India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் இளநிலைப் பொறியாளராக இருந்த ஜெயக்குமார், தமிழ்த் தேர்வில் தோல்வி அடைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை இன்று விசாரித்தது. அப்போது, தமிழகத்தில் பணிபுரிய தமிழ் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழ் தெரியாமல் எதற்காக ஒருவர் தமிழகத்தில் வேலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வினவினர்.
CT FINAL நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இந்திய வீரர் ஜடேஜா ODI போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக செய்திகள் உலா வந்தன. தனது 10வது ஓவரை அவர் வீசி முடிந்த பிறகு, சக வீரர் கோலி கட்டியணைத்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் யூகங்களை பதிவிட்டனர். இந்நிலையில், ஓய்வு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா, ‘தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம், நன்றி’ என தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
வரும் 12ஆம் தேதி (புதன்கிழமை) கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து புனித நீராடுவது உண்டு. இதனையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதிற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய வரும் 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ரெட்ரோ திரைப்படத்தை மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணாடி பூவே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரெட்ரோ திரைப்படம் நன்றாக உருவாகி இருப்பதாகவும், படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய தர்மேந்திர பிரதான், திமுக எம்.பி.க்களை ‘நாகரீகமற்றவர்கள்’ என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி, அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் எனக் கூறினார். இதையடுத்து, சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால், நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையை தான் திரும்பப் பெறுவதாக தர்மேந்திர பிரதான் கூறினார்.
தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடி ரயில் கிடையாது. சாலை மார்க்கமோ, விமானம் மூலமாகவோதான் செல்ல முடியும். இந்த குறையை போக்க கன்னியாகுமரி (அ) ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீருக்கு 4,000 கி.மீ. தூரம், அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஏப்ரலில் கட்ரா-பனிஹால் இடையே ரயில் விடப்படவுள்ளது. இது வெற்றிகரமானால், இத்திட்டம் சாத்தியமாகும் என தெற்கு ரயில்வே கருதுகிறது.
வெயில் இப்போதே வெளுத்து வாங்குவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், ஏசியை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், ஏசி விலையை யூனிட் ஒன்றுக்கு ₹2,000 வரை உயர்த்தப்படுவதாக ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. புளூஸ்டார் நிறுவனம் 3% அளவுக்கு விலையை உயர்த்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஹயர் நிறுவனமும் தனது ஏசியின் விலை 4 – 5% வரை உயர்த்த உள்ளது.
IPL கிரிக்கெட் தொடரின்போது மது, பான் மசாலா போன்ற சுகாதார கேடான பொருள்களை விளம்பரம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. IPL தலைவருக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், மைதானங்களிலும், டிவிகளிலும் இத்தகைய விளம்பரங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆல்கஹால் & டொபாகோ போன்றவற்றால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் தனியாக தினம் இருக்கிறதா என வேடிக்கையாக இருக்கிறதல்லவா?. ஆனால், International Wig Day கடைபிடிக்கப்படுவது வேடிக்கைக்காக அல்ல. புற்றுநோய்க்காக கீமோதெரபி செய்தவர்கள் மற்றும் பிற நோய்களால் தலைமுடியை இழந்தவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வுக்காக இந்த தினம் உருவானது. முதன்முதலில் டென்மார்க் நாட்டில் தான் விக் தினம் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
CT தொடரின் நிறைவு நிகழ்ச்சியில், அத்தொடரை நடத்திய பாக். கிரிக்கெட் வாரியம் (PCB) சார்பில் யாரும் பங்கேற்காதது சர்ச்சையானது. PCB தலைவரால் வர இயலவில்லை என ICC செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். ஆனால், ICC தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படாததால்தான், PCB தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ICCயிடம் PCB முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.