India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக எம்.பிக்களை விமர்சித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர், அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது, அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிரதானுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகரிடம் முறையிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ரயிலுடன் 450 பயணிகள் கடத்தப்பட்டுள்ளனர். குவெட்டா- பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது. அப்போது ரயில் மீது துப்பாக்கியால் சுட்டு அதை நிறுத்தி சிலர் கடத்தியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) அமைப்பு, ரயிலை தாங்கள் கடத்தியுள்ளதாகவும், ராணுவம் தாக்கினால் பயணிகளை கொன்று விடுவோம் எனவும் எச்சரித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என மத்திய அமைச்சர் ஷோபா கூறியதையும், தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டதாக சாடிய அவர், NEP-ஐ ஏற்காமல் உரிமைக்கான போர்க்குரலைத் தொடர்ந்து எழுப்புவோம் என தெரிவித்துள்ளார்.
சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து பெற்று விட்டதாக சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. அப்போது, இன்ஸ்டாவில் இருந்து சாஹலின் போட்டோஸை தனஸ்ரீ Archive செய்திருந்தார். ஆனால், தற்போது அவர் மீண்டும் சாஹலுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். இதனை கவனித்த நெட்டிசன்கள், ‘அப்போ அவர்கள் பிரியவில்லையா’ எனக் கேட்கின்றனர். நேற்று, சாஹல் மற்றொரு பெண்ணுடன் இருக்கும் போட்டோஸ் வைரலானது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக இபிஎஸ்சை செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். எனினும், அண்மையில் இபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் காணொலி மூலம் பங்கேற்றார். இதனால் மோதல் தணிந்ததாக கூறப்பட்ட நிலையில், எஸ்பி வேலுமணி மகன் திருமண வரவேற்பில், இபிஎஸ் புறப்பட்டு சென்ற பிறகே செங்கோட்டையன் வந்தார். இதை சுட்டிக்காட்டி, இந்த மோதல் எப்போது ஓயுமோ என அதிமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
கங்குவா குறித்து மீண்டும் ஒரு பேட்டியில் ஜோதிகா பேசும் போது, ‘வெற்றி பெற்ற பல தரமில்லாத படங்களை பார்த்துள்ளேன். ஆனால், என் கணவரின் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக உணர்கிறேன். அப்படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்தனர். அப்படத்திற்கு வந்த விமர்சனங்கள் என்னைப் பாதித்தது. மீடியாக்கள் பாரபட்சமாக நடந்துகொண்டது வருத்தமாக இருந்தது’ என தெரிவித்தார்.
இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யாராவ் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருமணம் முடிந்த 2 மாதங்களிலேயே ரன்யாராவ் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் கணவர் ஜதின் ஹுக்கேரி குடும்பத்துடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவர் அளித்த புகாரின்பேரில் கண்காணித்து ரன்யாராவை டிஆர்ஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளைத் தான், பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் மத்திய அரசு ஏற்படுத்த போகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்ந்த மற்ற திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக நிதியை வழங்கி வருவதாகவும், பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதாக ஒப்புக் கொண்டு பின்வாங்கியதால் தான் நிதியை வழங்க முடியவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நகைக் கடைகளுக்கு செல்வோர் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம் இது. தங்க நகைகள் 24 காரட், 22 காரட், 18 காரட் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 24 காரட் என்பது 100% தங்கம். 22 காரட் என்பது 91.67% தங்கம், 8.33% நிக்கல், துத்தநாகம், வெள்ளி உள்ளிட்ட பிற உலோகங்கள் கலந்தது. இது 24 காரட்டை விட சற்று விலை குறைந்தது. 18 காரட் 75% தங்கம், 25% பிற உலோகங்கள் கலந்தது. இது 24 காரட், 22 காரட்டை விட விலை மலிவானது.
Sorry, no posts matched your criteria.