India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹீட் ஸ்ட்ரோக் போன்ற கோடைகால உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஹாஸ்பிடல்களில் போதிய வசதிகள் இல்லை என்ற தகவல் வியர்க்க வைத்திருக்கிறது. அதாவது ஒட்டுமொத்த இந்தியாவிலும் 32% ஹாஸ்பிடல்களில் மட்டுமே வசதிகள் இருப்பதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. மத்திய சுகாதார துறையின் கீழ் இயங்கும் தேசிய திட்ட அமைப்பு தான் இப்படி கூறியிருக்கிறது. கோடை நெருங்கும் நிலையில் இப்படி அறிக்கை வந்தால் எப்படி?
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பாெதுச் செயலாளர் இபிஎஸ் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இருந்து காணொலி வாயிலாக கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் அவர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4ஆவது ரயில் தண்டவாளம் அமைக்கப்படுவதால் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் இன்று காலை முதல் மாலை 4.10 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோவிலும், பஸ்களிலும் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தாம்பரம், கிண்டி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்பு கொடி கட்டி பறந்த நடிகர்களில் டி.ராஜேந்தரும் ஒருவர். அரசியலில் ஈடுபட்டதால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர், எப்போதாவது செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்துவார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தலையில் முடிகொட்டி பரிதாபமாக இருந்தார். பரபரப்பாக முன்பு இருந்த டி.ராஜேந்தர், மெதுவாக நடந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ₹7,940க்கும், 1 சவரன் தங்கம் ₹63,520க்கும் விற்பனையானது. இன்று 1 கிராம் தங்கம் ₹8,040க்கும், 1 சவரன் ₹64,320க்கும் விற்பனையாகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் 1 கிராம் தங்கம் விலை ₹100ம், 1 சவரன் ₹800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை 1 கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹108க்கும், கிலோ ₹3,000 அதிகரித்து ₹1.08 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது.
டாஸ்மாக் தலைமையகத்தில் 3 நாட்களாக அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்றுடன் நிறைவடைந்தது. இந்த சோதனையில், 4,829 டாஸ்மாக் கடைகளின் பரிவர்த்தனை விவரம், பார் லைசென்ஸ் விவரம், 2020ம் ஆண்டு முதல் செய்யப்பட்ட கொள்முதல் குறித்த கணக்கு விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர். சில கடைகளில் மட்டும் QR Code முறையில் விற்பனை அமலாகி இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியா – நியூசிலாந்து இடையே நடக்கும் இன்றைய பைனல் போட்டியை மொபைலில் ஜியோ ஹாட்ஸ்டார் app மூலம் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். அதே போல், டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் போட்டியை ரசிக்கலாம். இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை இந்தியா கையில் ஏந்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தின்போது வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் எலான் மஸ்க் வாக்குவாதம் செய்துள்ளார். அதனை அதிபர் டிரம்ப் வேடிக்கை பார்த்து மெளனமாக இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஒன்றுமே நடக்கவில்லை என கோபத்துடன் அவர் கூறியதும் பேசுபொருளாகியுள்ளது. பணி நீக்கம் தொடர்பாக மஸ்க்குக்கும், ரூபியோவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் கூடிய கறிக்கோழி விலை 1 கிலோவுக்கு ரூ.107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ கோழிக்கறி ரூ.175 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதேபோல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.80ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் முட்டை ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
சிரியாவில் அரசு படையினருக்கும், EX அதிபர் ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. அசாத் ஆதரவாளர்களின் பகுதிக்குள் புகுந்து அரசு பாதுகாப்பு படைகள் 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் 750 பேர் உள்பட இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.