India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶மார்ச்- 09 ▶மாசி – 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:00 AM & 01:30 PM – 02:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 AM – 06:00 AM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 AM- 04:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: கேட்டை ▶நட்சத்திரம் : புனர்பூசம்.
மகாகும்பமேளா மூலம் வெளிச்சத்திற்கு வந்த IIT பாபாவின் (அபய் சிங்) மதிப்பெண் பட்டியல் வைரலாகி வருகிறது. அவர் 10 ஆம் வகுப்பில் 93%, +2வில் 92.4% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். 2008ல், IIT JEEல் இந்தியளவில் 731 ரேங்க் பெற்று, புகழ்பெற்ற IIT மும்பையில் இடம் பெற்றார். 2008-12ல் B.Tech முடித்து, கனடாவில் ஆண்டுக்கு ₹36 லட்சம் சம்பளத்தில் பணிபுரிந்தார். அதன்பின், ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்து பாபாவானார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே சிலர் பாஜகவுக்கு வேலை செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியில் இருந்து 20 – 30 பேரை நீக்கத் தயாராக இருப்பதாக கூறிய அவர், நேரடியாக பாஜகவிலேயே போய் சேர்ந்துவிடுங்கள் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும், காங்கிரஸ்காரர்கள் பாஜகவின் பி-டீம் போல செயல்பட்டால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவ்-க்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. அவரிடம் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான ரன்யா ராவ், கண்களில் வீக்கத்துடன் காணப்பட்டுள்ளார். சிறையில் அவர் சரியாக தூங்கவில்லை என கூறப்படுகிறது. ஜாமின் கோரி ரன்யா தொடர்ந்த வழக்கு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இன்று (மார்ச் 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான்- ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவசேனாவை சேர்ந்த அமைச்சர் குலாப் ராவ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா அரசின் பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக பையில் Lip Stick உடன் கத்தி, மிளகாய் தூள் உள்ளிட்டவற்றையும் வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மார்ச் மாதம் தொடங்கி 10 நாள்கள் கூட ஆகாத நிலையிலும் வெயில் பட்டையை கிளப்புகிறது. இதன் காரணமாக, கோவை நகரிலேயே இளநீர் ஒன்று ₹50க்கு விற்பனையாகிறது. தென்னை மரங்கள் அதிகம் கொண்ட கோவை மாவட்டத்தில், வழக்கமாக இளநீர் ₹35 அல்லது ₹40க்கு மட்டுமே விற்பனையாகும். சென்னையில் இளநீரின் விலை ₹70 வரை கூட விற்பனையாகிறது. வரும் காலங்களில் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் தினமான இன்று, மதுரையில் ஒரு பெண் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு போராடி வருகிறார். 80 வயதாகும் வருதம்மாளுக்கு 53 வயதில் மனநலன் பாதித்த மகன் இருக்கிறார். அரசு கொடுக்கும் முதியோர் உதவித்தொகை ₹1,200 & மனநலம் பாதித்தோருக்கான உதவித்தொகை ₹1,500இல் மட்டுமே குடும்பம் ஓடுகிறது. தான் இறந்துவிட்டால், மகனை கவனிக்க ஆள் இல்லையென வருதம்மாள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார்.
கோடைக்காலம் இப்போது தான் தொடங்கி இருக்கிறது. அதற்குள் இளநீர், தர்பூசணி, ஜூஸ் கடைக்காரர்கள் கல்லா கட்ட தொடங்கிவிட்டனர். பங்குனி பிறப்பதற்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பது தான் இதற்கு காரணம். ஈரோடு, மதுரை, கரூர் பரமத்தி ஆகிய 3 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. மார்ச் 10 வரை தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மகளிர் தினத்தையொட்டி வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, திமுக ஆட்சியை அகற்றுவோம் என கூறினார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் MRK. பன்னீர் செல்வம், விஜய்-ன் கருத்து சினிமாவில் வரும் டயலாக் போன்று இருப்பதாக விமர்சித்தார். பெண்களுக்கு சம உரிமை கொடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது யார் என அனைவருக்கும் தெரியும் என்றும் அமைச்சர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.