News March 8, 2025

‘சென்னை-28’ 3ஆம் பாகம் உருவாகிறதா?

image

‘சென்னை-28’ படத்தின் 3ஆம் பாகம் இயக்கும் பணிகளில் இயக்குநர் வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் 2 பாகங்களிலும் நடித்த மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோரே இந்த படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், கடந்த 2007ல் வெளியான இப்படத்தின் முதல் பாகம் மெகா வெற்றியடைந்த நிலையில், 2ஆம் பாகம் கடந்த 2016ல் வெளியானது.

News March 8, 2025

தாடி வெச்ச ஆண்கள்தான் சொக்கத்தங்கமாம்..!

image

தாடி வைத்த ஆண்களை விட க்ளீன் ஷேவில் இருக்கும் ஆண்களே ‘பெர்ஃபெக்ட்’ என்று நினைக்கும் மனப்பான்மை பலரிடம் இருக்கிறது. ஆனால், தாடி வைத்திருக்கும் ஆண்கள்தான், ஒரே பெண் பார்ட்னருடன் கடைசி வரை இருப்பதாக வார்சா யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயத்தில், க்ளீன் ஷேவ் ஆண்கள் அடிக்கடி புதிய பார்ட்னர்களை தேடுபவராகவும், பார்ட்னர்களை மாற்றுபவர்களாகவும் இருக்கிறார்களாம். உங்க அனுபவம் என்ன?

News March 8, 2025

நம்மை சூழ்ந்து இருக்கும் பெரிய ஆபத்து: பிரதமர்

image

உடல் பருமன் என்ற பெரிய ஆபத்து இந்தியர்களை சூழ்ந்திருப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 2050க்குள் 44 கோடி மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்ற அறிக்கையை சுட்டிக்காட்டி, அனைத்து வியாதிகளுக்கும் மூல காரணமாக உடல் பருமன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, சமையல் எண்ணெய் பயன்படுத்துவதை 10% குறைக்க இந்தியர்கள் உறுதிமொழி எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 8, 2025

INDக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது? கோச் காட்டம்

image

CT தொடரில் ஒரே மைதானத்தில் விளையாடியதால் IND அணிக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது என அணியின் பேட்டிங் கோச் சிதன்ஷு கோடாக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு அணி சிறப்பாக விளையாடி இருந்தால், இது போன்ற புகார்களை தெரிவித்திருக்காது எனவும், தோல்வியடைந்ததால் ஏதாவது ஒரு காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். போட்டியை வெல்ல சிறப்பாக ஆட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News March 8, 2025

போரை நிறுத்தாவிட்டால்.. ரஷ்யாவிற்கு டிரம்ப் வார்னிங்

image

உக்ரைன் இடையிலான அமைதி எட்டப்படும் வரையில், ரஷ்யா மீது பெரிய அளவிலான வணிக தடை மற்றும் வரியை விதிக்க பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதனால், உக்ரைனும், ரஷ்யாவும் தாமதமின்றி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நேற்று இரவு கடுமையான தாக்குதலை மேற்கொண்ட நிலையில், டிரம்பின் இந்த எச்சரிக்கை அழைப்பு வந்துள்ளது.

News March 8, 2025

மாவீரன் அலெக்சாண்டர் பொன்மொழிகள்

image

*ஒரு ஆட்டால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் படைக்கு நான் அஞ்சவில்லை, ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் ஆடுகளின் படைக்கு நான் அஞ்சுகிறேன். *முயற்சி செய்பவருக்கு சாத்தியமற்றது என்று எதுவுமில்லை. *ஒரு நீண்ட இழிவான வாழ்க்கையை விட, ஒரு பெருமைக்குரிய குறுகிய வாழ்க்கையே மேலானது. *உண்மையான காதல் ஒருபோதும் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்காது, ஏனெனில் உண்மையான காதலுக்கு முடிவே இல்லை.

News March 8, 2025

இந்தியாவை உதவிக்கு அழைத்த சீனா

image

அமெரிக்கா அதிக வரியை விதிக்கும் நிலையில், ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியா- சீனா இணைந்து பணியாற்ற வேண்டிய காலமிது என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அழைப்பு விடுத்துள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான டிராகனும் (சீனா), யானையும் (இந்தியா) இணைந்தால், அது வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாங் யீ அழைப்பிற்கு இந்தியா இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.

News March 8, 2025

திருமணம் செய்யாதது ஏன்? சோனா பதில்

image

கிளாமர் ஹீரோயின் என்பதால் தன்னை யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லையோ என தோன்றுவதாக நடிகை சோனா தெரிவித்துள்ளார். தன்னிடம் பழகியவர்கள் எல்லாம் தன்னை பயன்படுத்தி கொள்ளவே பார்த்தார்கள் எனவும், ஆனால் யாரும் திருமணம் குறித்து பேசவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதையெல்லாம் கேட்டு பல முறை சண்டையிட்டுள்ளதாகவும், கடந்த 8 ஆண்டுகளாக குடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 200 ▶குறள்: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். ▶பொருள்: சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

News March 8, 2025

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய இளம் சிங்கம்

image

மாண்டினீக்ரோவில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ப்ரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்லோவேனியாவைச் சேர்ந்த மேடிக் லெவ்ரெனிக் உடனான இறுதிப்போட்டியை டிரா செய்ததன் மூலம், அவர் இப்பட்டத்தை தக்க வைத்துள்ளார். உலகின் பெருமைமிகு சாம்பியன்ஷிப் பட்டியலில் இடம்பிடித்ததாக விஸ்வநாதன் ஆனந்த் அவரை வாழ்த்தியுள்ளார்.

error: Content is protected !!