News March 8, 2025

லண்டனில் இந்தியாவின் இசை ‘ராஜா’

image

யார் என்னை திட்டினாலும் கவலையில்லை. எனது வேலையை செய்து கொண்டே இருப்பேன்… இந்த வாக்கியத்தை இசைஞானி இளையராஜா சொல்லி இருக்கிறார்; இசை மேதை மொசார்ட்டும் பயன்படுத்தி இருக்கிறார். தற்போது அவர் வரிசையில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்யப் போகிறார் இளையராஜா. அதற்காக லண்டனின் அப்போலோ அரங்கம் அவரது பெயர் தாங்கி தயாராகியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு சிம்பொனி ஒலிக்கப் போகிறது.

News March 8, 2025

சிரியாவில் மீண்டும் சண்டை.. 235 பேர் பலி

image

சிரியாவில் கிளர்ச்சிப் படையினர் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அங்கு சண்டை கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்தது. இந்நிலையில், முன்னாள் அதிபர் அசாத்தின் ஆதரவாளர்கள் அண்மையில் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக கடற்கரையையொட்டிய கிராமப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அரசு ஆதரவு படை தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை 235 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 8, 2025

பாஜகவின் நாடகம் தமிழகத்தில் எடுபடாது: சேகர்பாபு

image

மும்மொழி கொள்கைக்கு ஆதரவான பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை, மக்களே வெகுண்டெழுந்து எதிர்க்கும் நிலை உருவாகும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற துணிவில்லாத தமிழக பாஜகவினர், கையெழுத்து இயக்கம் என நாடகம் போடுவதாகவும் விமர்சித்துள்ளார். பாஜகவின் தந்திரத்தை தமிழக மக்கள் நன்கறிவார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.

News March 8, 2025

BREAKING: 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 10ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. 11ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது.

News March 8, 2025

பெண்களின் அட்வைஸை கொஞ்சம் கேளு ப்ரோ!

image

பெண்களின் ஆலோசனையைக் கேட்கும் ஆண்களுக்கு சிறந்த சிந்தனைத் திறன் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் லாஜிக்குடன், அமைதியாக சிந்திக்கிறார்களாம். அதனால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்களின் கண்ணோட்டத்தில் இருந்து அளிக்கும் ஆலோசனையை கேட்டால், அது ஆண்களுக்கு இன்னும் தங்களின் சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் என ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர். இனி கொஞ்சம் கேளுங்க பாஸ்!

News March 8, 2025

மகளிர் தின ஸ்பெஷல்: பெண் காவலர்களுக்கு லீவு

image

மகளிர் தினத்துக்காக மதுரை மாநகர பெண் போலீஸ்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கி போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பெண்களுக்கு கெளரவம் அளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரையில் பெண் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

News March 8, 2025

IPL-ல் களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்?

image

அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தான் வீரர்களுக்கு IPL தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தான், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் வாய்ப்பு கிடைத்தால், 2026 IPL தொடரில் விளையாடத் தயார் என விருப்பம் தெரிவித்துள்ளார். அவரின் மனைவி பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் என்பதால், அந்நாட்டு குடியுரிமை பெற்று, IPL தொடரில் அமீர் விளையாடலாம் எனப்படுகிறது. அவருக்கு எந்த டீம் கரெக்ட் சாய்ஸ்?

News March 8, 2025

ஆயுதங்கள் வாங்காதீங்க… அமெரிக்கா குடைச்சல்

image

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, அமெரிக்க டாலருக்கு பதிலாக புதிய கரன்சியை உருவாக்க முயற்சிப்பதும் இரு நாட்டு உறவுக்கு நல்லதல்ல என அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்டு அதிருப்தி தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே ரஷ்யாதான் இந்தியாவின் உண்மையான நண்பன். சோ, இந்தியா எப்படி விட்டுத்தரும்?

News March 8, 2025

6 மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து பேச்சு: இபிஎஸ்

image

பாஜகவால் தேர்தலில் தோற்றோம் என்ற கட்சிகள், தற்போது பாஜகவிடம் கூட்டணி வைக்க தவம் கிடப்பதாக அண்ணாமலை சாடியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கூட்டணி வைக்க தவம் கிடந்ததில்லை, அதிமுக பலம் வாய்ந்த கட்சி, அதிமுகவை குறிப்பிட்டு அண்ணாமலை பேசவில்லை, 6 மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து அதிமுக பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிவித்தார்.

News March 8, 2025

இன்ஸ்டா Influencer ஆகணுமா? காலேஜில் இந்த கோர்ஸ் படிங்க!

image

சோஷியல் மீடியா யூகத்தில் பல Influencerகள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். இதனை வைத்து தற்போது காலேஜ் கோர்ஸும் வந்துவிட்டன. 3 வருட MBA கோர்ஸ், Indian School of Business *3 வருட BA & BBA கோர்ஸ், Symbiosis Centre for Media and Communication, புனே * 3 வருட Bachelor of Digital Strategy, ஜெய்ஹிந்த் காலேஜ், மும்பை போன்ற கல்லூரிகள் டாப் சாய்ஸாக இருக்கலாம். இதுக்கெல்லாமா படிக்கணும் என்ற கேள்வி வருகிறதா?

error: Content is protected !!