India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் தினத்தில் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு ‘கொலை செய்ய அனுமதி’ கோரி NCP-SP கட்சியின் மகளிரணி தலைவர் ரோகிணி காட்சே பரபரப்பு கடிதத்தை எழுதியுள்ளார். பெண்களை அடக்கும் மனநிலை, பாலியல் வன்கொடுமை செய்யும் மனநிலையில் உள்ளவர்களை பெண்கள் கொலை செய்ய விரும்புகிறார்கள். ஒருவர் ஒரு கொலை செய்வதற்கும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கவும் அனைத்து பெண்களின் சார்பாக வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
கன்ஃபார்ம் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி ரயில் நிலைய பிளாட்ஃபார்ம்-க்கு நேரடியாக செல்ல முடியும். வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்திருப்பவர்களை ரயில் வந்தபிறகே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில்வே முடிவு எடுத்துள்ளது. இதற்காக, ரயில் நிலையங்களுக்கு வெளியே காத்திருப்பு மையம் கட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, டெல்லி ரயில் நிலைய நெரிசலில் 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கர்நாடக அரசும் கட்டக்கூடாது என்று தமிழக அரசும் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கர்நாடகாவில் இருந்து மிரட்டல் வந்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள் அணை கட்ட ஆட்சேபணை இல்லை என்று தமிழக அரசு தெரிவிக்காவிட்டால், கர்நாடகாவில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசாமி (96) இன்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சென்னையிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர். பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்த அவர், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
”நானே ஒரு ஜியோனிஸ்ட்” என்று யூதர்களுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்துவரும் நிலையில், ட்ரூடோவின் இந்தப் பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஜியோனிஸம்’ என்பது கெட்ட வார்த்தை கிடையாது என்று கூறியிருக்கும் அவர், யூதர்களுக்கான உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதற்கு இஸ்ரேல் வரவேற்பு தெரிவித்துள்ளது.
CT தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 6வதாக களமிறங்கி வரும் K.L.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆட்டத்திறன் குறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், ஓபனிங், 4, 5, 6வது வரிசை என எங்கு களமிறங்கினாலும் K.L.ராகுல் சிறப்பாக விளையாடுவார் என பாராட்டியுள்ளார். சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக விளையாடுபவர் அவர் என்றும் பயிற்சியாளர் புகழ்ந்துள்ளார்.
இன்று, நாளையை தொடந்து திங்கள் கிழமையும் இந்த மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் மார்ச் 10ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும்.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விடியல் பயணம் என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் பெண்கள் பயணம் செய்த விவரங்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. அதில், 3.9 ஆண்டுகளில் 643.88 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களும் இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
0 பேலன்ஸ் இருக்கும் வங்கிக் கணக்கு மோசடிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்பதால், அதனை செயலற்றதாக மாற்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர், அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றால், Accountஇல் குறைந்தபட்ச பண இருப்புத் தொகையை விடவும் கூடுதலாக ₹500ஐ செலுத்தி இருப்பில் வைப்பது நல்லது. வங்கிக் கணக்கு செயலற்றதாக இருந்தால் உடனே KYC விண்ணப்பம் கொடுத்து புதுப்பிக்கலாம்.
நாளை சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் நடைபெறுகிறது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அதை, தான் முழுவதுமாக நம்பவில்லை என முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, ‘அரையிறுதியில் நியூசிலாந்தின் வெற்றிக்கு பிறகு, அந்த அணி, இந்தியாவையும் வருத்தமடைய செய்யலாம்’ என தெரிவித்துள்ளார். யார் ஜெயிக்கப் போறாங்க என உங்களுக்கு தோணுது?
Sorry, no posts matched your criteria.