India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொகுதி சீரமைப்பினால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம் என்று திமுக MPக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளை ஒருங்கிணைத்து போராட்டக்களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை திமுக MPக்கள் ஏற்றுள்ளனர்.
திமுக அரசை அகற்றும் வரை கால்களில் செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, ஏற்கெனவே செருப்பு அணிய மாட்டேன் என எடுத்த சபதம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை, 2026 தேர்தலில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை கால்களில் செருப்பு அணிய மாட்டேன், அப்படி அணிந்தால் கேள்வி கேளுங்கள் என பதிலளித்தார்.
ஐபிஎல்லுக்காக சென்னை வந்திருக்கும் தல தோனி பற்றிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களை ஏமாற்ற விரும்பாதவர் போல, எதையாவது செய்து விடுகிறார் தல தோனி. அப்படி அவர் கொடுத்த ஒரு போட்டோ போஸ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. முழு தமிழராகவே மாறிவிட்ட தோனியை பார் என்பது போல வேட்டி சட்டையில் செம போஸ் கொடுத்துள்ளார். ‘பொட்டு வெச்ச தங்கக் குடம்’னு பாட்ட போடுங்க!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 11ஆம் தேதி தமிழகத்தில் பரவலாக மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியா – நியூசிலாந்து இறுதிப் போட்டியை வைத்து ரூ.5000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டத்தில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ‘D கம்பெனி’ ஈடுபட்டு உள்ளது. சூதாட்டம் தொடர்பாக டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பாடகியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியே சிவாங்கிக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. சிரித்த முகம், கலகலப்பான பேச்சு என அனைவரையும் கவர்ந்த சிவாங்கி, தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில் காதல் பிரேக்கப் எனக்கு மிகப்பெரிய மன பலத்தை கொடுத்தது. பொண்ணுங்க அதிகமாக லவ் பண்ணா அது நிலைகக்காதுன்னு
புரிஞ்சிக்கிட்டேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் சீரியல் நடிகையுமான சங்கீதா, 46 வயதில் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து, அவர் நடத்திய போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியலில் வில்லியாக நடித்த சங்கீதா, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் 2023ஆம் ஆண்டு, காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பெண் உரிமைக்காக குரல் கொடுத்த ஈரானிய பாடகருக்கு கொடூர தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிவதில் இருந்து பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கக்காேரி, இவர் வெளியிட்ட பாடல் ஈரான் அரசை ஆத்திரப்படுத்தியது. 2 ஆண்டு சிறை, 74 சவுக்கடி என தண்டனை விதித்தது. அதன்படி அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையறிந்த மனித உரிமை ஆர்வலர்கள், சமூக வலைதளம் மூலம் ஈரான் அரசை கண்டித்து வருகின்றனர்.
இந்தியா – நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று மதியம் (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது. இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதிக ஸ்கோர் குவியும் போட்டியாக இது இருக்கும். வானிலை மிதமான வெப்பத்துடன் காணப்படுவதால், யார் முதலில் பேட்டிங் செய்வது என்பது குறித்த கவலை இல்லை. மேலும், அங்கு மழைக்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.
தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முதல் முறையாக நடிகர் விஜய்யின் தவெக களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அதிமுக தலைமை அனுமதித்தால் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார் என நடிகை காயத்ரி ரகுராம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.