News March 9, 2025

மீண்டும் வெளியான விஜயின் ‘வாடி வாடி’ பாடல்

image

விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சச்சின் படம் இன்றைக்கும் பலரால் ரசிக்கப்படும் படமாக உள்ளது. தற்போது ரீ-ரிலீஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் சச்சின் படத்தையும் களத்தில் இறக்க தயாரிப்பாளர் = தாணு முடிவெடுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறார். அந்தவகையில், ‘வாடி வாடி’ பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். உங்களுக்கு சச்சின் படம் பிடிக்குமா?

News March 9, 2025

யார் இந்த முப்தி ஷா மிர்?

image

ஐஎஸ்ஐ உளவாளியான <<15698595>>முப்தி ஷா மிர் <<>>போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் மனிதக் கடத்தலில் தீவிரமாக செயல்பட்டவன். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ சதித் திட்டம் வகுத்து தருபவன். தவிர அங்குள்ள இஸ்லாமிய கட்சிகளுடன், குறிப்பாக அடிப்படைவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன். ஐஎஸ்ஐக்கும் மிர்ருக்கு மோதல் ஏற்பட்டதால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

News March 9, 2025

5 பெண்கள் பலாத்காரம்.. வீடியோ.. சிக்கிய BJP பிரமுகர்

image

போலியாக வேலைவாய்ப்பு விளம்பரங்கள் செய்து 5 கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஆஸி., பாஜக பிரமுகர் பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்தது. வேலைக்கு விண்ணப்பித்த பெண்களை வரவழைத்து, மயக்கமாக்கி, பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார். திறமை, தோற்றம், வலையில் வீழ்வார்களா என்று ஒரு எக்சல் ஷீட்டில் அப்பெண்களுக்கு இவர் மார்க் போட்டும் வைத்துள்ளாராம்.

News March 9, 2025

பம்மிய இபிஎஸ், அண்ணாமலை.. கூட்டணி?

image

பாஜக கூட்டணிக்காக சில கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை சாடியிருந்தார். அதிமுகவை மனதில் வைத்து அவர் அப்படி கூறவில்லை என இபிஎஸ் பம்மினார். அண்ணாமலையும் தான் அதிமுகவை சொல்லவில்லை என பின்வாங்கினார். இதைவைத்து, 2026 தேர்தலில் 2 கட்சிகளும் கூட்டணி வைக்கலாம் என பரவும் செய்தி உண்மைதான் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

News March 9, 2025

26 மாணவர்கள் பலி… அதிர்ச்சி ரிப்போர்ட்

image

மிக பின்தங்கிய SC, ST மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கான ஹாஸ்டல்கள் செயல்படுகின்றன. ஆனால், தமிழகம் உள்பட எந்த மாநில அரசும் இதை ஒழுங்காக பராமரிப்பதில்லை. இந்நிலையில், கடந்த 8 மாதங்களில் மட்டும், ஒடிசாவில் உள்ள SC, ST ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 6 பேர் தற்கொலையானதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தெரியாத பலிகள் எத்தனையோ?

News March 9, 2025

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்.. S.B. உறுதி

image

கோடை காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கோடை காலம் ஆரம்பித்து இருப்பதால், மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் மின்தடை ஏற்படலாம் எனக் கூறப்படுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தங்குத்தடையின்றி மின்சார விநியோகம் நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்திருப்பதாகக் கூறினார்.

News March 9, 2025

பெண்கள் நிர்வாண ஊர்வலம்.. சுட்டுக் கொலை

image

<<15698647>>சிரியாவில்<<>> ஆசாத் ஆட்சியில் அலவாய்ட் சிறுபான்மை சமூகத்தினர் செல்வாக்கு பெற்று விளங்கினர். அவர்கள் பகுதியில் அரசு பாதுகாப்புப் படை 2 நாட்களாக தாக்குதல் நடத்தியது. இதில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அலவாய்ட் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் வீதிகளில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையும் அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 9, 2025

திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்துக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு நாளை கூடுகிறது. இதில் திமுக எம்பிக்கள் செயலாற்ற வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

News March 9, 2025

வெயிலை சமாளிக்க தயாராகுங்க!

image

சம்மரில் இந்த முறை வெயில் பயங்கர உக்கிரமாக இருக்குமாம். அதனால், வயதானவர்கள், குழந்தைகள் பகல் நேரங்களில் வெளியே வராமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஹீட் ஸ்ட்ரோக்கால் உடல்நலம் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க இளநீர், நன்னாரி, எலுமிச்சை சாறு என இயற்கையான ஜூஸ்களை நிறைய குடித்தாலே போதும், கோடை காலத்தை குளு, குளுவென ஓட்டிவிடலாம்.

News March 9, 2025

BREAKING: குடியரசு துணைத் தலைவர் ஹாஸ்பிடலில் அனுமதி

image

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு விடுதலில் சிரமம், நெஞ்சு வலி காரணமாக அவர் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!