News March 9, 2025

மிக கனமழை வெளுக்கப் போகிறது

image

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 11ஆம் தேதி தமிழகத்தில் பரவலாக மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

News March 9, 2025

ரூ.5000 கோடி சூதாட்டம்..! தாவூத் கும்பலுக்கு தொடர்பு

image

இந்தியா – நியூசிலாந்து இறுதிப் போட்டியை வைத்து ரூ.5000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டத்தில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ‘D கம்பெனி’ ஈடுபட்டு உள்ளது. சூதாட்டம் தொடர்பாக டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

News March 9, 2025

காதல் தோல்வி குறித்து மனம் திறந்த சிவாங்கி

image

பாடகியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியே சிவாங்கிக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. சிரித்த முகம், கலகலப்பான பேச்சு என அனைவரையும் கவர்ந்த சிவாங்கி, தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் காதல் பிரேக்கப் எனக்கு மிகப்பெரிய மன பலத்தை கொடுத்தது. பொண்ணுங்க அதிகமாக லவ் பண்ணா அது நிலைகக்காதுன்னு
புரிஞ்சிக்கிட்டேன் என தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

46 வயதில் கர்ப்பமான நடிகை சங்கீதா

image

நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் சீரியல் நடிகையுமான சங்கீதா, 46 வயதில் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து, அவர் நடத்திய போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியலில் வில்லியாக நடித்த சங்கீதா, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் 2023ஆம் ஆண்டு, காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

News March 9, 2025

உரிமைக்காக குரல் கொடுத்தவருக்கு சவுக்கடி!

image

பெண் உரிமைக்காக குரல் கொடுத்த ஈரானிய பாடகருக்கு கொடூர தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவதில் இருந்து பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கக்காேரி, இவர் வெளியிட்ட பாடல் ஈரான் அரசை ஆத்திரப்படுத்தியது. 2 ஆண்டு சிறை, 74 சவுக்கடி என தண்டனை விதித்தது. அதன்படி அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையறிந்த மனித உரிமை ஆர்வலர்கள், சமூக வலைதளம் மூலம் ஈரான் அரசை கண்டித்து வருகின்றனர்.

News March 9, 2025

CT2025 கண்டிஷன் எப்படி இருக்கிறது?

image

இந்தியா – நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று மதியம் (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது. இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதிக ஸ்கோர் குவியும் போட்டியாக இது இருக்கும். வானிலை மிதமான வெப்பத்துடன் காணப்படுவதால், யார் முதலில் பேட்டிங் செய்வது என்பது குறித்த கவலை இல்லை. மேலும், அங்கு மழைக்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.

News March 9, 2025

விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார்: நடிகை அதிரடி

image

தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முதல் முறையாக நடிகர் விஜய்யின் தவெக களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுக தலைமை அனுமதித்தால் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார் என நடிகை காயத்ரி ரகுராம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

News March 9, 2025

CT2025: கலக்கப் போவது யாரு?

image

CT தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் பல ஜாம்பவான்கள் களம் இறங்குகின்றனர். உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஷுப்மன் கில், ஐசிசி கிங் விராட் கோலி, கோப்பை வெல்லும் கேப்டன் ரோகித் ஷர்மா, மிடில் ஆர்டரில் நிலைத்து நிற்கும் ஷ்ரேயஸ் & ராகுல், ஆல் ரவுண்டர் மன்னன் ஹர்திக் பாண்ட்யா, சுழலில் அலறவிடும் வருண் சக்ரவர்த்தி என அசுர பலத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. இதில் யார் இன்று கலக்குவாங்கனு நீங்க நினைக்குறீங்க?

News March 9, 2025

டெல்லியில் யார்-யாருக்கு மாதம் ரூ.2,500?

image

டெல்லி பெண்களுக்கு யார்-யாருக்கு மாதம் ரூ.2,500 வழங்க அந்த மாநில பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்றத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், டெல்லியில் வசிக்கும் 60 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான தகுதியாக 21 வயது முதல் 60 வயது வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மட்டும் இந்த உதவித் தொகையை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News March 9, 2025

மீண்டும் வெளியான விஜயின் ‘வாடி வாடி’ பாடல்

image

விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் படம் இன்றைக்கும் பலரால் ரசிக்கப்படும் படமாக உள்ளது. தற்போது ரீ-ரிலீஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் சச்சின் படத்தையும் களத்தில் இறக்க தயாரிப்பாளர் = தாணு முடிவெடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறார். அந்தவகையில், ‘வாடி வாடி’ பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். உங்களுக்கு சச்சின் படம் பிடிக்குமா?

error: Content is protected !!