India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கான நிதி குறித்து சரமாரியாக கேள்வியெழுப்பினார். மத்திய அரசின் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் எனக் கூறுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது என அவர் குற்றம்சாட்டினார். மேலும், கல்வி நிதியை தமிழகத்திற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது. இதில் பட்ஜெட் தொடர்பாக 13 மசோதாக்களையும், மணிப்பூர் மாநில பட்ஜெட்டையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பிரச்னைகளை எழுப்ப திமுக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டெல்லிக்கு 348 பயணிகளுடன் நேற்றிரவு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 10 கழிவறைகள் இருந்த நிலையில், அதில் ஒன்று மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனால் 10 மணிநேரமாக கடும் சிரமத்தை சந்தித்த பயணிகள், ஒருகட்டத்தில் கோபமடைந்தனர். இதனால் வேறு வழியின்றி மீண்டும் சிகாகோவுக்கே விமானம் திரும்பிச் சென்றது. என்ன கொடுமை பாஸ்..
டொமினிகன் குடியரசில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர். அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வரும் அவர், டொமினிகன் குடியரசில் உள் ரியூ ரெப்யூப்ளிகா ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் குளிக்கச் சென்றபோது மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சக மாணவிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படம் பாதியில் நின்றிருக்கிறது. பணப் பிரச்னை காரணமாக இந்த படத்தினை தொடர முடியாமல் போனதால் தான், லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’ படத்திற்கு சென்று விட்டாராம். கூலி படத்தை முடித்த கையோடு இந்த படத்தின் ஷூட்டிங்கை லோகேஷ் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் முக்கிய டைரக்டருக்கே இந்த நிலைமையா?
IDBI வங்கியில் 650 Junior Assistant Manager காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. 20 – 25 வயதிற்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். எழுத்து, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ஊக்கத்தொகையுடன் PG Diploma பயிற்சி அளிக்கப்படும். சம்பளம் மாதம் ₹51,000 வரை வழங்கப்படும். வரும் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
இதனை எத்தனை பேர் கவனித்தீர்கள்! CT தொடரில் மட்டும் ஜெர்சியுடன் வெள்ளை கலர் கோட்டையும் அணிந்து கோப்பையை பெறுவார்கள். இது மரியாதையின் அடையாளம் என்று கூறப்படுகிறது. வீரர்களின் மகத்துவத்தையும், விடாமுயற்சியையும் பிரதிபலிப்பதாக ICC சுட்டிக்காட்டுகிறது. CT தொடர் 1998 இல் தொடங்கினாலும், இந்த வெள்ளை சூட்டை அணியும் வழக்கம் 2009 ஆம் ஆண்டில் இருந்து தான் தொடங்கியது.
30-30-30 விதி தெரியுமா? காலையில் எழுந்த 30 நிமிடங்களுக்குள் 30 கிராம் ப்ரோட்டீன் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பசியைக் குறைக்கும். அடுத்த, 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 30 நிமிடத்திற்குள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி காலை முதல் 1:30 மணி நேரத்தை செலவிட்டால், அது நாள் முழுவதும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 10) சவரனுக்கு ₹80 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,050க்கும், சவரன் ₹64,400க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹108க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,08,000க்கும் விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்வுடன் தொடங்கியுள்ளது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
சேலம் மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு, பெற்றோரே கொடுமை இழைத்துள்ளனர். சிறுமியை கோயிலுக்கு அழைத்துச் சென்று கடுமரத்தூரைச் சேர்ந்த 38 வயது நபருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். மனம் உடைந்து போன அந்த சிறுமி, போலீஸில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் உண்மை அம்பலமானதால், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளுக்கு எப்ப தான் முடிவு வரும்?
Sorry, no posts matched your criteria.