India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியோரைக் கொண்டு புதிய அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் சத்ரான், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (WK), க்ளென் பிலிப்ஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மிட்ச்செல் சாண்ட்னர் (C), முகமது ஷமி, மேட் ஹென்ரி, வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். உங்கள் பேவரைட் யார்?
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் UPI விதிகளில் பெரிய மாற்றங்களை செய்ய NPCI முடிவு செய்துள்ளது. அதன்படி, செயல்படாத செல்ஃபோன் எண்கள் உடனுக்குடன் தகுதி நீக்கம் செய்யப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பழைய எண்களை பலர் UPIயில் பயன்படுத்தி வருவதால் மோசடிகள் அதிகரித்துள்ளது. அதனை தடுக்கும் வகையில் வாரம் ஒருமுறை செயல்படாத எண்களை நீக்குமாறு UPI நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘சப்தம்’ படத்திற்கு போதிய புரமோஷன் செய்யாமல் கொன்றுவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் அறிவழகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பட ரீலீஸ் தாமதம் என பல குளறுபடிகளை செய்தாலும், ஹவுஸ்ஃபுல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் அன்பையும், ஆதரவையும் பெற்றதாக அவர் கூறியுள்ளார். பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என யாரையும் அவர் நேரடியாக குற்றஞ்சாட்டவில்லை. கடந்த பிப்.28ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நெட்பிளிக்ஸ்-ல் வெளியான நயன்தாராவின் ஆவணப் படத்தில், நானும் ரவுடி தான் பட காட்சி இடம்பெற்றிருந்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், ரூ.10 கோடி இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நெட்பிளிக்ஸ்-ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தீர்ப்பு யார் பக்கம் வருமோ?
தெலங்கானாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த பிரனாய் பெருமுல்லா (24) என்ற தலித் இளைஞர், கடந்த 2018இல் வெட்டிக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பிரணாயை கொலை செய்த கூலிப்படை தலைவன் சுபாஷ் சர்மாவுக்கு மரண தண்டனை விதித்து நல்கொண்டா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நாடாளுமன்றத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் எனக் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது கருத்தை அவர் வாபஸ் பெற்ற போதிலும், அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.
CT தொடரை பாக். அல்லது எந்த நாட்டில் விளையாடி இருந்தாலும், IND தான் கோப்பையை வென்றிருக்கும் என முன்னாள் PAK வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஒரு போட்டியில் கூட தோற்காமல், T20 WC, CT தொடரை IND கைப்பற்றியது, அந்த அணியின் திறமை, தலைமைத்துவத்தை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் NZ, AUSக்கு எதிரான டெஸ்ட்டில் தோற்ற போதும் கம்பீர், ரோஹித்துக்கு BCCI ஆதரவு அளித்ததையும் பாராட்டியுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களை வஞ்சித்து திமுகவினர் செய்யும் கபட அரசியலை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தோலுரித்து காட்டியுள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் திமுகவினருக்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளதாகவும், மொழியை வைத்து திமுக மீண்டும் அரசியல் செய்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று அவதூறுகளை அள்ளி வீசியதாகவும் விமர்சித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து மத்திய அரசு PM இன்டர்ன்ஷிப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 நிதியை வங்கிக் கணக்கில் மத்திய அரசு டெபாசிட் செய்யும். இதில் 2ஆவது கட்டமாக 1,25,000 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. இதற்கான பதிவு நாளை மறுநாளுடன் நிறைவடையவுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என பார்க்கலாம்.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர <
Sorry, no posts matched your criteria.