India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல நடிகை அபிநயாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்தது. தனது வருங்கால கணவரும், தானும் நிச்சயதார்த்தம் முடிந்து, கோயிலில் மணி அடிக்கும் அழகிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். தனது பால்யப் பருவ நண்பரை விரைவில் திருமணம் முடிக்கப் போவதாக அண்மையில் பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார். நடிகை அபிநயாவுக்கு வாய் பேச முடியாது மற்றும் காதும் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (மார்ச் 10) விடுமுறை ஆகும். அதேபோல், வேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே நடைபெறும் பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – நியூசி., இடையேயான CT ஃபைனல்ஸில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக 2.24 மில்லியன் டாலர் (₹19.52 கோடி) கிடைக்கும். தோல்வியுற்ற அணிக்கு 1.12 மில்லியன் டாலர் (₹9.76 கோடி) வழங்கப்படும். CT தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் (இந்தியா, நியூசி., உட்பட) தலா 125,000 டாலர் (₹1.08 கோடி) வழங்கப்படும். அதேபோல, தொடரின் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 34,000 (₹2.95 கோடி) டாலர்கள் வழங்கப்படும்.
Champions Trophy தொடரின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் #Retirement என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நியூசி., அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பின் நட்சத்திர வீரர் ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் ஷமி ஆகியோர் தங்களது ஓய்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு நெட்டிசன்கள், கனத்த இதயத்துடன் வாழ்த்து கூறுகின்றனர்.
முதல்வர் ஸ்டாலினின் தாயாரான தயாளு அம்மாள், திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ ஹாஸ்பிட்டலில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், இரு தினங்களாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இன்று மாலை வீடு திரும்பினார்.
திருப்பதி திருமலை மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இன்று காலை முதலாவது மலைப்பாதையில் 7ஆவது மைல் அருகே யானைக்கூட்டம் தென்பட்டது. அதனை காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர், பக்தர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி போட்டோ எடுப்பது, விலங்குகளை துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஜடேஜா, நடப்பு CT ஃபைனலுடன் ஓய்வு பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஃபைனலில் ஜடேஜா பவுலிங் போட்டு முடித்ததும், விராட் கோலி எமோஷனலாக அவரை கட்டித் தழுவினார். ஏற்கனவே T20-இல் இருந்து ஓய்வு பெற்ற ஜடேஜா, ODI-இல் இருந்தும் ஓய்வு பெறுவார் எனக் கூறப்படுகிறது. அஸ்வினையும், ஸ்மித்தையும் ஓய்வுபெறுவதற்கு முன்பு, இதுபோல விராட் கட்டியணைத்தது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை வைத்து கடன் வாங்க, இனி வங்கிக்கு போக வேண்டாம். ஆம், ATM மூலமாகவே தங்கக் கடனை பெறும் முறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ ATM-இல் தங்க நகைகளை வைத்தாலே போதும். அதுவே எடை பார்த்து இன்றைய மார்க்கெட் விலையில் கடன் தொகையை கொடுத்துவிடும். இந்த முறையை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த சென்ட்ரல் பாங்க் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐசிசி இறுதி போட்டிகளில் அதிக முறை விளையாடியவர்கள் என்ற சாதனையை ரோகித் சர்மாவும், விராட் கோலியும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இருவரும் இதுவரை 9 ஐசிசி இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளனர். இருவரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் உள்ள யுவராஜ் சிங் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் 8 ஐசிசி இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
ரஜினி நடிப்பில் 2023ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ஜெயிலர். இதன் 2ம் பாகத்திற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன் படத்தின் அறிமுக டீசர் வெளியானது. இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.