India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை மட்டும் ரூ.6,000 அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 2ஆம் கட்டமாக 1.40 லட்சம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் முடிவடையும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த கால அவகாசத்தை மத்திய அரசு வருகிற 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தத் தகவலைப் பகிருங்கள்.
எலான் மஸ்க் தலைமையிலான X தளம் இரண்டாவது நாளாக பழுதுடன் இயங்கி வருகிறது. இந்திய நேரப்படி, நேற்று மாலை உலகம் முழுவதும் முடங்கிய சமூக வலைதளமான X, சில மணி நேரங்களுக்குப் பின் மீண்டது. இந்நிலையில், மீண்டும் இன்று மதியம் முதல் இத்தளம் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். குறுஞ்செய்தி பகிர்வு தளமான X முடங்கியிருப்பது, செய்தி பரிமாற்றத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கனடா PM பதவியிலிருந்து விலகிய ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் இருந்து தனது சேரை தூக்கிச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. பதவிகாலம் முடிந்ததை குறிக்கும் வகையில், இது அந்நாட்டில் நடப்பது வழக்கமானதுதான். ஆனால் சேரை தூக்கிச் செல்கையில் ட்ரூடோ நக்கலாக நாக்கை துருத்தி காட்டியபடி சென்றதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இது வைரலாகும் நிலையில், என்னவொரு ஷாட் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காததை கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழ் மொழியை தாங்கள் வணங்குவதாகவும், தமிழக மக்களையும், அவர்களின் கலாசாரத்தை போற்றுவதாகவும் கூறினார்.
ஐபிஎல் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்க உள்ளது. டெல்லி அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. KL ராகுல், அக்சர் படேல் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கேப்டன் பொறுப்பு தனக்கு வேண்டாம் என அணி நிர்வாகத்திடம் KL ராகுல் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தற்போது அக்சர் படேல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானில் <<15724354>>பயணிகள் ரயில்<<>> கடத்தல் சம்பவத்தில் 11 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு பாதுகாப்புப் படைகளை பலுசிஸ்தான் மாகாண அரசு குவித்துள்ளதாகவும், விரைவில் பயணிகளை மீட்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ரயில் கடத்தலில் ஈடுபட்ட BLA, தனிநாடு கோரி ஆயுத போராட்டம் நடத்தி வருகிறது.
₹100 மற்றும் ₹200 மதிப்பு கொண்ட புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட இருப்பதாக RBI அறிவித்துள்ளது. காந்தி முகத்துடன் பழைய டிசைனிலேயே வெளியாக இருக்கும் இந்த ரூபாய் நோட்டுகளில் புதிய கவர்னரான சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெறவுள்ளது. பழைய கவர்னர் சக்தி காந்த தாஸின் கையொப்பத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் RBI அறிவித்துள்ளது.
2025ல் இதுவரை வெளியான 45 படங்களில் வெறும் 4 படங்களே ஹிட் அடித்துள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். ‘மதகஜராஜா’, ‘குடும்பஸ்தன்’, ‘விடாமுயற்சி’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களே அவை என அவர் கூறியுள்ளார். இதில் ‘விடாமுயற்சி’ கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாகவும், ‘டிராகன்’ மட்டுமே மெகா ஹிட் அடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதில் உங்கள் ஃபேவரேட் என்ன?
நமது நாட்டின் பெயரை பாரத் என்று தான் அழைக்க வேண்டும் என்ற RSS பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். இந்தியா என்பது ஆங்கில பெயர் என்றும், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள், பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட காலனித்துவப் பெயரான ‘இந்தியா’வை ஏன் இன்னும் பயன்படுத்துகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாரத் என பெயர் மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பிக்களை விமர்சித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர், அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது, அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிரதானுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகரிடம் முறையிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.