India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூரில் வீட்டு வாடகை வேகமாக உயர்வதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப வெளிமாநிலம், வெளிநாடுகளில் பலர் வேலை செய்து வருகின்றனர். அதிலும் IT Hub ஆன பெங்களூருவுக்கு தமிழக இளைஞர்கள் படையெடுத்துள்ளனர். தற்போது, மாத சம்பளத்தை விட வீட்டு வாடகை உயர்ந்திருக்கும் தகவல் அவர்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
துபாயில் நாளை நடைபெறவுள்ள CT இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மழையின் காரணமாகவோ அல்லது வேறு காரணத்தினாலோ பாதிக்கப்பட்டால் ICC விதிப்படி அடுத்த நாள் (மார்ச் 10) மீண்டும் நடத்தப்படும். அன்றைய தினமும் போட்டி நடைபெறாமல் போகும்பட்சத்தில், இந்தியா- நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன்ஸ் டிராபி பகிர்ந்து அளிக்கப்படும்.
கூகுள் நிறுவனத்தின் தலைவரே இருமொழிக் கொள்கையில் படித்தவர்தான் என திமுக MP தயாநிதி மாறன் கூறியுள்ளார். வடமாநிலத்தவர்களுக்கு மும்மொழிக் கொள்கை இல்லாத போது, தமிழக மாணவர்கள் மட்டும் ஏன் மூன்று மொழிகள் படிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக எந்த மொழிக்கும் எதிரான கட்சி இல்லை என்றும், இதுவரை 2 மொழிகளில் படித்துதான் தமிழக மாணவர்கள் பலதுறைகளில் சாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டில் 4 மாத இடைவெளிக்குள் இந்தியாவுக்கு இன்னொரு உலக செஸ் சாம்பியன் கிடைத்திருக்கிறார். அவர் தான் கிராண்ட் மாஸ்டர் பிரனவ் வெங்கடேஷ். பெட்ரோவாக் உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில், ஸ்லோவேனியாவின் மேடிக்கை வீழ்த்தி பட்டம் பெற்றுள்ளார். இறுதி ஆட்டத்தில் டிரா செய்து புதிய செஸ் நாயகனாக உருவெடுத்துள்ளார். அவரை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்தியுள்ளார். நாமும் வாழ்த்துவோம்.
சிறுமி உதட்டை தொடுவது போக்சோ குற்றமில்லை என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சிறுமி அருகே படுத்தது, உதட்டை அழுத்திய விவகாரத்தில், போக்சோவின் கீழ் பதிவான வழக்கை எதிர்த்து ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் தீர்ப்பளித்த ஐகோர்ட், சிறுமிக்கு இது கண்ணியக் குறைவே, எனினும், பாலியல் எண்ணமில்லாமல் இதை செய்வது போக்சோ வரம்பிற்குள் வராது என தெரிவித்தது.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான HYUNDAI, சூப்பர் டிலைட் மார்ச் என்ற பெயரில் விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன்படி, வென்யூ மாடல் கார்களுக்கு ரூ.55,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எக்ஸ்டர் மாடலுக்கு ரூ.35,000 வரையும், ஐ 20 மாடலுக்கு ரூ.50,000, கிரான்ட் ஐ 10 நியோஸ் மாடலுக்கு ரூ.53,000 வரையும் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதேநேரத்தில் கிரெட்டா மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவிக்கவில்லை.
உடல்நலக் குறைவு காரணமாக தனக்கு ஆபரேஷன் நடைபெற்றதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறிய அவர், கடந்த 2 மாதங்களாக முழங்கால் வலியால் மிகவும் அவதிப்பட்டேன். வலி நிவாரணி மாத்திரை, முழங்கால் பிரேஸ் உள்ளிட்டவை எடுத்து சமாளித்து பார்த்தேன். ஆனால் முடியவில்லை. இதனால் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
யார் என்னை திட்டினாலும் கவலையில்லை. எனது வேலையை செய்து கொண்டே இருப்பேன்… இந்த வாக்கியத்தை இசைஞானி இளையராஜா சொல்லி இருக்கிறார்; இசை மேதை மொசார்ட்டும் பயன்படுத்தி இருக்கிறார். தற்போது அவர் வரிசையில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்யப் போகிறார் இளையராஜா. அதற்காக லண்டனின் அப்போலோ அரங்கம் அவரது பெயர் தாங்கி தயாராகியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு சிம்பொனி ஒலிக்கப் போகிறது.
சிரியாவில் கிளர்ச்சிப் படையினர் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அங்கு சண்டை கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்தது. இந்நிலையில், முன்னாள் அதிபர் அசாத்தின் ஆதரவாளர்கள் அண்மையில் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக கடற்கரையையொட்டிய கிராமப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அரசு ஆதரவு படை தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை 235 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவான பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை, மக்களே வெகுண்டெழுந்து எதிர்க்கும் நிலை உருவாகும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற துணிவில்லாத தமிழக பாஜகவினர், கையெழுத்து இயக்கம் என நாடகம் போடுவதாகவும் விமர்சித்துள்ளார். பாஜகவின் தந்திரத்தை தமிழக மக்கள் நன்கறிவார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.