News March 8, 2025

6 மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து பேச்சு: இபிஎஸ்

image

பாஜகவால் தேர்தலில் தோற்றோம் என்ற கட்சிகள், தற்போது பாஜகவிடம் கூட்டணி வைக்க தவம் கிடப்பதாக அண்ணாமலை சாடியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கூட்டணி வைக்க தவம் கிடந்ததில்லை, அதிமுக பலம் வாய்ந்த கட்சி, அதிமுகவை குறிப்பிட்டு அண்ணாமலை பேசவில்லை, 6 மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து அதிமுக பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிவித்தார்.

News March 8, 2025

இன்ஸ்டா Influencer ஆகணுமா? காலேஜில் இந்த கோர்ஸ் படிங்க!

image

சோஷியல் மீடியா யூகத்தில் பல Influencerகள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். இதனை வைத்து தற்போது காலேஜ் கோர்ஸும் வந்துவிட்டன. 3 வருட MBA கோர்ஸ், Indian School of Business *3 வருட BA & BBA கோர்ஸ், Symbiosis Centre for Media and Communication, புனே * 3 வருட Bachelor of Digital Strategy, ஜெய்ஹிந்த் காலேஜ், மும்பை போன்ற கல்லூரிகள் டாப் சாய்ஸாக இருக்கலாம். இதுக்கெல்லாமா படிக்கணும் என்ற கேள்வி வருகிறதா?

News March 8, 2025

சமூகத்தை மாற்றுவோம்: அண்ணாமலை

image

மகளிர் தினத்தையொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்களின் சுதந்திரம், பொருளாதாரம், கலாசாரம், அரசியல் போன்ற துறைகளில் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க வேண்டும் என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு, பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும் உறுதியேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 8, 2025

டூரிஸ்ட் பெண்கள் ரேப்: கர்நாடகாவில் அதிர்ச்சி

image

கர்நாடகாவின் கொப்பலில் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை தந்திருக்கிறது. துங்கபத்திரா நதிக்கரையோரம், ஒரு விடுதியில் இஸ்ரேல், அமெரிக்காவைச் சேர்ந்த 2 இளம் பெண்களும், வடமாநிலங்களை சேர்ந்த 3 ஆண்களும் தங்கியிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பெண்களை ரேப் செய்துள்ளனர். தடுக்க வந்த ஆண்களை தாக்கி, கால்வாயில் தள்ளிவிட்டு தப்பியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் விசாரணை நடக்கிறது.

News March 8, 2025

இன்று ஒரு நாள் கொண்டாடி விட்டால் போதுமா..?

image

இன்று முழுவதும் பெண்களுக்கு வாழ்த்துகள் தான்! ஆனால், சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமை முழுவதுமாக வழங்கப்பட்டு விட்டதா? இன்னும் சில கிராமங்களில் பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரும் பெற்றோர்கள் இருக்கிறார்களே! இன்னும் எத்தனை ஆண்டுகள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறப் போகின்றனவோ? இன்று ஒரு நாள் மகளிர் தினம் வாழ்த்துகளை சொல்லி அவர்களை கொண்டாடி விட்டால் போதுமா?

News March 8, 2025

MI ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் பும்ரா?

image

பும்ரா இன்னும் முதுகு வலியில் இருந்து மீளவில்லை எனப்படுகிறது. அதன் காரணமாகவே அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் விலகினார். வரும் 22 ஆம் தேதி, IPL தொடங்க இருக்கும் சூழலில், தற்போது MI ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுக்க போகிறார் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. காயத்தில் இருந்து மீளாத அவர், முதல் 4-5 போட்டிகளில் விளையாட மாட்டார் எனப்படுகின்றன. இது நடந்தால், அது MIக்கு பெரிய பின்னடைவு தான்!

News March 8, 2025

அதிமுக யாருக்காகவும் தவம் இருக்காது: நத்தம் விஸ்வநாதன்

image

கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். சிவகங்கையில் இது தொடர்பாக பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என அதிமுக தலைமை எப்போதும் கூறவில்லை என்றார். மேலும், அண்ணாமலை தங்களை கூறியதாக கருதவில்லை என்றும், அதிமுகவுக்கு யாரையும் நம்பி தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

வார இறுதி விடுமுறை.. 677 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்தும், மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 677 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று 265 பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று 270 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நேற்றும், இன்றும் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து நேற்றும், இன்றும் தலா 20 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

News March 8, 2025

மகளிர் தினம்: கூகுள் சிறப்பு டூடுல்!

image

மகளிர் தினத்தையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு அசத்தியுள்ளது. விண்வெளி முதல் அணு விஞ்ஞானம் வரை பெண்கள் அதிகாரமிக்கவர்களாக உருவெடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் அந்த டூடுல் அமைந்துள்ளது. சர்வதேச தலைவர்களும் மகளிர் தினத்துக்காக வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். பெண்களுக்கான மரியாதை ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கிடைக்க வேண்டும். உங்கள் கருத்து என்ன?

News March 8, 2025

Swiggyன் ஒரே ஒரு போஸ்ட்… கொந்தளிக்கும் டீ பிரியர்கள்!

image

ஒரே போஸ்டால், Swiggyஐ நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த போஸ்டை கவனியுங்கள்.. டீயுடன் மேகியா? அல்லது டீயில் மேகியா? என Swiggy பதிவிட, கொதித்து விட்டனர் டீ பிரியர்கள். ‘இத்துடன் Swiggyஐ டெலிட் செய்கிறேன்’ என சிலரும், ‘இது வயிற்றை கலக்கும்’ என சிலரும் கமெண்ட்களை கொட்டி வருகின்றனர். சில நாள்கள் முன்பு கூட, மேகி X டீ வீடியோ வெளியாகி நெட்டிசன்களை அலற வைத்தது. நீங்க எந்த டீம்!

error: Content is protected !!