India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய பாஜக அரசு இந்தியை திணிப்பதாக பல அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ₹99 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாஜக சார்பில் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், திமுக அமைச்சர் மகனுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை எளியவர்களின் மகனுக்கும் கிடைக்கக் கூடாதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இதன் காரணமாக அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்களும், 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தவெக கட்சி குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்து சரியானது அல்ல என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார். தவெக ஆண்டு விழாவில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தலில் விஜய் கட்சி வெற்றி வாகை சூடும் என கூறியிருந்தார். இது குறித்து பேசிய துரைவைகோ, பணம் கொடுக்கும் கட்சிக்காக பணியாற்றுபவர் என பி.கே.வை விமர்சித்துள்ளார். தவிர, பீஹாரில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள குடூர் ரயில் நிலையம் அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்ற போது, இளைஞர் ஒருவர் சிகப்புத் துணியை காண்பித்து ரயிலை நிறுத்தினார். ஓட்டுநர் இறங்கி வந்து பார்த்த போது அங்கு ரயில் தண்டவாளம் உடைக்கப்பட்டிருந்தது. இளைஞரின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், இது சதிச்செயலா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வருமான வரி செலுத்துவோர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர், சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோர், அரசு ஊழியர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் தற்போதைக்கு இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் மற்றும் லேதம் விக்கெட்டுகளை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர். வருண், ஜடேஜா தலா விக்கெட்டையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 23 ஓவர்களில் 108 ரன்களை நியூசிலாந்து எடுத்துள்ளது.
ஆங்கிலப் பத்திரிகைக்கு அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அப்போது, அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைக்குமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், மாநிலம் முழுவதும் பிரதமரின் பணியை கொண்டு செல்வதும், மாநிலத்தில் பாஜக வளர்ச்சியை உறுதி செய்வதுமே தனது வேலை என்றார். கூட்டணி குறித்து பேச தற்போது சரியான நேரமில்லை, அதுகுறித்து உகந்த நேரத்தில் மேலிடம் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
ஹோலி பண்டிகை மார்ச் 14-ல் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு உ.பி. சம்பலை சேர்ந்த காவல் அதிகாரி அனுஷ் சவுத்ரி கூறி இருந்தார். ‘வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும், ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை தான் ஹோலி வரும்’ என அவர் தெரிவித்தார். அவரது கருத்துக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது கதறி அழுதார். நான் எப்படி இந்த விவகாரத்துக்குள் வந்தேன் என இப்போது வரை புரியவில்லை; நான் இந்தக் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டு விட்டேன். என்னால் தூங்கவே முடியவில்லை என கோர்ட்டில் வழக்கறிஞர்களிடம் கூறி கதறி அழுதார். துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Champions Trophy தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது. தொடக்கத்தில் மெதுவாக விளையாடிய நியூசி., 3 ஓவருக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் அதிரடி காட்ட ஆரம்பித்த வில் யங், ரச்சின் ரவிந்திரா 7.4 ஓவரில் 57 ரன்கள் குவித்தனர். விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா திணறியது. ஆனால், வருண் சக்ரவர்த்தி வீசிய 7 ஓவரின் 5வது பந்தில் யங் 15 ரன்களில் அவுட் ஆகி நடையை கட்டினார்.
Sorry, no posts matched your criteria.