News March 8, 2025

அரசு கேபிளில் ஆபாச படம் ஒளிபரப்பு.. புதிய சர்ச்சை

image

அரசு கேபிள் நிறுவனத்தில் உள்ள தனியார் டிவி சேனலில் ஆபாசப் படம் ஒளிபரப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து ஒளிபரப்பாகும் அந்த சேனலில் 1 மணி நேரம் ஆபாசப் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, பட ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2025

திருவள்ளூர் செல்கிறார் CM ஸ்டாலின்

image

மத்திய அரசைக் கண்டித்து வரும் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடக்கும் என திமுக அறிவித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தி திணிப்புக்கு எதிராக இந்த கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்ற பெயரில் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

News March 8, 2025

உக்ரைனா? ரஷ்யாவா? டிரம்ப் யார் பக்கம்…

image

அமெரிக்க அதிபராக பைடன் இருந்தவரை உக்ரைனுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. <<15686691>>ஆனால்,<<>> டிரம்ப் அந்த பதவிக்கு வந்த பின் மொத்த காட்சியும் மாறிவிட்டது. ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டன. ஜெலன்ஸ்கியையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து கடுமையாக எச்சரித்தார் டிரம்ப். அதே நேரம் போர் விவகாரத்தில் புதினையே அதிகம் நம்புவதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனால், டிரம்ப் ரஷ்யாவை ஆதரிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

News March 8, 2025

தடையில்லா மின்சாரம்: EB உத்தரவு

image

கோடைக்காலம், பொதுத் தேர்வை முன்னிட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும்படி, மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மின்தடை ஏற்பட்டால் உடனே சரி செய்ய வேண்டும், அவசர காலத்திற்கு ஏற்ப உபகரணங்கள், ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

News March 8, 2025

ஆரம்பத்திலேயே மாரடைப்பைக் கண்டறிய..

image

மாரடைப்புகள் தற்போது அதிகளவில் ஏற்பட தொடங்கி விட்டன. சில சோதனைகள் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.

News March 8, 2025

மேகதாதுவில் அணைக்கு வாய்ப்பில்லை: துரைமுருகன்

image

மேகதாதுவில் எந்த ரூபத்திலும், யாராலும் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க முடியாது, சட்டம் நம்முடைய பக்கம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய சித்தராமையா, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதும் மேகதாதுவில் அணை கட்டப்படும் எனக் கூறியிருந்தார்.

News March 8, 2025

இறுதிப் போட்டியில் வருண் அச்சுறுத்தலாக இருப்பார்: ஸ்டீட்

image

CT இறுதிப்போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என நியூசிலாந்து தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார். அவருடைய ஓவரில் விக்கெட் இழப்பை தடுக்கவும், ரன் குவிப்பது தொடர்பாகவும் வீரர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சை NZ வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்றாலும், தாங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 8, 2025

ஹேக்மேன் மரணத்துக்கான காரணம் இதுதான்

image

ஹாலிவுட் நடிகர் <<15631267>>ஹேக்மேன்<<>>, மனைவி அமெரிக்க வீட்டில் பிப்.26ஆம் தேதி சடலமாக கிடந்தனர். 2 பேரின் உடல்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஹேக்மேன் இதய நோயால் இறந்ததும், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மனைவி ஹான்டாவைரஸ் தொற்றால் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி மரணித்ததும் தெரிய வந்துள்ளது. இதயநோய் தீவிரம் அதிகம் இருந்ததால் மனைவி இறந்தது ஹேக்மேனுக்கு தெரியாது எனவும் கூறப்படுகிறது.

News March 8, 2025

அமெரிக்காவுக்குள் நுழைய பாகிஸ்தானியர்களுக்கு தடை?

image

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வெளியுறவு விவகாரங்களில் அதிரடியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. உக்ரைனுக்கான உதவிகள் நிறுத்தம், உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என அதிரடி காட்டி வரும் டிரம்ப், அடுத்ததாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

News March 8, 2025

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு ஜாக்பாட்

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் பொதுமக்கள் கட்டணமில்லாமல் சுற்றிப்பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்று கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!