News March 11, 2025

சி.பி. ராதாகிருஷ்ணன் – இபிஎஸ் திடீர் சந்திப்பு

image

கோவையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்- இபிஎஸ் இருவரும் சந்தித்துக்கொண்டனர். எஸ்.பி வேலுமணி வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள கோவை வந்த இருவரும், நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பும் பொருட்டு விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது இருவரும் சில நிமிடங்கள் தனியாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

News March 11, 2025

புதிய மாவட்டம் உருவாகிறது?

image

திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக உருவாகும் பழநி மாவட்டத்துடன் இணைய மாட்டோம் என்று உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், கொடைக்கானல் திண்டுக்கல்லுடன் இருக்க வேண்டும் என்றும், பழநியுடன் இணைக்கக் கூடாது எனவும் குரல் எழுப்பியுள்ளனர்.

News March 11, 2025

வேறு ஒரு பெண்ணுடன் இருந்த சாஹல்..! தனஸ்ரீ வைரல் பதிவு!

image

CT தொடர் பைனலின் போது,<<15710307>> சாஹல் ஒரு பெண்ணுடன்<<>> அமர்ந்திருந்த காட்சிகள் வைரலாகின. இதனைத் தொடர்ந்து, அவரின் முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மாவின் இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அதில், ‘பெண்களைக் குறை கூறுவது ஃபேசனாகிவிட்டது’ என்று சிம்பிளாக பதிவிட்டுள்ளார். இருவரும் விவாகரத்து செய்த போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் தனஸ்ரீ.

News March 11, 2025

ஓபிஎஸ் ஆதரவாளரை சந்தித்த சசிகலா, டிடிவி

image

ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சசிகலா, டிடிவி, தினகரன், திவாகரன் ஆகியோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ள நிலையில், இதுவரை தனித்தனியாக அரசியல் செய்த மூன்று தரப்பும் ஒன்றாக சந்தித்துள்ளனர். இதுகுறித்து சசிகலா, ‘இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது’ என சூசகமாக பதிலளித்துள்ளார்.

News March 11, 2025

இன்றுடன் காலாவதியாகும் நீரிழிவு மருந்தின் காப்புரிமை

image

போஹ்ரிங்கர் இங்கல்ஹெய்ம் நிறுவனத்திடம் இருந்த நீரிழிவு, இதய செயலிழப்பு பயன்படுத்தப்படும் எம்பாக்லிப்ளோசின் என்ற மருந்தின் காப்புரிமை இன்றுடன் காலாவதியாக உள்ளது. இதனையடுத்து, மலிவு விலையிலான ஜெனரிக் மருந்துகள் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்தை தயாரித்து வெளியிடுவதில் மேன்கைண்ட் பார்மா, டோரண்ட், ஆல்கெம், டாக்டர் ரெட்டீஸ், லூபின் நிறுவனங்கள் மிக ஆர்வமாக உள்ளன.

News March 11, 2025

சனி தோஷத்தை விரட்டும் சனி காயத்ரி மந்திரம்!!

image

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

பொருள்:
ஓம், கொடியில் காக்கை வைத்திருப்பவரை நினைத்துப் பார்க்கட்டும், ஓ, உள்ளங்கையில் வாளை ஏந்தியவரே, சனீஸ்வரர் என் எண்ணங்களை ஒளிரச் செய்யுங்கள்.

News March 11, 2025

நீரழிவு நோய்க்கான மாத்திரை விலை 90% குறைகிறது

image

நீரழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மாத்திரையின் விலை 90% குறைக்கிறது. அதாவது ₹60க்கு விற்கப்படும் ஒரு மாத்திரையின் விலை வெறும் ₹6ஆக குறைகிறது. கோடிக்கணக்கான மக்களின் செலவை குறைத்து நிதி அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் என்பதுடன் நீரிழிவு நோய் பாதித்த அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்த ஏதுவாக அமையும்.

News March 11, 2025

இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டும்

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும் என IMD முன்னறிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும். இதனால், பள்ளி, கல்லூரி செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.

News March 11, 2025

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்கிறீர்களா? உஷார்!

image

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதற்கேற்ப, சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில், நடப்பு நிதியாண்டின் 9 மாதங்களில் சைபர் குற்றங்களால் ₹40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 13,384 சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இதனால், ₹733 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

News March 11, 2025

இன்று மொரீஷியஸ் செல்கிறார் PM மோடி

image

2 நாள் பயணமாக PM மோடி இன்று மொரீஷியஸ் செல்கிறார். அந்நாட்டின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், எனது நண்பரும், பிரதமருமான டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது பயணம் இருநாட்டு உறவுகளில் பிரகாசமான அத்தியாயத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!