India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பும்ரா இன்னும் முதுகு வலியில் இருந்து மீளவில்லை எனப்படுகிறது. அதன் காரணமாகவே அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் விலகினார். வரும் 22 ஆம் தேதி, IPL தொடங்க இருக்கும் சூழலில், தற்போது MI ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுக்க போகிறார் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. காயத்தில் இருந்து மீளாத அவர், முதல் 4-5 போட்டிகளில் விளையாட மாட்டார் எனப்படுகின்றன. இது நடந்தால், அது MIக்கு பெரிய பின்னடைவு தான்!
கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். சிவகங்கையில் இது தொடர்பாக பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என அதிமுக தலைமை எப்போதும் கூறவில்லை என்றார். மேலும், அண்ணாமலை தங்களை கூறியதாக கருதவில்லை என்றும், அதிமுகவுக்கு யாரையும் நம்பி தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்தும், மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 677 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று 265 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 270 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நேற்றும், இன்றும் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து நேற்றும், இன்றும் தலா 20 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
மகளிர் தினத்தையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு அசத்தியுள்ளது. விண்வெளி முதல் அணு விஞ்ஞானம் வரை பெண்கள் அதிகாரமிக்கவர்களாக உருவெடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் அந்த டூடுல் அமைந்துள்ளது. சர்வதேச தலைவர்களும் மகளிர் தினத்துக்காக வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். பெண்களுக்கான மரியாதை ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கிடைக்க வேண்டும். உங்கள் கருத்து என்ன?
ஒரே போஸ்டால், Swiggyஐ நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த போஸ்டை கவனியுங்கள்.. டீயுடன் மேகியா? அல்லது டீயில் மேகியா? என Swiggy பதிவிட, கொதித்து விட்டனர் டீ பிரியர்கள். ‘இத்துடன் Swiggyஐ டெலிட் செய்கிறேன்’ என சிலரும், ‘இது வயிற்றை கலக்கும்’ என சிலரும் கமெண்ட்களை கொட்டி வருகின்றனர். சில நாள்கள் முன்பு கூட, மேகி X டீ வீடியோ வெளியாகி நெட்டிசன்களை அலற வைத்தது. நீங்க எந்த டீம்!
சிரிக்கும் நோயால் அவதிப்படுவதாக நடிகை லைலா வேதனை தெரிவித்துள்ளார். விக்ரமின் பிதாமகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லைலா. அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னால் ஒரு நிமிடம் கூட சிரிப்பை அடக்க முடியாது என்றும், அப்படி மீறி அடக்கினால் கண்களில் இருந்து கண்ணீர் வழியும் என்றும் தெரிவித்துள்ளார். பிதாமகன் சூட்டிங்கில் 1 நிமிடம் சிரிக்காமல் இருக்க முடியுமா என விக்ரம் சவால் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் X பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழ் பெண்ணும், செஸ் வீராங்கனையுமான வைஷாலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மகளிர் தினத்தையொட்டி அவருக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரியான இவர், பிரதமரின் சமூகவலைதள கணக்குகள் தன் வசம் வந்திருப்பது மிகுந்த பெருமையான விஷயம் என பூரிப்படைந்துள்ளார். பிரக்ஞானந்தாவும் சகோதரிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
35 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்யத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!
சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு ED அனுப்பிய சம்மனை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) சார்பாக பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த வழக்கில் இருந்து கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த வழக்கில் தற்போது ED அனுப்பிய நோட்டீஸை ஐகோர்ட்டும் ரத்து செய்துள்ளது.
ரேஷன் அட்டை குறைதீர்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. மாதந்தோறும் ரேஷன் அட்டை குறைதீர்ப்பு முகாம் அரசால் நடத்தப்படுகிறது. இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படும். அதன்படி, மார்ச் மாதத்திற்கான குறைதீர்ப்பு முகாம் இன்று உணவு பொருள், நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.