India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தின்போது வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் எலான் மஸ்க் வாக்குவாதம் செய்துள்ளார். அதனை அதிபர் டிரம்ப் வேடிக்கை பார்த்து மெளனமாக இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஒன்றுமே நடக்கவில்லை என கோபத்துடன் அவர் கூறியதும் பேசுபொருளாகியுள்ளது. பணி நீக்கம் தொடர்பாக மஸ்க்குக்கும், ரூபியோவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் கூடிய கறிக்கோழி விலை 1 கிலோவுக்கு ரூ.107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ கோழிக்கறி ரூ.175 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதேபோல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.80ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் முட்டை ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
சிரியாவில் அரசு படையினருக்கும், EX அதிபர் ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. அசாத் ஆதரவாளர்களின் பகுதிக்குள் புகுந்து அரசு பாதுகாப்பு படைகள் 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் 750 பேர் உள்பட இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியுள்ளது. களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை வனக்கோட்டம், ஈர நிலங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் பறவைகளை ஆர்வமுடன் கணக்கெடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் உளவுபார்ப்பதாக சிக்கிய இந்திய கடற்படை EX அதிகாரி குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனை எதிர்கொண்டுள்ளார். அவரை காப்பாற்ற இந்திய அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில், அவரை ஈரானில் இருந்து நயவஞ்சகமாக பாகிஸ்தானுக்கு கடத்திய ISI உளவாளி முஃப்தி ஷா மிர், பலுசிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார். இரவு நேர தொழுகையை முடித்துவிட்டு வரும்போது பைக்கில் வந்த கும்பல் அவரை சுட்டுத் தள்ளியுள்ளது.
ரேஷனில் 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் தருமபுரி, நீலகிரியில் சோதனை முயற்சியாக 2023இல் தொடங்கப்பட்டது. இதை பிற மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்ய மாதம் 1,360 மெட்ரிக் டன் ராகி தேவையாகும். ஆனால் கடந்த 6 மாதத்தில் 690 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விரிவாக்கம் தாமதமாகியுள்ளது. ஜூலை அறுவடைக்கு பின்னர் ராகி கொள்முதல் அதிகரித்த பிறகே விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.
சதுரிகிரிக்கு பக்தர்கள் தினமும் செல்ல ஐகோர்ட் கிளை அனுமதியளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் மாதத்திற்கு 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தினமும் காலை 6 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கலாம் என வனத்துறைக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. மலையில் இரவில் தங்கக்கூடாது என்றும் மீறினால் கைது செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் வாட்ஸ்அப் குரூப்பை விட்டு நீக்கிய அட்மின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாட்ஸ்அப் குரூப் அட்மினாக முஸ்டாக் அகமது என்பவர் இருந்தார். அந்த குரூப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்பக்கை அவர் நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்பக், அகமதை பெஷாவருக்கு தேடிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து தப்பிய அஸ்பக்கை போலீஸ் தேடுகிறது.
புதுக்கோட்டை அருகே கார்-சரக்கு வேன் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. நமணசமுத்திரம் பகுதியில் காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் கார் திரும்பியபோது, சரக்கு வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர், வேனில் இருந்த புதுக்கோட்டை பின்னங்குடியை சேர்ந்த ஒருவர் ஆகியோர் பலியாகினர். குழந்தை உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.
திபெத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கின. இதனால், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜன.7ம் தேதிக்குப் பின், மீண்டும் ஷிகாட்சே நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.