India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤மேஷம் – பக்தி ➤ரிஷபம் – பரிசு ➤மிதுனம் – பயம் ➤கடகம் – பகை ➤ சிம்மம் – பரிவு ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – பிரீதி ➤விருச்சிகம் – ஓய்வு ➤தனுசு – வரவு ➤மகரம் – தடங்கல் ➤கும்பம் – வெற்றி ➤மீனம் – புகழ்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் ஏப்.10ம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, 24 மணிநேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற தமிழ் டீசர் என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில், டீசரின் தீம் <
1) கோ-ஆப் டெக்ஸ் பொருட்களுக்கு 5% கூடுதல் தள்ளுபடி. 2) இ-சேவை மையங்களில் 10% சேவைக் கட்டணம் குறைப்பு 3) முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன் பெறலாம். 4) கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் பெற முன்னுரிமை. 5) கிராம & நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தயாரிக்கின்ற பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ராமசாமி மறைந்த செய்தியறிந்து வருத்தமடைந்தேன். தனது சட்டப்படிப்பு மூலம் பல உதவிகளை செய்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், சட்டத் துறையைச் சேர்ந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனறு குறிப்பிட்டுள்ளார்.
நம்ம ஊருல பேண்ட்ல ஒரு சின்ன கிழிசல் விழுந்தாலே தூக்கி போட்டுடுவோம். அதை போட்டுட்டு எப்படி வெளியே போறதுனு கூச்சமா இருக்கும். ஆனா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Coperni அப்படிங்குற பேஷன் நிறுவனம், இந்த ஒரு கால் பேண்டை புதுசா அறிமுகம் பண்ணியிருக்காங்க. இதுதான் இப்போ புது பேஷனாம். அட, அது கூட பரவால்லங்க. இதோட விலையை கேட்டா தலை சுத்தி கீழ விழுந்துடுவீங்க. ஒரு டெனிம் டவுசரின் (Denim Trouser) விலை ₹38,000.
WPL போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று பெங்களூரு – உத்தரப் பிரதேசம் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் குவித்தது. வீராங்கனை Georgia voll ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்து அசத்தினார். இதனை அடுத்து, இமாலய இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது. எந்த அணி வெல்லும் என Comment செய்யுங்க.
அதென்ன, ‘ஹாண்ட வைரஸ்’ என கேட்கலாம். எலி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் தான் இந்த வைரஸ் பரவுகிறது. நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜைகளில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும். நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும். இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, ‘ஹாண்ட வைரஸ்’ தொற்றும். சுவாச மண்டலத்தைத்தான் இது முதலில் பாதிக்கும்.
ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேனின் மனைவி பெட்ஸி அர்காவா இறப்பிற்கு காரணமான ஹாண்ட வைரஸ் பற்றி தான் தற்போது விவாதிக்கப்படுகிறது. இந்த வைரஸ் எலிகளின் மூலம் பரவுகிறது. ஆனால் அது தொற்றுநோய் அல்ல. சோர்வு, காய்ச்சல், தசைவலி, இருமல், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு போன்றவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் தாக்கிய 3 நோயாளிகளில் ஒருவர் உயிர் பிழைப்பது மிகவும் கடினம்.
கேரளாவில் போலீசுக்கு பயந்து போதைப் பொருளை விழுங்கிய இளைஞர் உயிரிழந்தார். தாமரசேரி பகுதியில் போதைப் பொருள் கடத்திய ஷானிட் (28), போலீசைப் பார்த்தவுடன் இரண்டு பாக்கெட்களை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். இதனால், போதை தலைக்கேறிய அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய வயிற்றில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை செம்ம கொண்டாட்டம் காத்திருக்கு. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்-ஐ பார்க்க ஆவலாய் காத்திருக்கும் ரசிகர்கள் கிளம்பி சென்னை மெரினா, பெசன்ட் நகர் பீச்-க்கு போயிடுங்க. பொதுமக்கள் பெரிய திரையில் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி இதுபோன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.