் (09 – 03 – 2025)

image

➤மேஷம் – பக்தி ➤ரிஷபம் – பரிசு ➤மிதுனம் – பயம் ➤கடகம் – பகை ➤ சிம்மம் – பரிவு ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – பிரீதி ➤விருச்சிகம் – ஓய்வு ➤தனுசு – வரவு ➤மகரம் – தடங்கல் ➤கும்பம் – வெற்றி ➤மீனம் – புகழ்.

News March 9, 2025

வெளியானது ‘குட் பேட் அக்லி’ தீம் மியூசிக்! ஃபேன்ஸ் உற்சாகம்!

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் ஏப்.10ம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, 24 மணிநேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற தமிழ் டீசர் என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில், டீசரின் தீம் <>மியூசிக்கை <<>>படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

News March 9, 2025

கட்டணமில்லை .. இனி 25 கிலோ வரை இலவசம்

image

1) கோ-ஆப் டெக்ஸ் பொருட்களுக்கு 5% கூடுதல் தள்ளுபடி. 2) இ-சேவை மையங்களில் 10% சேவைக் கட்டணம் குறைப்பு 3) முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன் பெறலாம். 4) கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் பெற முன்னுரிமை. 5) கிராம & நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தயாரிக்கின்ற பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

News March 8, 2025

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ராமசாமி மறைந்த செய்தியறிந்து வருத்தமடைந்தேன். தனது சட்டப்படிப்பு மூலம் பல உதவிகளை செய்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சட்டத் துறையைச் சேர்ந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனறு குறிப்பிட்டுள்ளார்.

News March 8, 2025

ஒரு கால்தான் இருக்கு. இன்னொன்னு எங்க?

image

நம்ம ஊருல பேண்ட்ல ஒரு சின்ன கிழிசல் விழுந்தாலே தூக்கி போட்டுடுவோம். அதை போட்டுட்டு எப்படி வெளியே போறதுனு கூச்சமா இருக்கும். ஆனா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Coperni அப்படிங்குற பேஷன் நிறுவனம், இந்த ஒரு கால் பேண்டை புதுசா அறிமுகம் பண்ணியிருக்காங்க. இதுதான் இப்போ புது பேஷனாம். அட, அது கூட பரவால்லங்க. இதோட விலையை கேட்டா தலை சுத்தி கீழ விழுந்துடுவீங்க. ஒரு டெனிம் டவுசரின் (Denim Trouser) விலை ₹38,000.

error: Content is protected !!