India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஜித்தின் 63வது படமான ‘குட் பேட் அக்லி’ வரும் ஏப்.10ல் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, பிரசன்னா, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
▶மார்ச்- 12 ▶மாசி – 28 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 AM – 01:30 AM ▶எமகண்டம்: 07:30 PM – 09:00 PM ▶குளிகை: 10:30 AM- 12:00 AM ▶திதி: சதுர்த்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம் ▶நட்சத்திரம் : மகம்.
வறுமை பலரின் கனவுகளுக்கு தடைக்கல்லாய் அமைகிறது. அதற்கு சிறந்த உதாரணம், பாகிஸ்தான் கால்பந்து வீரர் முகமது ரியாஸ். 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அணிக்காக விளையாடிய அவர், தற்போது வாழ்வாதாரத்திற்காக ஜிலேபி விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். பாக்-ல் கால்பந்திற்கு தடை விதிக்கப்பட்டதே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானுடன் இணைந்து வங்கதேச ராணுவத்தை கைப்பற்ற முயன்ற, அந்நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைசுர் ரஹ்மான் அரசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ராணுவ தளபதி வாக்கர்- உஷ்- ஜமானுக்கு எதிராக மண்டல அளவிலான தளபதிகளை ஒருங்கிணைக்க முயன்ற நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2 மாதங்களில் அவர் பல முறை பாகிஸ்தான் தூதர்களை சந்தித்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பெங்களூரில் பணமோசடியில் ஈடுபட்ட புகாரின் பேரில் பிரபல பெண் தொழிலதிபர் ஜீவாவை (33), தனது கஸ்டடியில் வைத்து பெண் டிஎஸ்பி கனகலட்சுமி விசாரித்துள்ளார். அப்போது, விசாரணை என்கிற பெயரில் ஜீவாவின் ஆடைகளை கனகலட்சுமி கழற்றினாராம். இதனால் அவமானமடைந்த ஜீவா, கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் அடிப்படையில், டிஎஸ்பி கனகலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கார் நிறுவனமான லம்போர்கினி, சில்வர் கிராஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான ஸ்ட்ரோலரை தயாரித்துள்ளது. சூப்பர் காரில் உள்ள பிரேக், சஸ்பென்ஷன், இருக்கை வசதிகள், கொசுவலை, மழை கவர் என நவீன வசதிகளுடன் ஸ்ட்ரோலரை உருவாக்கியுள்ளது. மொத்தமே 500 யூனிட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை வெறும் ₹4.3 லட்சம்தான்.
USA-வில் 62 ஆண்டுகளாக தலை ஒட்டி இரட்டையர்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் திருநம்பி. அவர் பெயர் ஜார்ஜ். இன்னொருவர் பெண். அவர் பெயர் லோரி. பிறக்கையில் ஜார்ஜ், பெண்ணாக பிறந்தாலும், 2007இல் திருநம்பியாக மாறினார். அதை லோரியிடம் பல ஆண்டுகள் மறைத்து வைத்து பிறகே வெளிப்படுத்தினார். தலை ஒட்டி எதிரெதிர் திசையில் முகங்கள் அமைந்துள்ளன. ஆபரேசன் மூலம் பிரிய வாய்ப்பு இருந்தும் மறுத்துவிட்டனர்.
US பொருட்கள் மீதான வரி குறைப்பை இந்தியா இன்னும் இறுதி செய்யவில்லை என மத்திய வர்த்தக செயலாளர் சுனில் தெரிவித்துள்ளார். வரி குறைப்புக்கு இந்தியா சம்மதித்துள்ளதாக டிரம்ப் கூறியதை மறுத்துள்ள அவர், இரு நாடுகளும் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார். எல்லை, பாதுகாப்பு காரணங்களால் கனடாவும், மெக்ஸிகோவும் USAவுக்கு அழுத்தம் கொடுக்கலாம், ஆனால் இந்தியாவின் நிலை வேறு எனவும் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் படம் வாடிவாசல். இதன் ஷூட்டிங் தாமதமாவது தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. படத்தின் திரைக்கதை பணிகள் முழுமையாக முடிவடையவில்லையாம். அதனை நிறைவு செய்த பின் இந்தாண்டு இறுதியில் ஷூட்டிங்கை தொடங்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். வாடிவாசல் பட இசைப் பணிகளை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறி இருந்தார்.
Sorry, no posts matched your criteria.