News March 9, 2025

இனி அதிமுகவில் நீக்கம் தான்.. இபிஎஸ் எச்சரிக்கை

image

ஜெ., இருந்தபோது திருச்சி அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால், தற்போது திருச்சி அதிமுகவினர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருவதாக இபிஎஸ் எச்சரித்துள்ளார். திமுகவினருடன் தொடர்பில் இருக்கலாம் என்பதை உடனடியாக மறந்து விடுங்கள். இதுதான் கடைசி எச்சரிக்கை. இனி தொடர்பில் இருப்பது தெரியவந்தால் அதிமுகவில் இருந்து நீக்கம் தான் என்று காட்டமாக எச்சரித்துள்ளார்.

News March 9, 2025

ஹாலிவுட் நடிகை தற்கொலையில் புதிய தகவல்

image

பிரபல ஹாலிவுட் நடிகை <<15676803>>பமீலா பாச் <<>>(61) அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மருத்துவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியதில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. 2003ஆம் ஆண்டு பைக் விபத்தில் அவர் சிக்கினார். இதையடுத்து அவர் பலத்த காயமடைந்ததும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொணாத் துயரத்தில் இருந்துள்ளார். மேலும் அத்ரீடிஸ் பிரச்னையாலும் வேதனையில் இருந்துள்ளார்.

News March 9, 2025

இந்திய அணிக்கு ஒரு தொல்லை இல்லை

image

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் நியூசிலாந்தின் மேட் ஹென்றி(10). தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் காயம் அடைந்த அவர் இன்றைய இறுதி போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாததது இந்திய அணிக்கு சற்று சாதகமாக அமையலாம். ஹென்றிக்கு பதில் நேதன் ஸ்மித் அணியில் இடம் பெற்றுள்ளார். டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

News March 9, 2025

ரோகித் மோசமான சாதனை… தொடரும் டாஸ் சோகம்!

image

இந்திய ODI அணியை ரோகித் சர்மா சிறப்பாக வழி நடத்தினாலும், டாஸ் தேர்வு அவருக்கு சாதகமாக அமைய மறுக்கிறது. அவரது தலைமையில் இந்திய ODI அணி தொடர்ச்சியாக 12 போட்டிகளில் டாஸ்-ல் தோற்றுள்ளது. இன்றைய இறுதி ஆட்டம் உட்பட நடப்பு சாம்பியன் டிராபியில் எந்த போட்டியிலும் இந்தியா அணி டாஸ் வென்றதில்லை. அதேநேரத்தில், எந்த போட்டியிலும் இந்தியா தோல்வி அடையாமல் இருக்கிறது. அந்த மேஜிக் இன்றும் தொடருமா?

News March 9, 2025

WPL: கடந்த முறை சாம்பியன்… இந்த முறை சறுக்கல்!

image

WPL தொடரில் நடப்பு சாம்பியன் ஆன பெங்களூரு அணி, இந்த முறை லீக் சுற்றுடன் நடையைக் கட்டியுள்ளது. டெல்லி, குஜராத், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. லீக் சுற்றுடன் வெளியேறியது தொடர்பாக பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, இது நல்ல சீசனாக அமையும் என நினைத்தோம், ஆனால் கடைசி 5 போட்டிகள் நாங்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

News March 9, 2025

மாதம் ரூ.9,000 பென்ஷன்.. மத்திய அரசிடம் கோரிக்கை

image

மாதம் ரூ.9,000 EPFO பென்ஷன் அளிக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மெட்ராஸ் தொழிற்சங்கம், பி&சி மில்ஸ் தொழிற்சங்கம் ஆகியவை மாண்டவியாவிடம் கோரிக்கை மனு அளித்தன. அதில், தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் பென்ஷனை ரூ.1,000இல் இருந்து ரூ.9,000ஆக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

News March 9, 2025

விமான தகர்ப்பு: தீவிரவாதியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

image

கனடாவில் 1985இல் ஏர் இந்தியா விமானம், காலிஸ்தான் தீவிரவாதிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டதில் 329 பேர் பலியாகினர். இதில் குற்றஞ்சாட்டப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட மாலிக், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2022இல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கெனவே டானருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜோஸ் லோபேசுக்கும் ஆயுள் தண்டனை விதித்து பிரிட்டிஷ் கொலம்பியா கோர்ட் உத்தரவிட்டது.

News March 9, 2025

அதிமுக கூட்டத்தில் EPS காட்டம்

image

இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் EPS காட்டமாக பேசியுள்ளார். தனிப்பட்ட பகையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது என்று பேசிய அவர், கூட்டணி தொடர்பாக யாரும் பேசக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில், ராஜேந்திர பாலாஜிக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், ராஜேந்திர பாலாஜியை EPS மறைமுகமாக எச்சரித்ததாகத் தெரிகிறது.

News March 9, 2025

CT FINAL: நியூசிலாந்து முதலில் பேட்டிங்

image

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துபாயில் நடைபெறும் இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை நியூசிலாந்து அணி தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பந்து வீசவுள்ளது.

News March 9, 2025

மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்க திமுக திட்டம்

image

தொகுதி சீரமைப்பினால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம் என்று திமுக MPக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளை ஒருங்கிணைத்து போராட்டக்களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை திமுக MPக்கள் ஏற்றுள்ளனர்.

error: Content is protected !!