News March 10, 2025

கேப்டன் ரோஹித்தின் ஆசை கைகூடுமா?

image

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ள கேப்டன் ரோஹித்துக்கு இன்னும் நிறைவேறாத கனவு ஒன்று உள்ளது. அது அவரால் இதுவரை ODI WCஐ உச்சி முகர முடியவில்லை என்பது தான். 2011 அணியில் கூட இடம் கிடைக்காதவர், 2023ல் இறுதிப் போட்டி வரை வந்து தோற்று போனார். இப்போது 37 வயதாகும் அவர், அடுத்த ODI WC 2027 வரை அணியில் தொடர வேண்டும் என்ற ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். 2027ல் அவரது ஆசை நிறைவேறுமா?

News March 10, 2025

பட்ஜெட் அமர்வு: நோட்டீஸ் வழங்கிய TN எம்.பி.க்கள்

image

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்நிலையில், தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கக் கோரி ராஜ்யசபாவில் திமுக எம்.பி திருச்சி சிவா நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதே போல், மணிப்பூர் வன்முறை குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் வலியுறுத்தியுள்ளார்.

News March 10, 2025

நடிகர் விக்ரமனின் மனைவி போலீசில் புகார்

image

லேடி கெட்டப்பில் அரைகுறை ஆடையுடன் வெளியான வீடியோவை, திட்டமிட்டு தவறாகச் சித்தரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்ரமனின் மனைவி ப்ரீத்தி புகார் அளித்துள்ளார். அது, ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட வீடியோ என <<15705966>>விக்ரமன்<<>> நேற்று விளக்கமளித்திருந்தார். ஆனாலும், பலர் அதனைப் பகிர்ந்து கருத்து பதிவிட்டு வரும் நிலையில் ப்ரீத்தி, திருவேற்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

News March 10, 2025

சன்ஸ்கிரீன் வெளியில மட்டுமில்ல; உள்ளேயும் தேவை!

image

சம்மருக்கு சன்ஸ்கிரீனை வண்டி, வண்டியா தடவினால் மட்டும் போதாது. கொஞ்சம் இன்டர்னலுக்கும் முக்கியத்துவம் தரணுமாம். அதாவது, வயிற காலியா வெச்சு இருக்கக்கூடாது. ஆரோக்கியமான உணவுகளை ஒரு பிடி பிடிச்சா, சம்மர்ல தொல்லை தர்ற அரிப்பு, அலர்ஜினு தோல் நோய்களை விரட்டிவிடலாம். சன்ஸ்கிரீன் உடம்புக்கான மேல்பூச்சா இருந்தாலும், உடம்புக்குள்ள ஃபைட் பண்ற ரியல் medicine, சாப்பாடு தான். சோ, ஸ்கிப் பண்ணாதீங்க…

News March 10, 2025

விமர்சித்தவரையே பாராட்ட வைத்த ரோகித் சர்மா

image

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட்டு வீரருக்கான தோற்றத்தில் இல்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்திருந்தார். இதையடுத்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வென்ற நிலையில் ரோகித்துக்கு ஷாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு ரோகித் வழிவகுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

News March 10, 2025

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 5 பேர் பலி!

image

மும்பையின் நக்படா பகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஹசிபல் ஷேக், ராஜா ஷேக், ஜியாவுல்லா ஷேக், ஹிமாந்த் ஷேக் ஆகியோர் நேற்று உயிரிழந்த நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சைப் பலனின்றி பர்ஹான் ஷேக் இன்று மரணமடைந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் விஷவாயு தாக்கியது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2025

நீங்க டெய்லி தலைக்கு குளிக்கும் பழக்கம் இருப்பவரா?

image

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு 4 முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். தூசி, அழுக்கு, மாசு நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், தினமும் தலைக்கு குளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அழுக்கு அதிகமாகப் படிவது, முடியின் ஆரோக்கியத்திற்கு கேடு. சம்மர் சீசனில், உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கும், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் வாரத்திற்கு நான்கு முறை குளித்து விடுங்கள். SHARE IT.

News March 10, 2025

திமுக மூத்த தலைவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

திமுக மூத்த தலைவர் பி.எஸ்.ராஜராஜன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகர திமுக அவைத் தலைவராகப் பதவி வகித்த ராஜராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். ராஜராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

News March 10, 2025

13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி.. இளையராஜா செம ஹேப்பி!

image

சிம்பொனி நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய இளையராஜா, நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மொமண்ட்டிற்கும் கைதட்டி ரசிகர்கள் கொண்டாடினர் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அனைவரும் மனமார வாழ்த்தியதால் தான், நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றது எனவும், அரசின் சார்பாக வரவேற்றது மகிழ்ச்சி என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியை 13 நாடுகளில் நடத்த தேதி குறிச்சாச்சு எனக் கூறி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

News March 10, 2025

தாயை பின் தொடரும் ஸ்ரீதேவியின் மகள்

image

ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ படத்தின் 2ஆம் பாகத்தில் அவரின் மகள் குஷி கபூர் நடிக்க உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரது தந்தை போனி கபூர் ‘மாம் 2’ படத்தை தானே தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தனது மகள்கள் இருவரும் ஸ்ரீதேவியின் வழியில் செல்வதையே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மாம் படத்திற்காக ஸ்ரீதேவி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!