News March 9, 2025

வரியை குறைக்க இந்தியா ஒப்புதல்: டிரம்ப்

image

வரி விகிதத்தை இந்தியா குறைக்க முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா போன்ற நாடுகள் கடுமையான வரியை விதிப்பதால், அவற்றுக்கு பரஸ்பரம் அதே வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், அந்த வரி விகிதங்களை வெகுவாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும், வரி விதிப்பில் உள்ள பிரச்னையை அம்பலப்படுத்திய பின், வரியைக் குறைப்பதாக இந்திய அரசு கூறியதாக தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

WPL 2025ல் பிளேஆஃப் சென்ற அணிகள்

image

WPL 2025ல் பிளேஆஃப் விளையாடும் அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. நேற்றைய போட்டியில் RCB தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், டெல்லி, மும்பை, குஜராத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. மும்பை அணிக்கு இன்னும் 2 லீக் போட்டிகளும், குஜராத் அணிக்கு ஒரு லீக் போட்டியும் உள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில், எலிமினேட்டர், இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.

News March 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 201 ▶குறள்: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. ▶பொருள்: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

News March 9, 2025

ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்?

image

கலிபோர்னியா ஆளுநர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பல நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா, டிரம்பிடம் தோல்வியடைந்தார். 2028ல் அவர் தேர்தல் போட்டிகளில் இருந்து விலகுவார் என கூறப்படுகிறது. தற்போது ஜனநாயக கட்சி உறுப்பினர் கவின் நியூசோம், கலிபோர்னியா ஆளுநராக உள்ளார்.

News March 9, 2025

ஆப்கானில் சர்ச்சையான ஆபாச நடிகை புகைப்படம்

image

தலிபான்கள் ஆட்சி நடக்கும் ஆப்கானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், ஆப்கான் சென்ற அமெரிக்க ஆபாச நடிகை Whitney Wright, கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அந்நாட்டின் பெண்ணுரிமை ஆர்வலர்கள், ஆப்கான் பெண்கள் சொந்த நாட்டிலேயே சிறை வைக்கப்படுவதாகவும், வெளிநாட்டினரின் பின்னணி எதுவானாலும் சிறந்த விருந்தோம்பல் அளிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

News March 9, 2025

இன்றைய (மார்ச் 9) நல்ல நேரம்

image

▶மார்ச்- 09 ▶மாசி – 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:00 AM & 01:30 PM – 02:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 AM – 06:00 AM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 AM- 04:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: கேட்டை ▶நட்சத்திரம் : புனர்பூசம்.

News March 9, 2025

IIT பாபாவின் மதிப்பெண்!

image

மகாகும்பமேளா மூலம் வெளிச்சத்திற்கு வந்த IIT பாபாவின் (அபய் சிங்) மதிப்பெண் பட்டியல் வைரலாகி வருகிறது. அவர் 10 ஆம் வகுப்பில் 93%, +2வில் 92.4% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். 2008ல், IIT JEEல் இந்தியளவில் 731 ரேங்க் பெற்று, புகழ்பெற்ற IIT மும்பையில் இடம் பெற்றார். 2008-12ல் B.Tech முடித்து, கனடாவில் ஆண்டுக்கு ₹36 லட்சம் சம்பளத்தில் பணிபுரிந்தார். அதன்பின், ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்து பாபாவானார்.

News March 9, 2025

காங்., நிர்வாகிகளுக்கு ராகுல் எச்சரிக்கை!

image

காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே சிலர் பாஜகவுக்கு வேலை செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியில் இருந்து 20 – 30 பேரை நீக்கத் தயாராக இருப்பதாக கூறிய அவர், நேரடியாக பாஜகவிலேயே போய் சேர்ந்துவிடுங்கள் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும், காங்கிரஸ்காரர்கள் பாஜகவின் பி-டீம் போல செயல்பட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

News March 9, 2025

ஜெயிலில் தூக்கமின்றி தவிக்கும் ‘கடத்தல் நாயகி’

image

துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ்-க்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. அவரிடம் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான ரன்யா ராவ், கண்களில் வீக்கத்துடன் காணப்பட்டுள்ளார். சிறையில் அவர் சரியாக தூங்கவில்லை என கூறப்படுகிறது. ஜாமின் கோரி ரன்யா தொடர்ந்த வழக்கு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

News March 9, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!