India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகின் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் ரயில் இந்தியாவில் வரும் மே மாதம் முதல் சேவையை தொடங்கும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். நிலக்கரி, டீசலை விடுத்து, பசுமையான எரிபொருளுக்கு மாறும் விதமாக, பல ஐரோப்பிய நாடுகள் ஹைட்ரஜன் ரயிலை இயக்கி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் இணையவிருக்கிறது. இந்த ரயில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரானது என்று அமைச்சர் பெருமைப்பட தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நாகசாகியில் ஆண் நண்பரை கொலை செய்த குற்றத்துக்காக 54 வயது பெண்ணை போலீஸ் கைது செய்துள்ளனர். ஆண் நண்பருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த அப்பெண், ஒருநாள் இரவு, நிர்வாணமாக இருந்த ஆண் நண்பரை ‘வெளியே போ’ என பால்கனியில் தள்ளி கதவை சாத்தியுள்ளார். இரவு முழுதும் குளிரில் ஆடையின்றி கிடந்த அந்நபர், அடுத்த நாள் உயிரிழந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த இக்கொலை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று, சென்னை காரப்பாக்கத்தில் மாணவர்களின் கைகளைப் பிடித்து இழுத்து பாஜகவினர் கையெழுத்து பெற்றதாக குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு போலீசில் புகார் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், தென் ஆப்ரிக்கா அணிக்கு 261 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி. வதோதராவில் டாஸ் வென்ற SAM அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய AUSM அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக வாட்சன் 122* (61), ஃபெர்குசன் 85 (43), டங்க் 34* (16) ரன்கள் குவித்தனர். SAM தரப்பில் அல்விரோ பீட்டர்சன் மட்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
‘ஹெல்த் கான்ஷியஸ்’ என்ற பெயரில் சிலர் மதுவில் டயட் சோடாவை கலந்து குடிப்பார்கள். ஆனால், இது ஆபத்தை ஏற்படுத்தும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அதாவது, வெறும் சோடாவை கலந்து குடிப்பவர்களை விட, டயட் சோடா கலந்து அருந்துவோரின் ரத்தத்தில் மிக விரைவாக ஆல்கஹால் கலந்து மிதமிஞ்சிய போதையை ஏற்படுத்தி விடுகிறதாம். டயட் சோடாவில் சர்க்கரை குறைவாக இருப்பதால், ரத்தம் விரைவாக ஆல்கஹாலை உறிஞ்சி விடுகிறதாம்.
ஹைட்ரஜன் ரயில்கள் என்பது அடிப்படையில் மின்சார ரயில்கள்தான். ஆனால், மின்சாரத்தை கம்பிகளில் எடுப்பதற்கு பதிலாக தானே உற்பத்தி செய்யும். ரயிலில் நிரப்பப்படும் ஹைட்ரஜன் எரிவாயு, காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் கலக்கும்போது மின்சாரம் உற்பத்தியாகிறது. அது ரயிலை இயக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயிலில் இருந்து, நீராவி மட்டுமே கழிவாக வெளியேற்றப்படுகிறது.
தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. துபாயில் இருந்து ₹12.86 கோடி மதிப்புள்ள, 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த ஆண்டு மட்டும் அவர் 27 முறை துபாய் சென்று வந்ததது தெரியவந்துள்ளது.
செல்வம் மற்றும் ஞானத்தின் அதிபதியாக விளங்கும் குரு பகவான் வரும் மே 15ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குருபெயர்ச்சியானது மேஷம், மிதுனம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரப் போகிறது. குருபெயர்ச்சிக்கு பிறகு அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் மதிப்பும், சமூகத்தில் அந்தஸ்தும் உயரும். பணவரவு செழிக்கும். சம்பளம், பதவி உயர்வு உண்டு.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ், 8 மாதங்களில் ₹5.4 கோடியை இழந்து தத்தளிக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ₹1,608ஆக இருந்த ரிலையன்ஸ் பங்குகளின் விலை, இன்று ₹1,246ஆக குறைந்துள்ளது (சுமார் 25%). வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றதே இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. Nifty Indexஇன் தொடர் சரிவுக்கு ரிலையன்ஸ் முக்கிய காரணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாகின் சகோதரர் வினோத் சேவாக் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்திவரும் ஜல்தா ஃபுட்ஸ் நிறுவனம், ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் பொருள் வாங்கியதற்காக ₹7 கோடிக்கு செக் கொடுத்துள்ளது. அது பவுன்ஸ் ஆனதால், செக் மோசடி வழக்கில் வினோத் சேவாக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.