News March 8, 2025

விவாகரத்து.. மனம் திறந்த அமீர்கான்

image

முன்னாள் மனைவிகள் கிரண், ரீனா ஆகியோரை விவாகரத்து செய்தது குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் மனம் திறந்துள்ளார். அவர்கள் 2 பேரும் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய பங்களிப்பு அளித்துள்ளதாகவும், 2 பேர் மீதும் தாம் மிகப்பெரிய மதிப்பு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரண், ரீனா ஆகியோரை விவாகரத்து செய்தபோதிலும், அவர்களின் பெற்றோருடன் தாம் நல்லுறவையே தொடர்வதாகவும் அமீர்கான் கூறியுள்ளார்.

News March 8, 2025

இந்த விலங்கை பார்த்து இருக்கீங்களா?

image

மிகவும் அரிய வகை விலங்கான Clouded Leopard அசாம் காடுகளில் திடீரென தென்பட்டுள்ளது. கிழக்கு இமாலய காடுகளில் இவை அதிகம் காணப்பட்டன. ஆனால், தற்போது இவை அழிந்துவரும் விலங்குகளின் பட்டியலில் ரெட் லிஸ்டில் உள்ளது. மிகவும் அழகான, கூச்ச சுபாவம் கொண்ட இந்த விலங்கினை பாதுகாக்க அசாம் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உங்களில் எத்தனை பேர் இந்த விலங்கை ஏற்கெனவே பார்த்திருக்கீங்க?

News March 8, 2025

BREAKING: மகளிருக்கு முதல்வர் புதிய அறிவிப்பு

image

சென்னையில் இன்று நடந்த மகளிர் தின விழாவில், CM ஸ்டாலின் பங்கேற்றார். அவ்விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினர், சிறந்த தொழில் முனைவோராக உயர்ந்திட வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் 4.42 லட்சம் மகளிருக்கு ரூ.3,190 கோடி வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார். மேலும், காஞ்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மேலும் 9 இடங்களில் ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் ‘தோழி விடுதிகள்’ அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

News March 8, 2025

என்னாது? NZஐ இந்தியா தோற்கடிச்சதே இல்லையா?

image

NZ அணி இதுவரை 6 ICC இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ICC Knock-out டிராபி 2000 & World டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபி 2021 இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. அவை இரண்டிலும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது இந்திய அணி. அதாவது, இந்திய அணி ஒருமுறை கூட ICC தொடர் இறுதிப் போட்டிகளில் NZஐ தோற்கடித்ததில்லை. இந்தியா தவிர வேறு எந்த அணியையும் ICC இறுதிப் போட்டியில் NZ வென்றதில்லை.

News March 8, 2025

பெண்கள் கையில் அதிகாரம்: கமல்ஹாசன்

image

பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் உண்மையான தேசத்தை கட்டமைக்க முடியாது என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். பெண்களின் தலைமை, வலிமை, தொலைநோக்குப் பார்வை நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 106வது சட்ட திருத்தத்தில் உள்ளபடி பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 8, 2025

CT ஃபைனலில் தோற்றால்…. ரோகித் சர்மா முடிவு இதுதான்?

image

CT ஃபைனலில் IND – NZ அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வி அடைந்தால், ODI போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் ஓய்வு பெற்றால், ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் இந்திய ODI அணியை வழிநடத்துவர் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், போட்டியில் வென்றால் ரோகித் சர்மா ஓய்வு பெற மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 8, 2025

தவெகவினர் கைது… விஜய் கொந்தளிப்பு

image

பாலியல் குற்றங்களை தடுக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களுக்கான உரிமையை கேட்டுப் பெற வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதால்தான், தவெக அறவழியில் போராடியது. ஆனால், தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட கூடாது என்ற அராஜகப் போக்குடன் அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தினார்.

News March 8, 2025

ராஜ்யசபா சீட் விவகாரம்… பணிந்தாரா பிரேமலதா?

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கவில்லை என இபிஎஸ் மறுத்தார். இந்த விவகாரம் குறித்து ஜூலை வரை அமைதி காக்க தேமுதிகவிடம் அதிமுக தலைவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

News March 8, 2025

ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்த மாணவர்

image

ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் சாய் சுப்பிரமணியம், பைக் விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு நிலையை அடைந்தார். இந்நிலையில் , அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அவரது பெற்றோர், மருத்துவர்களின் ஆலோசனையின் படி அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதன்படி, மாணவரின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் என 5 உறுப்புகளை ஈந்து 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் சாய்.

News March 8, 2025

ஓய் மலபார்… ரீ-ரிலீஸ் ஆகும் ரவி மோகன் படம்!

image

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாசாரம் அதிகமாகி வருகிறது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ளார் ரவி மோகன். அவரது நடிப்பில் 2004-ல் எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி படம் வெளியாகி ஹிட் அடித்தது. அசின், நதியா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மார்ச் 14-ல் மீண்டும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!