News August 10, 2025

சங்கை அறுப்போம்… கமலுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல்

image

சனாதனத்துக்கு எதிராக பேசிய கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என துணை நடிகர் ரவிச்சந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரும் ஓய்வு பெற்ற ஐஜி-யுமான மவுரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அகரம் நிகழ்ச்சியில் பேசிய கமல் சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி என கமல் கூறியிருந்தார்.

News August 10, 2025

பாக்சிங் ரிங்கில் பலியான 2 வீரர்கள்… சோகம்!

image

ஜப்பானில் பாக்சிங் போட்டியில் 2 வீரர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2-ம் தேதி நடந்த ஒரு போட்டியில், ஷிகெடொஷி கொட்டாரி(28) என்ற வீரர் 12 ரவுண்டுகள் நீடித்த கடுமையான போட்டியில் காயமடைந்து உயிரிழந்தார். அடுத்த நாள் மற்றொரு போட்டியில் ஹிரோமசா உரகாவா(28) என்ற வீரர் அடிப்பட்டு இறந்தார். இந்த இருவருமே தலையில் அடிப்பட்டு மூளை காயமடைந்ததால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. RIP

News August 10, 2025

நாளை வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டு தொகை

image

PM ஃபசல் பிமா திட்டத்தின் கீழ், பயிர்க் காப்பீடு தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை டெபாசிட் செய்யப்படும். இதற்காக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ₹3,200 கோடி தொகையை விடுவிப்பார். நாடு முழுவதும் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், அதிகபட்சமாக ம.பி.,க்கு ₹1,156 கோடி, ராஜஸ்தானுக்கு ₹1,121 கோடி, சத்தீஸ்கருக்கு ₹150 கோடி, இதர மாநிலங்களுக்கு ₹773 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

தூக்கம் அவசியம். ஏன் தெரியுமா?

image

தினசரி குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான தூக்கம் *உடல் செயல்பாடுகளை சீராக்கி புத்துணர்வு அளிக்கும் *மனதை உற்சாகப்படுத்தும், மனச்சோர்வை போக்கும் *நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் *உடல் எடை அதிகரிப்பை தடுக்கும் *படிப்பு, வேலைகளில் கவனக்குவிப்பை, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் *இதயநோய் வரும் ஆபத்தை குறைக்கும்.

News August 10, 2025

தூக்கத்தில் உங்களை யாராவது அமுக்குகிறார்களா?

image

தூங்கும்போது மார்பு மீது யாராவது ஏறி உட்காருவது போன்றும், அப்போது கை, கால்களை அசைக்கவும் முடியாமல், பேசவும் முடியாமல், மூச்சுத்திணறும் நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இதை sleep paralysis என்கின்றனர். இது 2-3 நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். 30% பேருக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது இப்படி நேர்ந்திருக்கும். இதைக் கண்டு பயப்பட வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள். உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா?

News August 10, 2025

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரான பரத் கல்யாண்

image

2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைபெற்றது. தினேஷ், பரத் கல்யான், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்கு நகைச்சுவை நடிகை ஆர்த்தி போட்டியிட்டார். 23 பொறுப்புகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பரத் கல்யாண் 491 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

News August 10, 2025

ஆண் – பெண் உறவு இனி இருக்காது: ஆய்வு

image

2050-க்குள், ஆண் – பெண் உறவை விட, Robots உடனான sex சாதாரண ஒன்றாக மாறிவிடும் என Futurologist இயான் பியர்சன் கணித்துள்ளார். Robotics, AI இணைத்து உருவாக்கப்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் sex robotகள், 2025-க்குள் பணக்கார வீடுகளில் வரத் தொடங்கிவிடும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் பெண்கள் sex-க்கு ஆண்களை தவிர்த்து, Robots-ஐ விரும்பும் நிலை ஏற்படும் என்கிறார். இது மனிதகுலத்துக்கு நல்ல அறிகுறியா?

News August 10, 2025

அஜித்துடன் மோதுகிறாரா இயக்குநர் மிஷ்கின்?

image

‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தெரிகிறது. இதில் ஸ்ரீலீலா, சுவாசிகா என 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனிடையே படத்தின் வில்லனாக மிஷ்கின் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னணி இயக்குனரான மிஷ்கின், சமீபகாலமாக நடிகராக அசத்தி வருகிறார். ‘லியோ’ படத்தில் விஜய்க்கு வில்லனாக மிஷ்கின் நடித்தது குறிப்பிடத்தக்கது.

News August 10, 2025

பூரண மதுவிலக்கு.. பாமக மகளிர் மாநாட்டில் தீர்மானம்

image

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதுவினால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதால் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், நீட் தேர்வில் சோதனை என்ற பெயரில் மாணவிகளை வேதனைக்கு ஆளாக்குவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் அதில் அடங்கும்.

News August 10, 2025

பும்ராவை எதிர்ப்பது நியாயமற்றது: பாரத் அருண்

image

பும்ராவுக்கு எதிராக <<17357241>> முன்னாள் வீரர்கள் <<>>வைக்கும் குற்றச்சாட்டு நியாயமற்றது என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார். பும்ராவுக்கு முதுகில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகச்சிறந்த பவுலராக புகழப்பட்ட பும்ரா, இப்போது விமர்சிக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!