News March 11, 2025

சைலண்ட் ஹீரோ.. ஸ்ரேயாஸை புகழ்ந்த ரோஹித்

image

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை சைலண்ட் ஹீரோ என்று கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து பேசுகையில், தாம் துவக்க ஆட்டக்காரராக 79 ரன்கள் குவித்ததை சுட்டிக்காட்டினார். ஒருவேளை தாம் ரன் குவிக்க தவறினாலும் ஸ்ரேயாஸ், அக்சருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பணியை செய்திருப்பார் என்றும் ரோஹித் கூறினார். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் 48 ரன்கள் சேர்த்தார்.

News March 11, 2025

₹100க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்களுக்கு ‘JIO HOTSTAR’!

image

வாடிக்கையாளர்களுக்கு ₹100க்கு புதிய ரிசார்ஜ் பிளானை JIO அறிமுகம் செய்துள்ளது. JIO சினிமா, டிஸ்னி HOTSTAR நிறுவனங்கள், ‘JIO HOTSTAR’ என்ற பெயரில் அண்மையில் ஒரே நிறுவனமாக இணைந்தன. இந்நிலையில், ஜியோவின் ₹100 புதிய பேக்கில், 90 நாட்களுக்கு ‘JIO HOTSTAR’ சந்தாவுடன், 5 GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. வரும் 22ம் தேதி தொடங்கும் IPL-ஐ கருத்தில் கொண்டு, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்- பட்டதாகக் கூறப்படுகிறது.

News March 11, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News March 11, 2025

மேலும் 3 நாடுகள் மீது ரஷ்யா பாோ் தொடுக்கும்?

image

உக்ரைனுக்குப் பிறகு, மால்டோவா, ஜார்ஜியா, ரூமேனியா நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று நேட்டோ EX கமாண்டர் ரிச்சார்ட் செரிப் எச்சரித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் முடிவு அமலுக்கு வருவது பெரும் அபாயம் என்றும், இது ரஷ்ய அதிபர் புதினின் போர் திட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பால்டிக் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கவும் இது வழிக்கும் எனவும் கூறியுள்ளார்.

News March 11, 2025

டெல்லி மக்களை மோடி ஏமாற்றி விட்டார்.. ஆம் ஆத்மி தாக்கு

image

டெல்லி மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி மூத்தத் தலைவருமான அதிஷி, தேர்தலின்போது பாஜக வென்றால் பெண்களின் வங்கிக் கணக்கில் மார்ச் 8ஆம் தேதி ரூ.2,500 உதவித் தொகை வரவு வைக்கப்படுமென மோடி கூறினார். ஆனால் அதற்கு மாறாக இன்று வரை பதிவு கூட தொடங்கப்படவில்லை என்றும் சாடினார்.

News March 11, 2025

எவ்வளவு கோடி செலவானாலும் பரவாயில்லை: பெசோஸ்

image

எவ்வளவு செலவானாலும் கவலையில்லை எனக் கூறி, ஜேம்ஸ் பாண்ட் படங்களின் உரிமைகளை வாங்க அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமேசான் நிறுவனம் MGMஐ 2022ல் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஜேம்ஸ் பாண்ட் கதையை டிவி தொடர்களாகத் தயாரிக்க திட்டமிட்டது. அதற்கு பாண்ட் படங்களை 30 ஆண்டுகளாக தயாரித்த பார்பரா, அமேசான் நிர்வாக அதிகாரிகளை முட்டாள் என விமர்சித்து இருந்தார்.

News March 11, 2025

புதிய பிரதமர்.. கனடா- இந்தியா உறவு எப்படி இருக்கும்?

image

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வாக உள்ள நிலையில், தான் பிரதமரானால், இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பேன் என அவர் கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டது முதல் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. கொலைக்கு இந்திய உளவுத்துறைதான் காரணம் என அந்நாட்டின் பிரதமர் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார்.

News March 11, 2025

ஆங்கிலத்தில் கடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

image

ஆங்கிலத்தில் கடல் OCEAN, SEA என்று 2 பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதில் OCEAN என்பது பெருங்கடலை அழைக்க பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அட்லாண்டிங் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் ஆகியவை OCEAN என அழைக்கப்படுகிறது. இதுதவிர்த்து, SEA என்ற வார்த்தை சிறிய கடலை அழைக்க பயன்படுகிறது. வங்கக் கடல், அரபிக்கடல் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

News March 11, 2025

ரகளையான ‘ரெட்ரோ’ காமிக்ஸ் உங்களுக்காக..

image

‘ரெட்ரோ’ திரைப்படத்தின் காமிக் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்காக முதன்முதலாக தனது சொந்த குரலில் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் டப்பிங் பேசியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரகளையான விஷயங்களையும், பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த சிரமங்களையும் கலாய்த்து காமிக்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படம், வரும் மே 1ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

News March 11, 2025

இலவச பஸ் பயணம்.. தெலுங்கானா வேற லெவல்

image

தமிழகத்தைப் போல், தெலுங்கானாவிலும் பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தமிழகத்திற்கும், தெலுங்கானாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் எந்த மாநில பெண் என்றாலும் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் தெலுங்கானாவில் அந்த மாநில பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும். ஆதாரை நடத்துநர் பார்த்து உறுதிசெய்த பிறகே பஸ்சில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

error: Content is protected !!