India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வர்த்தகச் சான்றிதழ்களை பெறவில்லை என கூறி, நாடு முழுவதும் உள்ள OLA ஷோரூம்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். பதிவு செய்யப்படாத வாகனங்களை காட்சிப்படுத்த, டெஸ்ட் ரெய்டு வழங்க இச்சான்றிதழ் கட்டாயம் என்பதால், சான்றிதழ் இல்லாத ஷோரூம்களை அதிகாரிகள் மூடியதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தாங்கள் விதிமுறைகளை மீறுவதாக கூறுவது தவறானது என OLA விளக்கம் அளித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் நேற்று நுரையீரல் பரிசோதனை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு நுரையீரல் செயல்பாடு தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், CT ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைகளுக்கு பிறகு அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இது வழக்கமான பரிசோதனைதான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை இளையராஜா இன்று லண்டனில் நடத்த உள்ளார். வேலியன்ட் என்ற தலைப்பில் தான் இயற்றியிருக்கும் சிம்பொனியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக நடத்த உள்ளார். இதன் மூலம், இந்திய இசை மரபை கலக்காமல், மேற்கத்திய செவ்வியல் இசை மரபின் தூய சிம்பொனியை அமைத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை அவர் இன்று படைக்க இருக்கிறார். இசைஞானியை வாழ்த்தலாமே ஃப்ரண்ட்ஸ்.
மத்திய அரசு அறிவித்த படி, மணிப்பூரில் இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் வழக்கம் போல் செயல்பட உள்ளது. ஆனால், மலைப்பகுதி மக்களுக்கு தனி நிர்வாகம் (அ) யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க பழங்குடி அமைப்புகள் போர்க் கொடி தூக்கியுள்ளன. இதற்கு மெய்தி அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, மலைப்பகுதியை நோக்கிய பேரணியை அறிவித்துள்ளதால், பதற்றம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது.
ICCயின் நாசகார விதிகளால் ODI கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக முன்னாள் ENG வீரர் கருத்து தெரிவித்துள்ளார். பவர்பிளே முடிந்த பின்னரும், ஒரு ஃபீல்டரை சர்கிளுக்குள் நிறுத்தலாம் என்ற விதி இருப்பதாலும், டி20 போட்டிகளின் வருகையாலும் ODI அந்த நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறுகிறார். டி20யில் விளையாடுவதற்காகவே, வீரர்கள் ODIயில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘சென்னை-28’ படத்தின் 3ஆம் பாகம் இயக்கும் பணிகளில் இயக்குநர் வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் 2 பாகங்களிலும் நடித்த மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோரே இந்த படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், கடந்த 2007ல் வெளியான இப்படத்தின் முதல் பாகம் மெகா வெற்றியடைந்த நிலையில், 2ஆம் பாகம் கடந்த 2016ல் வெளியானது.
தாடி வைத்த ஆண்களை விட க்ளீன் ஷேவில் இருக்கும் ஆண்களே ‘பெர்ஃபெக்ட்’ என்று நினைக்கும் மனப்பான்மை பலரிடம் இருக்கிறது. ஆனால், தாடி வைத்திருக்கும் ஆண்கள்தான், ஒரே பெண் பார்ட்னருடன் கடைசி வரை இருப்பதாக வார்சா யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேசமயத்தில், க்ளீன் ஷேவ் ஆண்கள் அடிக்கடி புதிய பார்ட்னர்களை தேடுபவராகவும், பார்ட்னர்களை மாற்றுபவர்களாகவும் இருக்கிறார்களாம். உங்க அனுபவம் என்ன?
உடல் பருமன் என்ற பெரிய ஆபத்து இந்தியர்களை சூழ்ந்திருப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 2050க்குள் 44 கோடி மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்ற அறிக்கையை சுட்டிக்காட்டி, அனைத்து வியாதிகளுக்கும் மூல காரணமாக உடல் பருமன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, சமையல் எண்ணெய் பயன்படுத்துவதை 10% குறைக்க இந்தியர்கள் உறுதிமொழி எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
CT தொடரில் ஒரே மைதானத்தில் விளையாடியதால் IND அணிக்கு என்ன நன்மை கிடைத்துவிட்டது என அணியின் பேட்டிங் கோச் சிதன்ஷு கோடாக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு அணி சிறப்பாக விளையாடி இருந்தால், இது போன்ற புகார்களை தெரிவித்திருக்காது எனவும், தோல்வியடைந்ததால் ஏதாவது ஒரு காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார். போட்டியை வெல்ல சிறப்பாக ஆட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
உக்ரைன் இடையிலான அமைதி எட்டப்படும் வரையில், ரஷ்யா மீது பெரிய அளவிலான வணிக தடை மற்றும் வரியை விதிக்க பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதனால், உக்ரைனும், ரஷ்யாவும் தாமதமின்றி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நேற்று இரவு கடுமையான தாக்குதலை மேற்கொண்ட நிலையில், டிரம்பின் இந்த எச்சரிக்கை அழைப்பு வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.