India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசியில் நடந்த கூட்டத்தில் நேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இன்னொரு முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்திருந்தார். மா.பா. பாண்டியராஜனை போல தாம் கட்சியைக் காட்டி கொடுப்பவன் அல்ல என்றும், அவரை தொலைத்து விடுவேன் என்றும் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். இதுகுறித்து சென்னை சென்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சை சந்தித்து மா.பா. புகார் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அனுமதியின்றி மேடை அமைத்து திண்ணைப் பிரசாரக் கூட்டம் நடத்தியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், மேலும் 19 அதிமுக நிர்வாகிகள் மீதும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2018 என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் ஜூட் அந்தோனி, அடுத்து சிம்புவுடன் இணைவதாக பேசப்பட்டது. ஆனால், வெளியான சிம்பு பட அறிவிப்புகளில் அப்படம் இடம் பெறவில்லை. இந்த சூழலில்தான், இப்படத்தில் ஹீரோவாக SK நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சின்ன சின்ன மாற்றங்களுடன் இப்படத்தில் SK இணைவதாக கூறுகிறார்கள். படத்தை AGS தயாரிக்கிறதாம். சிம்பு ரோலில் SK?
பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது, சுப்மன் கில் விக்கெட் எடுத்ததை கொண்டாடியது இந்திய ரசிகர்களை எரிச்சலடைய செய்தது. தொடர் மீம்ஸ் வந்த நிலையில், அவர் கில்லிடம் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். ‘ஒரு விக்கெட் எடுத்த பிறகு அப்படி கொண்டாடுவது எனது பழக்கம். ஆனால் சிலர் அதை விரும்பவில்லை. எனவே எனது கொண்டாட்டங்கள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.
அரசு கேபிள் நிறுவனத்தில் உள்ள தனியார் டிவி சேனலில் ஆபாசப் படம் ஒளிபரப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் அந்த சேனலில் 1 மணி நேரம் ஆபாசப் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, பட ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசைக் கண்டித்து வரும் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடக்கும் என திமுக அறிவித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தி திணிப்புக்கு எதிராக இந்த கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்ற பெயரில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
அமெரிக்க அதிபராக பைடன் இருந்தவரை உக்ரைனுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. <<15686691>>ஆனால்,<<>> டிரம்ப் அந்த பதவிக்கு வந்த பின் மொத்த காட்சியும் மாறிவிட்டது. ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டன. ஜெலன்ஸ்கியையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து கடுமையாக எச்சரித்தார் டிரம்ப். அதே நேரம் போர் விவகாரத்தில் புதினையே அதிகம் நம்புவதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனால், டிரம்ப் ரஷ்யாவை ஆதரிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோடைக்காலம், பொதுத் தேர்வை முன்னிட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும்படி, மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மின்தடை ஏற்பட்டால் உடனே சரி செய்ய வேண்டும், அவசர காலத்திற்கு ஏற்ப உபகரணங்கள், ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மாரடைப்புகள் தற்போது அதிகளவில் ஏற்பட தொடங்கி விட்டன. சில சோதனைகள் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
மேகதாதுவில் எந்த ரூபத்திலும், யாராலும் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க முடியாது, சட்டம் நம்முடைய பக்கம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய சித்தராமையா, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதும் மேகதாதுவில் அணை கட்டப்படும் எனக் கூறியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.