News March 8, 2025

பெண்கள் கையில் அதிகாரம்: கமல்ஹாசன்

image

பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் உண்மையான தேசத்தை கட்டமைக்க முடியாது என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். பெண்களின் தலைமை, வலிமை, தொலைநோக்குப் பார்வை நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 106வது சட்ட திருத்தத்தில் உள்ளபடி பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 8, 2025

CT ஃபைனலில் தோற்றால்…. ரோகித் சர்மா முடிவு இதுதான்?

image

CT ஃபைனலில் IND – NZ அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வி அடைந்தால், ODI போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் ஓய்வு பெற்றால், ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் இந்திய ODI அணியை வழிநடத்துவர் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், போட்டியில் வென்றால் ரோகித் சர்மா ஓய்வு பெற மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 8, 2025

தவெகவினர் கைது… விஜய் கொந்தளிப்பு

image

பாலியல் குற்றங்களை தடுக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினர் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களுக்கான உரிமையை கேட்டுப் பெற வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதால்தான், தவெக அறவழியில் போராடியது. ஆனால், தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட கூடாது என்ற அராஜகப் போக்குடன் அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தினார்.

News March 8, 2025

ராஜ்யசபா சீட் விவகாரம்… பணிந்தாரா பிரேமலதா?

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கவில்லை என இபிஎஸ் மறுத்தார். இந்த விவகாரம் குறித்து ஜூலை வரை அமைதி காக்க தேமுதிகவிடம் அதிமுக தலைவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதிலளிக்காமல் சென்றுள்ளார்.

News March 8, 2025

ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்த மாணவர்

image

ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் சாய் சுப்பிரமணியம், பைக் விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு நிலையை அடைந்தார். இந்நிலையில் , அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அவரது பெற்றோர், மருத்துவர்களின் ஆலோசனையின் படி அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதன்படி, மாணவரின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் என 5 உறுப்புகளை ஈந்து 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் சாய்.

News March 8, 2025

ஓய் மலபார்… ரீ-ரிலீஸ் ஆகும் ரவி மோகன் படம்!

image

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாசாரம் அதிகமாகி வருகிறது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ளார் ரவி மோகன். அவரது நடிப்பில் 2004-ல் எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி படம் வெளியாகி ஹிட் அடித்தது. அசின், நதியா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மார்ச் 14-ல் மீண்டும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2025

இதுதான் சிம்பொனி…! ராஜா ராஜாதான்…!

image

லண்டனில் இன்றிரவு சிம்பொனி அரங்கேற்றம் செய்கிறார் இளையராஜா. சிம்பொனி என்றால் என்னவென்று அறிய வேண்டாமா?. நீண்ட நேரம் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் பல இசைக் கருவிகளில் இசைக்கப்படும் பெரும் இசைக் கோர்வை-ஐ சிம்பொனி என்கிறோம். அந்த இசை, காற்றில் கலந்து மெல்லமெல்ல பார்வையாளர்கள் மனதை கவரும். மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை, 1730 – 1820 காலக்கட்டத்தில் அறிமுகமாகியுள்ளது.

News March 8, 2025

கூட்டணிக்காக தவமா? சான்ஸே இல்லை: இபிஎஸ்

image

அதிமுக எந்தவொரு கட்சியின் கூட்டணிக்காகவும் தவம் கிடந்ததில்லை என இபிஎஸ் கூறியுள்ளார். பாஜக நோட்டா கட்சி, அதனுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றோம் என்றவர்கள், இன்று கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள் என அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த இபிஎஸ், அதிமுகவை குறிப்பிட்டு அண்ணாமலை பேசவில்லை என கூறியுள்ளார். கூட்டணிக்காக தவம் கிடந்த சரித்திரம் அதிமுகவிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

News March 8, 2025

இசை மாயாஜாலன் டி வெய்ன் விகின்ஸ் மறைந்தார்

image

பிரபல பாடகரும், கிதார் கலைஞருமான டி வெய்ன் விகின்ஸ் (64) உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார். கடந்த ஒரு வருடமாக புற்றுநோய் பாதிப்புடன் போராடி வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 1980 மற்றும் 90களில் ஆதர்ச இசை நாயகனாக இருந்த அவரின் மறைவு, இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக மாறியுள்ளது. அவரின் R&B இசைக்குழுவில் 80களின் உருவான பாடல்கள் இன்றளவிலும் இளைஞர்களுக்கு தேசிய கீதமாகவே உள்ளது.

News March 8, 2025

திமுகவுக்கு TVK ஒரு பொருட்டே அல்ல: அமைச்சர் ரகுபதி

image

தமிழக அரசியலில் TVK, திமுகவுக்கு எப்போதும் போட்டியாக முடியாது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். TVK-வை அரசியல் கட்சியாக பார்க்கவில்லை என்றும், தாங்கள் எப்போதும் அரசியல் கட்சிகளுடன் மோதிப் பழக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களை ஏமாற்ற எத்தனை விழாவுக்கு சென்றாலும் ஏமாற்ற முடியாது என்றும், நண்பன் யார் எதிரி யார் என அவர்களுக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!