India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. CT கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் வரும் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர். மே மாதம் 25ஆம் தேதி ஐபிஎஸ் போட்டிகள் நிறைவடைகின்றன. இதனைத் தொடர்ந்து ENG எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஜூன் 20இல் முதல் டெஸ்ட் தொடங்குகிறது.
EVM இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக புகார் கூறி வந்த காங்கிரஸ், தற்போது வாக்காளர் பட்டியலிலும் பெருமளவு முறைகேடு நடப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. லோக்சபாவில் இந்த விவகாரத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, இது பற்றி இப்போது விவாதிப்பது மிகவும் முக்கியம் என வலியுறுத்தி இருக்கிறார். ராகுலின் பேச்சு எதை கோடிட்டு காட்டுகிறது?
கிரிக்கெட் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு நிறைந்தது. கஷ்டப்பட்டு பெற்ற வெற்றியை நினைவு கூறும் வகையில், வீரர்கள் அந்த மேட்சின் ஸ்டெம்பை எடுத்துச்செல்கிறார்கள். போட்டியில் அவர்களின் தனிப்பட்ட சாதனைகளுக்கு ஒரு நினைவு பரிசாக இந்த ஸ்டெம்புகளை வைத்துக் கொள்கிறார்களாம். இந்த பாரம்பரியம் இன்று, நேற்று தொடங்கியதில்லை. ஆரம்பகால கிரிக்கெட்டில் இருந்தே வீரர்கள் இதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார்கள்!
இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதாக விஜய் மீது சென்னை காவல் ஆணையரிடம் சுன்னத் ஜமாஅத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டது இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது; நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கும் விஜய் வருத்தம் தெரிவிக்கவில்லை; எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் முதல் ஆதார் கார்டு யாருக்கு வழங்கப்பட்டது என யோசித்தது உண்டா? நாட்டின் முதல் ஆதார் கார்டு 2010ல் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று ரஞ்சனா சோனாவனே என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் மகாராஷ்டிராவின் நந்துபார் மாவட்டத்தில் உள்ள தம்பாலி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். சோனியா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் அவருக்கு முதல் ஆதார் கார்டு வழங்கப்பட்டது. SHARE IT.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சின் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஆக்ரோஷமாக பேசிய அவர், திமுக MPக்கள் நாகரிகமற்றவர்கள் என மக்களவையில் நேற்று கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தனது பேச்சை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், அவரின் பேச்சின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
தென்கொரிய K- Pop இசைக் கலைஞர்களுக்கு இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி உள்ளது. K- Pop பாடகர் Wheesung, அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், காவல் துறை தரப்பில் அது உறுதிப்படுத்தப்படவில்லை. அதிகளவு போதைப்பொருள் உட்கொண்டதால் உயிரிழந்தாரா (அ) தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இளநிலை ‘நீட்’ தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 2025 – 26 ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்வதாக இருந்தால் <
பிரேமலதா விஜயகாந்துக்கு துணை முதல்வர் பதவி தருவதாக இபிஎஸ் கூறியுள்ளார் என்று அரியலூரில் நடந்த நிகழ்ச்சியில் தேமுதிக துணைச் செயலாளர் பாலமுருகன் பேசியுள்ளார். 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வர் பதவி தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே, இப்போது இருந்தே நமது கட்சியினர் கடுமையாக உழைத்து, கூட்டணி கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
காதலை கொஞ்சம் வித்தியாசமாக சொல்லும் வழக்கம் கொண்ட விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘LIK’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, படத்தில் ஹீரோவும், ஹீரோவின் அப்பாவும் ஒரே பெண்ணை காதலிப்பார்களாம். அதைத் தொடர்ந்து என்ன நடக்குது என்பதே படத்தின் கதை எனக் கூறுகிறார்கள். இந்த கதை குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
Sorry, no posts matched your criteria.