India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதா கொங்கரா இயக்கத்தில் பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பராசக்தி’. தமிழகத்தில் இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த உள்ளது. இதையொட்டி, இலங்கை சென்ற சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் 11ஆம் தேதி 12 மாவட்டங்களுக்கு IMD கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.
TNல் தனியார் ஹாஸ்பிடல்களில் இலவச தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசு ஹாஸ்பிட்டல்கள் மூலம் 90%க்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டாலும், 2வது தவணை செலுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், 100% இலக்கை அடைய தனியார் ஹாஸ்பிடல்களிலும் தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த அரசு திட்டமிடுகிறது.
தொடர் வெற்றிகளை குவித்து வரும் IND அணி, இன்று CT இறுதிப் போட்டியில் நியூசி.,யை எதிர்கொள்கிறது. டாஸ் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும். அனைத்து வீரர்களும் ஃபார்மில் இருப்பதும், ஒரே மைதானத்தில் விளையாடுவதும் INDக்கு சாதகமான காரணிகள். ICC போட்டிகளில் நியூசி., முன்னிலையில் இருப்பது கவலை அளிக்கிறது. இதனிடையே, ரோஹித் வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும், இன்று கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இசைஞானி இளையராஜா லண்டனில் இன்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். அது அவரது நீண்ட நாள் கனவாக இருந்தது. மேற்கத்திய இசையுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து 1986, 1988ம் ஆண்டுகளில் நீண்ட நேர இசைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அப்போதே சிம்பொனியில் ஆர்வம் காட்டி வந்தார். மொஸார்ட், பீத்தோவன் வரிசையில் சிம்பொனியை அரங்கேற்றி நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
விரைவில் ஜிஎஸ்டி கட்டணம் மேலும் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவைக்கேற்ப திருத்தங்களைச் செய்ய முயற்சிப்பதாகக் கூறிய அவர், அதனுடன் வரி அடுக்குகள் பகுத்தாய்வு செய்யப்படும் என்றார். ஜிஎஸ்டி அமலானதற்கு பிறகு விலை உயரவில்லை எனவும், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதே தங்களது இலக்கு என்றும் கூறினார்.
கடும் வெயில், பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40.62 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்தாண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவாகும். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.2024 மே 2ல், உச்ச அளவாக மின் நுகர்வு, 45.43 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். *செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. *நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும். *மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து சாவது மேலானது. *எதிரிகளும், தோல்வியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். * எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது – சே குவேரா.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்கிறது. கடந்த 2 நாட்களில் பாதுகாப்புப் படையினருக்கும், முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 600 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பிரிவினரிடையே மோதல் தொடங்கியதில் இருந்து நடந்த மிக மோசமான வன்முறை இதுவாகும். தெருக்களிலும் கட்டிடங்களிலும் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பனியாஸ் நகரத்தில்தான் இறப்பு எண்ணிக்கை அதிகம்.
2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கோடை விடுமுறையில் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.