News March 8, 2025

மகளிர் தினத்தின் வரலாறு தெரியுமா?

image

1909, பிப். 28ல் நியூயார்க்கில் அமெரிக்க சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்த ‘மகளிர் தினம்’ தான் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பதிப்பு. 1917 ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக, விளாடிமிர் லெனின் 1922ல் மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாக அறிவித்தார். அது சோசலிச, கம்யூனிச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1977ல் ஐக்கிய நாடுகள் சபையால் இது உலகளாவிய தினமாக மாறியது.

News March 8, 2025

வட்டியை குறைத்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி

image

ஓராண்டுக்கான MCLR வட்டியை 9.75% இல் இருந்து 9.60%ஆக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி குறைத்துள்ளது. இதேபோல், RLLR உடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை 9.45%இல் இருந்து 9.25%ஆகவும் அந்த வங்கி குறைத்துள்ளது. இதனால் அந்த வங்கியில் பெறப்பட்ட வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது. RBI ரெப்போ வட்டியை குறைத்ததும், எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்டவை வட்டியை குறைத்தன.

News March 8, 2025

ஆங்கிலம் அடிமை மொழி: மதுரை ஆதீனம்

image

ஆங்கில வழி பள்ளிகளை மூடிவிட்டு தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். குமரியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பேசிய அவர், ஆங்கிலம் அடிமை மொழி, அதனை தவிர மற்ற அனைத்து மொழிகளையும் கற்கலாம் என்றார். நம்மை இத்தனை ஆண்டுகாலம் அடிமைகளாக வைத்திருந்த ஆங்கில மொழியை கற்பதை பெருமையாக நினைக்கக்கூடாது என்றும், தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 8, 2025

பெண்மையின் மகத்துவத்தை போற்றிட உறுதியேற்போம்

image

சர்வதேச மகளிர் தினம் இன்று. தாய், மனைவி, சகோதரி, மகள் என பெண்களை மையப்படுத்தியே இயற்கையில் ஆண்களின் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. தாயின் தியாகமும், மனைவியின் அர்ப்பணிப்பாலும் மட்டுமே இங்கு பல ஆண்களின் வெற்றி சாத்தியப்பட்டுள்ளது. இருப்பினும், இன்றைய நவீன காலகட்டத்தில் கூட பெண்களுக்கான சம உரிமை கிடைத்ததா? என்றால் சந்தேகம் தான். எனவே, இன்றைய நாளில் பெண்மையின் மகத்துவத்தை போற்றிட உறுதியேற்போம்.

News March 8, 2025

பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று விடுமுறை இல்லை

image

மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது. அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் திறக்கப்பட்டு இருக்கும். வழக்கம் போல வேலைநாளாக கருதப்பட்டு, பத்திரப்பதிவுகள் நடைபெறும்.

News March 8, 2025

சனியன்று சொல்ல வேண்டிய கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்

image

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

பொருள்:
ஓம், தாமோதரனை தியானிப்போம்!
ருக்மணியிடம் லீலை செய்தவனே!
கிருஷ்ணா, என் மனதை ஒளிரச் செய்யுங்கள்!

News March 8, 2025

UK அரசின் நேர்மையை இதை வைத்து கணிக்கலாம்

image

லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் காரை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்க முயன்றது UK அரசின் அலட்சியத்தை காட்டுவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வைத்து மட்டுமே அந்நாட்டின் நேர்மையை கணிக்க முடியும் எனவும், பிரிட்டனில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில், காலிஸ்தானிகளின் மிரட்டல்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது.

News March 8, 2025

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?

image

காலை உணவு என்பது உடல் ஆரோக்யத்திற்கு முக்கியமான ஒன்று. அதைத் தவிர்த்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு, வளர்சிதை மாற்றம், செரிமானம் சார்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என கூறுகின்றனர். மேலும், அல்சர், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படும். எனவே, காலையில் எழுந்த 2 மணி நேரத்திற்குள் உணவை உண்பது நல்லது என அறிவுறுத்துகின்றனர்.

News March 8, 2025

இன்று மகளிர் உரிமைத் தொகை?

image

பெண்களுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை தமிழக அரசால் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மகளிர் தினமாகும். ஆதலால் வழக்கமாக செலுத்தப்படுவது போல 15ஆம் தேதி அல்லாமல் முன்கூட்டியே இன்று வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 டெபாசிட் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியத்திற்குள் இது தெரிய வந்துவிடும்.

News March 8, 2025

நாடு முழுவதும் OLA ஷோரூம்களில் ரெய்டு

image

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வர்த்தகச் சான்றிதழ்களை பெறவில்லை என கூறி, நாடு முழுவதும் உள்ள OLA ஷோரூம்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். பதிவு செய்யப்படாத வாகனங்களை காட்சிப்படுத்த, டெஸ்ட் ரெய்டு வழங்க இச்சான்றிதழ் கட்டாயம் என்பதால், சான்றிதழ் இல்லாத ஷோரூம்களை அதிகாரிகள் மூடியதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தாங்கள் விதிமுறைகளை மீறுவதாக கூறுவது தவறானது என OLA விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!